சற்று முன்னர்[காலை 06.45] ‘சன்’ தொ.கா. வில் வெளியான செய்திகளில் கீழ்க்காண்பவையும் அடக்கம்.
செய்தி: “அம்மாவின் ஆட்சி[அருளாட்சி!!!] அமைய வருண பகவான் கருணை காட்டினார்” என்பது எடப்பாடியாரின் தேர்தல் பரப்புரைப் பேச்சு[நீலகிரி].
“ஆகாயத்தில் ‘மேக மூட்டம்’ இருந்தபோதும் மழை கொட்டோகொட்டுன்னு கொட்டாமல் பார்த்துக்கொண்டார் வருணபகவான்” என்கிறார் புரட்சித் தமிழன்[செய்த புரட்சிகளில் மூடத்தனம் வளர்ப்பதும் ஒன்று].
“அப்பா, எடப்பாடியப்பா, அம்மாவின் அருளாட்சி அப்புறம். முதலில் ‘அவன்கள்’க்கு அடிமைச் சேவகம் செய்வதிலிருந்து விடுபட்டு, மக்களையும் அடிமைகள் ஆக்கும் முயற்சியைக் கைவிடுங்கப்பா” என்பது நம் வேண்டுகோள்.
செய்தி: //‘திருப்பதியில் பிறமோற்சவ விழா’ தொடக்கம்//
அதென்ன ‘பிறமோற்சவம்? எத்தனைப் பேருக்கு இதன் அர்த்தம் தெரியும்? பக்தியின் பெயரால், யார் எதைச் சொன்னாலும் தலையாட்டித் தரையில் விழுந்து கும்பிடுவதை எப்போது நிறுத்தப்போகிறார்கள் நம் பக்தக்கோடிகள்?
இவர்கள் முட்டாள்களாகவே வாழ்ந்து செத்துத் தொலையட்டும். இவர்களின் வாரிசுகளாவது உருப்பட வேண்டாமா?
தினமும் இது போன்ற ஆன்மிகச் செய்திகளை வெளியிட்டு[வெளிடச்சொல்லி விண்ணப்பம் அளித்தார்களா பொதுமக்கள்?] ஆன்மிகம் வளர்க்கப்போகிறதாம் ‘சன்’. காலை என்ன 24 மணி நேரமும் ஆன்மிகம் வளர்க்கலாம். வளர்த்தால், ஆன்மிகம் வளர்கிறதோ அல்லவோ போலிப் பகுத்தறிவுவாதிகளான அவர்கள்[மாறனின் புதல்வர்கள்] வளர்வார்கள்.
செய்தி: தென்காசிப் பக்கமுள்ள ஓர் ஊரில் திருவிழா. 10000 பக்தர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு 21 ஆயிரம் பொடி தோசைகள்[கடந்த ஆண்டு புரோட்டா] வழங்கப்பட்டன.
அடுத்த ஆண்டு பூரியா, சப்பாத்தியா?
வாய்க்கு ருசியாகச் சாப்பிடக் கொடுத்துப் பக்தி வளர்க்கிறார்கள்! ஹி... ஹி... ஹி!!!