திங்கள், 15 டிசம்பர், 2025

“குன்றில் தீபம் ஏற்றுவோம்”... சங்கிகளின் ‘டி-ஷர்ட்’க்கு ஒரு மாற்று!!!

//திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவை ஒட்டி, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்[தர்கா அருகே> நில அளவைக் கல்] கார்த்திகைத் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் நடத்திவரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. அவர்கள் 'குன்றில் தீபம் ஏற்றுவோம்' என்ற வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்தும், சமூக வலைதளங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்தும் வருவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது//[https://tamil.indianexpress.com/tamilnadu/kunril-deepam-yetruvom-campaign-intensifies-protest-demands-deepam-lighting-on-thiruparankundram-hill-10909377].

குன்றில் தீபம் ஏற்றுவதற்கு, ’டி-ஷர்ட்’ களில் வாசகம்[“குன்றில் தீபம் ஏற்றுவோம்”] எழுதி மக்களிடையே வலம் வருவது மிக மிக மிக அற்புதமான வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

இதன் விளைவாக, மதுரை மக்கள் அனைவருமே மேற்கண்ட வாசகம் பொறித்த டி-ஷர்ட்டுகளை அணிந்து, மலையில் தீபம் ஏற்ற வருவார்கள் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

மதுரை மக்கள் மட்டுமல்ல, உலக மக்களில் பலரையும் தீபம் ஏற்ற வரவழைப்பதற்கான ஆகச் சிறந்த வழி ஒன்றும் உள்ளது. அது.....

‘டி-ஷர்ட்’ என்றில்லை, ஆடையே இல்லாமல் உடம்பு முழுக்க, “குன்றில் தீபம் ஏற்றுவோம்” என்ற வாசகத்தை அழுத்தம் திருத்தமாக எழுதி, காணொலியில் பிறந்தமேனியாய்க் காட்சியளித்துப் பரப்புரை செய்வது!

ஹி... ஹி... ஹி!!!