ஞாயிறு, 14 டிசம்பர், 2025

அமித்ஷா... அமைச்சனா அடாவடிச் சங்கிக் கும்பலின் தலைவனா?!

"நீதிபதி தீர்ப்புக் கொடுத்தார் என்பதற்காகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தனர். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்தது இல்லை”[https://x.com/ThanthiTV/status/1998758732935893216].

மேற்கண்டவாறு கொந்தளிந்திருப்பவன் ஒரு தனி மனிதன் அல்ல; பொறுப்புணர்வும், அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாக மதிக்கும் மனப்பக்குவமும், நிதானப் புத்தியும் இல்லாத, இந்த பரந்த பெரிய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

போகிறபோக்கில், “இது போன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை” என்று பேசியிருக்கிற இவருக்குக் கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும் அறிவு இருந்திருந்தால்.....

திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்ட அனைத்து மரபுகளையும் அலட்சியப்படுத்தி, அரசுத் தரப்பையும், கோயில் நிர்வாகத்தையும் விசாரிக்காமல், சங்கிகளுக்குச் சாதகமானதும் மனசாட்சிக்குப் புறம்பானதுமான ஒரு தீர்ப்பை இதற்கு முன்பு எந்தவொரு நீதிபதியும்[அநீதிபதி?]  வழங்கியதில்லை என்பதை இந்த நபர் அமைச்சர் புரிந்துகொண்டிருப்பார்; மேற்கண்டவாறு பேசியிருக்கமாட்டார்.

நீதிபதி சாமிநாதன் மட்டுமல்ல, அமித்ஷாவைப் போல் தான்தோன்றித்தனமாய், ஒரு நடுவணரசின் அமைச்சர் இதற்கு முன்பு இப்படி நடந்துகொண்டதில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

பல்வேறு இனங்களை உள்ளடக்கிய இந்த இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக்குக் கேடு விளைவிக்கும் அடாத செயலை, இந்தச் சங்கிகளின் தலைவன் அமித்ஷா தொடங்கி வைத்திருக்கிறார் என்று தயங்காமல் சொல்லலாம்.

இனியொரு சுதந்திரத்தைப் பெற்றிட, சங்கிகள் அல்லாத தன்மானத் தலைவர்கள், உடனடியாக ஒருங்கிணைந்து போராட வேண்டிய நேரம் இதுவோ என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.