திருவள்ளுவருக்குச் சாதி, மதம், மொழி போன்ற எந்தவொரு குறுகிய அடையாளமும் கிடையாது. இது உலகறிந்த உண்மை.
ஆனால், இன்று கிண்டி[சென்னை]யில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘திருவள்ளுவர் திருநாள் விழா’ கொண்டாடப்படும் நிலையில், விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் படம்[போட்டோ] இடம்பெற்றுள்ளது.
காவி உடை மட்டுமின்றி, அவரின் நெற்றி நிறையத் திருநீறு பூசப்பட்டு, கழுத்தில் ருத்ரசாட்ச மாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது[இதற்கு முன்பு ஆளுநனாக இருந்த ஆர்.என்.ரவி இது போன்ற அடாவடித்தனங்களைச் செய்தது நினிவுகூரத்தக்கது*[https://tamil.oneindia.com].
ஆளுநனின் இந்த அயோக்கியத்தனத்துக்கு ‘வைகோ’ கண்டனம் தெரிவித்துள்ளார்[கீழே காணொலிகள் இடம்பெற்றுள்ளன]. கண்டனம் தெரிவித்த ‘வைக்கோ’வுக்கு நாம் நம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். முக்கியக் காரணங்கள்:
*‘வைகோ’ தன் கண்டன அறிக்கையில் ஒரே ஒரு ‘படு’தான் சேர்த்துள்ளார். இன்னும் பல ‘படு’க்களை[குறைந்தபட்சம் மூன்று ‘படு’க்கள்]ச் சேர்க்க ஏனோ மறந்துவிட்டார்.
*ஆளுநனைக் கண்டித்திருப்பது மட்டும் போதாது; தூண்டுதலாக உள்ள, மட்டமான மேல்மட்டத்தவர்களையும் கண்டித்திருக்க வேண்டும்.
*தான் மட்டுமே தனியராய்க் கண்டனம் தெரிவிப்பதால் கடுகளவும் பயன் விளையாது என்பதைப் புரிந்துகொண்டு, உண்மையான தமிழினப் பற்றுள்ள தலைவர்களுடனும் தமிழர்களுடனும் இணைந்து, வள்ளுவரை அவமதித்தவர்கள் மன்னிப்புக் கேட்கும்வரை போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிப்புச் செய்திருத்தல் வேண்டும்.
*நம் முதல்வர் ‘ஜோசப்’பு ஆளுநனுக்குக் கண்டனம் தெரிவிக்காமலிருந்தால்[பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை; பதவியேற்பைக்கூட தவிர்த்திருக்கலாம்], அவரையும் தன் கண்ட அறிக்கையில் சேர்த்திருத்தல் அவசியம்.
***அடியேனின் இந்தக் கண்டனப் பதிவால் தமிழ் நெஞ்சத்தவரான ‘வைகோ’ மனம் புண்பட்டிருந்தால், அதற்காகப் பெரிதும் வருந்துகிறோம்.
நன்றி ‘வைகோ’ அவர்களே.