புதன், 22 ஜூலை, 2026

புனித நீரால் அபிஷேகங்கள்! புனித நெருப்பு அபிஷேகம் எப்போது???

நீரைப் பொருத்தவரை, 'சுத்த நீர்', 'அசுத்த நீர்', 'குளிர்ந்த நீர்', 'சுடு நீர்' என்றெல்லாம் பாகுபாடு செய்யலாம்.

இவை தவிர, ஒட்டுமொத்த உலகிலும் 'புனித நீர்', என்று  எதுவும் இல்லை[புரியக்கூடிய வகையில் இதற்கு விளக்கம் தந்தவர் எவருமில்லை]. அறிவியலால் ஆராய்ந்து அறியப்பட்ட உண்மை இது.

அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களுமே கடவுளால் படைக்கப்பட்டவை என்கிறார்கள். இவற்றில் நீருக்குள் மட்டும் கடவுள் புனிதத்தை ஏற்றினாரா? காற்றும், நெருப்பும், மண்ணும் பிறவும் புனிதமற்றவையா?

சாமிகளுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்தும்போது, ஆற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட[சாக்கடை நீரும் கழிவுகளும் கலந்தது] நீரை மட்டும், மந்திரங்கள் ஓதிக் கோபுரக்  கலசங்களின்[+சிலைகள்] மீது கொட்டினால் அவை புனிதம் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்; மக்களும் நம்புகிறார்கள்.

இது நம்பத்தகுந்தது என்றால், கலசங்கள் மீது[+சிலைகள்] புனிதமான நெருப்புத் துண்டங்களைக் கொட்டியோ[தீபாராதனை அபிஷேகம் அல்ல], புனிதமான மண்ணைக் கலசங்கள்[+சிலைகள்] மீது தூவியோ அபிஷேகம் செய்வதில்லையே ஏன்?[புனிதரான கடவுளால் படைக்கப்பட்டவை எல்லாமே புனிதமானவைதானே?] 

மந்திரம் சொல்லும் தந்திரசாலிகளும், அவர்களைச் சாமிகளின் பிரதிநிதிகளென நம்பும் புத்தியில்லாத பக்தர்களும் பதில் சொல்வார்களா?