சனி, 29 ஆகஸ்ட், 2026

அடிமை அமைச்சருக்கு அமுத முத்தம் தருவாரா முதல்வர் ஜோசப்?!

“சட்டசபையில் முதலமைச்சர் விஜய் என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாகத் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது” என்றார் அமைச்சர் செங்கோட்டையன்[நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்> https://www.maalaimalar.com].

செங்கோட்டையன் ஒரு மனிதன். ஜோசப்பும் மனிதன்தான்{அதிர்ஷ்டத்தால்[?] முதல்வர் ஆன வெகு சாதாரண மனிதன்}. ஒரு மனிதன் இன்னொருவன் பக்கத்தில் அமர்ந்தது சட்டமன்றத்தில் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தியது எப்படி?

ஜோசப்பு[சட்டமன்றத்தைக் கிறிஸ்தவப் பிரச்சாரக் களம் ஆக்கியவர்] வெறும் மனிதப் பிறவியல்ல; மானுட இனத்தை உய்விக்கக் கர்த்தரால் அனுப்பப்பட்ட புனிதர் என்பதாலோ?

புனிதர் பக்கத்தில் அமர்ந்ததே உற்சாகப்படுத்தும் என்றால், அவர் செ.ஐயனாரை இறுகக் கட்டியணைத்து, இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அமுத முத்தங்கள் பதித்திருந்தால் அனைவரும் மெய்சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைந்திருப்பார்களோ?

பதவி சுகத்துக்காக, ஜோசப் முன்னிலையில் ஓர் அடிமையாகத் தலை தாழ்த்திக் குனிந்து கைகட்டிப் பணிவு காட்டும் இவர், அவரைத் தனிமையில் சந்திக்கும்போது, அவரின் திருவடிகளைப் புனித நீரால் கழுவி வழிபாடு நிகழ்த்துவாரோ?

திருச்செங்கோடு மலையில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலிக்கிற அந்தச் செங்கோட்டையன்[அர்த்தநாரி ஈஸ்வரன்] அல்லாமல் வேறு யார் இதை அறிவார்?

https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale

சமர்ப்பணம்: டமிலன்ஸ்!!!

                                          மனைவியை ஒய்ஃப் என்றோம்.

வாழ்க்கையை லைஃப் என்றோம்.

கத்தியை நைஃப் என்றோம்.

புத்தியைப் புதைத்தே நின்றோம் !

அத்தையை ஆன்ட்டி என்றோம்.

அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.

கடமையை டுயூட்டி என்றோம்.

காதலியைப் பியூட்டி என்றோம்!

காதலை லவ்வென்றோம்.

பசுவைக் கவ்வென்றோம்.

ரசிப்பதை “வாவ்” என்றோம்.

வாய் பிளப்பதை ‘அவ்’ என்றோம்

முத்தத்தைக் கிஸ் என்றோம்.

பேருந்தைப் பஸ் என்றோம்.

அளவைச் சைஸ் என்றோம்.

அழகை நைஸ் என்றோம் !

மன்னிப்பைச் சாரி என்றோம்.

புடவையைச் சேரி என்றோம்.

ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம்.

தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!

மடையனை லூசு என்றோம்.

வாய்ப்பைச் சான்சு என்றோம்.

மோகத்தை ரொமான்ஸ் என்றோம்.

தமிழை அறவே மறந்தோம்!
***********
நன்றி: MAM Media & Marketing
***********

சமர்ப்பணம்> சமஸ்கிருதம்.
தமிழ்?
படையல், காணிக்கை, ஒப்படைப்பு.