வெள்ளி, 26 ஜூன், 2026

முழுமுதல் கடவுள் ஆனார் முதல்வர் ஜோசப்!!!

[குறிப்பிட்ட ஒரு நபர் குறித்து அடுத்தடுத்துப் பதிவுகள் எழுத நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்]
டவுள் என்று ஒருவர் இருப்பதை ஐம்புலன்களாலும் ஆறாவது அறிவாலும் எவரும் உணர்ந்ததில்லை; உணர்த்தியதும் இல்லை.

ஆனாலும் ‘அவரொருவர் இருப்பதாக மக்கள் அன்று நம்பினார்கள்; இன்றும் நம்புகிறார்கள். 

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஜோசப் விஜய்தான் அந்தக் கடவுள்[மாரியம்மன் சிலையைத் தூக்கிக் கடாசியிருக்கலாம்] என்பதை, ஒட்டுமொத்த உலகமும் அறிந்து உணரச் செய்த, நாமக்கல் ‘த,வெ.க.’வினருக்கு நம் கோடானுகோடி நன்றிகள்.

ஊர் தவறாமல் பெரிய பெரிய கோயில்கள் எழுப்பி, ஜோசப் கடவுளை அங்கெல்லாம் குடியேற்றி, கும்பாபிஷேகம், பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தன அபிஷேகம், குங்கும அபிஷேகம் எல்லாம் நடத்தி, அந்த ஜோசப் கடவுளின் புகழ் பரப்புமாறு, அவரின் பின்னோடிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் பக்தக்கோடிகளிடமும் வேண்டுகோள் வைக்கிறோம்.

ஜோசப் போற்றி! அவரின் திருவடிகள் போற்றி!! போற்றி!!!

பேருந்துத் தொடக்க விழாவும் மக்களைப் பெருந்துயரில் ஆழ்த்திய முதல்வர் ஜோசப்பும்!

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்காகப் புதிதாக வாங்கப்பட்ட 300 டீசல் & சிஎன்ஜி (CNG) பேருந்துகளைத் தமிழக முதல்வர் சி. விஜய் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இது மாநிலத்தின் பொதுப் போக்குவரத்து வாகனத் தொகுப்பில் ஒரு முக்கியச் சேர்க்கையாகும்.

இந்தத் தொடக்க நிகழ்வின் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவர் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்தவாறு காணொளி ஒன்றையும் பதிவு செய்தார். [https://www.msn.com/en-in/news/india/watch-superstar-cm-vijay-takes-bus-ride-after-launching-300-new-tnstc-buses-in-chennai/ar-AA26v0fl?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6a3dd11b62954956baa2865e10d18ebd&ei=14]

பேருந்தை அவரே[ஜோசப்] இயக்கி[வழக்கம்போல்] நம் மக்களைப் பேரானந்தப் பேராழி[கடல்]யில் குளித்துப் பெரும்பேரின்பத்தில் திளைக்கச் செய்வார் என்று எதிர்பார்த்தோம்.

ஏமாற்றமே மிஞ்சியது.

வருந்துகிறோம் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் ஜோசப் அவர்களே!