எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

அண்ணாமலையாரே, முழுசும் புரியும்படி பேசித்தொலையுங்க தலைவரே!!!

“39 தொகுதிகளிலும் 99.9 சதவீதம் அங்குள்ள சாதிகளின் அடிப்படையில்தான் வேட்பாளர்களைப் போடப்பட்டிருக்கிறார்கள்.  அடுத்த ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை.  இத்தனை நாட்கள் யாரெல்லாம் ஒதுங்கி இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் உள்ளே வர ஆரம்பிப்பார்கள்.”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்[https://news7tamil] என்பது செய்தி.

39 தொகுதிகளிலும் 99.9 சதவீதம் அங்குள்ள சாதிகளின் அடிப்படையில்தான் வேட்பாளர்களைப் போடப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் த.நா.பா.ஜ.க. தலைவர். இது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

“இத்தனை நாட்கள் யாரெல்லாம் ஒதுங்கி இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் உள்ளே வர ஆரம்பிப்பார்கள்” என்றும் சொல்லியிருக்கிறார் தலைவர். ஏதாவது புரிகிறதா?

தலைவா, உரிய ஆதாரங்கள் இல்லாமலும், தப்புத்தப்பாகவும், மனம்போன போக்கில் பேசுகிற உம்மை, “உளறுவாயர்” என்று நக்கலடித்து ஊர் உலகமெல்லாம் சிரிக்கிறது.

இனியேனும் புரிகிற மாதிரி பேசுங்கள். அது இயலாது என்றால், உங்கள் தலைவர் மோடிஜியின் புகழ் பாடுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

* * * * *

https://news7tamil.live/i-did-not-come-as-the-candidate-of-coimbatore-i-came-as-the-state-president-of-bjp-annamalai-speech.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMw977_Ag&utm_content=rundown


தேர்தல் பரப்புரையில் மோடி சொன்னதும் சொல்ல மறந்ததும்!!

2024 தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான நரேந்திர மோடி, அதி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அவர் பேச்சு கிஞ்சித்தும் பொய் கலவாதது.

உண்மை மட்டுமே பேசுகிற அவர், சில நேரங்களில் உண்மைகளில் சிலவற்றைச் சொல்லிவிட்டு, சிலவற்றைச் சொல்ல மறந்துவிடுகிறார்.

சொன்னவற்றிற்கும் சொல்ல மறந்தனவற்றிற்கும் ஒரு சின்னஞ்சிறு[2 மட்டும்] பட்டியல்:

*இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் யாரும் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது” -இது அவர் சொன்னது. https://www.dinamani.com/india/2024/Apr/07/we-have-achieved-in-10-years-what-could-not-be-done-in-60-years-after-independence-pm-modi

“முழுக்க முழுக்க ஒரு இதிகாசக் கற்பனைப் பாத்திரமான ராமனுக்குக் கோடி கோடி கோடி ருபாய் செலவில் கோயில் கட்டியது முட்டாள்தனம். என்னைப் போல் ஒரு முட்டாள்தனத்தைச் செய்யத் தவறிய[பிரதிஷ்டையில் கலந்துகொள்ளாதது] பத்தரைமாற்றுப் பகுத்தறிவாளர்கள் ‘இந்தியக் கூட்டணியினர்’ என்பதை மறந்துவிடாதீர்கள்[அவர்களுக்கே வாக்களிக்கச் சொல்கிறார்] என்பது அவர் சொல்ல மறந்தது.

*“2014ஆம் ஆண்டுக்கு முன்பு... நாட்டின் சாமானிய மக்களில் பலர் குடிசை வீடுகளில் இருந்தனர், அல்லது வீடில்லாமல் இருந்தனர். ஏழைகள் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருந்தனர். ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனில் இடைத்தரகர்கள் பயனடைந்தனர். ஏழையின் மகனும், ஏழைகளின் சேவகனுமான நான் வறுமையில் வாழ்ந்திருக்கிறேன். நான் ஏழை மகன்; ஏழைகளின் சேவகன்...” -இது அவர் சொன்னது. https://www.hindutamil.in/news/india/1227268-cannot-forget-situation-of-country-before-2014-says-pm-modi.html

“இப்போது நான் ஏழையல்ல. ஆயிரக்கணக்கான ரூபாய் விலையில் தினம் தினம் ஆடை உடுக்கும் பணக்காரன். நான் இப்போது ஏழையின் மகனும் அல்ல; அம்பானி, அதானி போன்ற சில கோடீஸ்வரர்கள் என் மிக நெருங்கிய கூட்டாளிகள், அதாவது நண்பர்கள்” -என்பது அவர் சொல்ல மறந்தது.

* * * * *

மறவாதீர்! உண்மையே பேசும் மோடிக்கும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கும் மட்டுமே தேர்தலில்[2024] வாக்களியுங்கள்!