மனித மூளையில் சிந்திக்கும் திறனை அதிகரிப்பது முக்கிய நரம்புக்கடத்தியான(neurotransmitter) டோபமைன்(Dopamine) ஆகும். இது ஒரு ஹார்மோனாகவும் செயல்பட்டு, புதியனவற்றைக் கற்பதற்கும், சாதனைகள் நிகழ்த்துவதற்கும் ஆன உந்துசக்தியையும் அளிக்கிறது.
இதை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சி: ஓடுதல், மெதுவோட்டம்[ஜாகிங்> Jogging), எடை தூக்குதல், நடனம், மூச்சுப் பயிற்சி,
சூரிய ஒளியில் காய்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் போன்றவை. இப்பயிற்சிகள் மூளையில் டோபமைன், எண்டார்பின் ஆகியவற்றின் அளவை வேகமாக உயர்த்துகின்றன.
மனப்பயிற்சி: பிடித்த பாடல்களைக் கேட்பது; ஓவியம் வரைவது போன்ற பிடித்தமான கலைகளில் ஈடுபாடு கொள்வது; எந்தவொரு செயலையும் மகிழ்ச்சியுடன் செய்வது; செய்த பின் மனநிறைவு பெறுவது.
உணவுகள்:
புரதச் சத்து நிறைந்த முட்டை, பால் பொருட்கள், பாதாம், கோழி இறைச்சி, மீன், வாழைப்பழம், சோயா பொருட்கள், பீன்ஸ் வகைகள், புளித்த மோர், தயிர் வகைகள்.
***உதவி: இணையம்
