சனி, 1 ஜூலை, 2017

‘அது’ விசயத்தில் தமிழன் ‘ஏறத்தாழ’ யோக்கியன்!

‘அது’ எது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழ்வரும், எழுத்தாளர் சுஜாதா எழுதிய[1976] ‘கணையாழியின் கடைசிப் பக்கக் கட்டுரை’யைப் படியுங்கள்!
#சமீபத்தில் சென்னை  சென்றிருந்தபோது கடைகளில் தொங்கிய, ‘முத்தம்’, ‘பருவம்’, ‘தில்குஷ் மோகினி’ போன்ற, முன்பக்கமும் ஸ்டேப்பில் அடித்த பத்திரிகைகளில் சிலவற்றை ஆராய்ந்தேன்.

ம்ஹூம்! ஜாக்கெட்டில் பட்டன்களை அவிழ்ப்பதோடு நின்றுவிடுகிறது.

உண்மையான போர்னோ எழுதுவதற்கு ஒரு திறமை வேண்டும். அமெரிக்கர்களை இதில் மிஞ்ச முடியாது. ஃபிலிப் ராத், வானர்காட் போன்றவர்களைத் தனிப்பட்டுக் குறிப்பிடலாம்.

தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப் பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய்விடுகிறது. 

திருக்குறளில் காமத்துப்பாலில் சில வரிகள் பளிச்சிடுகின்றன. இருந்தும் வள்ளுவரின் காமத்தில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுகள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே.

தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்[out of proportion] கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக் குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்.

அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

‘அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின்னர் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள.....’

மேலே திருப்புகழில் தேடிக்கொள்ளவும்.

சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பதங்கள் என்று தேவதாசிகளுக்கான நடனப் பாடல்கள் ராகதாளத்துடன் நிறைய எழுதப்பட்டன. இவைகளில் எல்லாம் கண்ணனின் லீலைகளை விஸ்தாரமாக வர்ணித்து, ‘அவன் இப்படிச் செய்தான். இங்கே கடித்தான். சகியே அவனைக் கூட்டிவா.....பசலை!’ என்ற ரீதியில் எழுதப்பட்ட அந்தப் பாடல்களை எவரும் படித்ததாகத் தெரியவில்லை.

சில அந்தரங்க சபைகளில் நடனமாடியிருக்கலாம். பக்தியும் போர்னோவும் கலக்கும் வினோதம் இந்திய இலக்கியத்தின் தனிப்பட்ட அம்சம். இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம் போர்னோ கிடையாது.

பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனில் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள்தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை.

புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றவர்கள் தலை வைத்துப் படுக்கவில்லை. ஏன் நம் புதுக்கவிஞர்களும் புது எழுத்தாளர்களும்கூட ஜகா வாங்கியிருக்கிறார்கள்.

செக்ஸை நேராகச் சொல்வதில் ஏனோ எல்லாருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது.

‘மார்பகம் விம்மி விம்மித் தணிந்தது....’ அப்புறம் என்னடா என்றால் ‘இருவரும் இருளில் மறைந்தார்கள்!’..... ஏன் மறைய வேண்டும்?#
-------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி: ‘கணையாழியின் கடைசி பக்கங்கள்’; குமரிப் பதிப்பகம்[மிகப் பழைய புத்தகம். சில முன்பக்கத் தாள்கள் இற்று உதிர்ந்துவிட்டன!!].

=====================================================================




10 கருத்துகள்:

  1. சங்ககாலம் தொட்டு இந்த தங்ககாலம் வரை காமத்தை வித விதமாய் விவரித்துதான் வருகிறார்கள்.
    யூட்யூப்பில் எல்லாம் இருக்கிறது பள்ளி பாடத்தில் விரைவில் வந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தங்க காலம்//...அருமையான சொல்லாட்சி!

      //பள்ளிப் பாடத்தில் விரைவில் வந்துவிடும்// பயமுறுத்துகிறீகளே கில்லர்ஜி!

      நன்றி.

      நீக்கு
  2. 'அது' எது என்று புரிந்தது. மன்மதக் கலை என்பது சாதாரணமானது அல்ல. அதில் பலநூறு விஷயங்கள் உண்டு. அதனை கவிஞர்கள், எழுத்தாளர்கள் சரிவர கையாளவில்லை என்கிற சுஜாதாவின் ஆதங்கம் நியாயமே..!

    வைரமுத்துவின் சிலபல வரிகள் 'அது' குறித்து பேசியது.... என்றாலும் போதாது :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதில் பலநூறு விஷயங்கள் உண்டு//

      உண்மை...உண்மை.

      உரிய தருணத்தில் முறையாக இவற்றைக் கற்றறிதல் இன்றியமையாத் தேவை. உடலுறவில் இருபாலரும் மனநிறைவு பெறுவதற்கு இது பெரிதும் உதவும்; மன[ண]முறிவு எண்ணிக்கை குறைந்திடவும் வாய்ப்புள்ளது.

      நன்றி றஜீவன்.

      நீக்கு
  3. உலகுக்கே பாலியல் கல்வி சொல்லிக்கொடுக்க காமசூத்திரமும், கோவிலில் சிலையாய் வடித்து தனது இல்லத்தில் செயல்படுத்தி வாழ்ந்த தமிழன் இணையத்தில் தேடி சீரழியுறாங்க.

    காமத்தை பத்தி பேசினாலே தப்புன்னு ஆகிப்போச்சுப்பா. முறையற்ற காமம்தான் தப்பே தவிர காமமே தப்பில்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது முறையற்றது, எது முறையானது என்பதே பலருக்குத் தெரியல.

      நன்றி ராஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. குறளுக்கு உரை எழுதியவர். ஏன் இப்படிச் சொன்னார்?

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. இவ்வளவு ஆதங்கப் பட்ட சுஜாதாவே ,அந்த குறையைத் தீர்த்து வைத்திருக்கலாமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்த்திருக்கலாம். 70வயதில் போய்ச்சேர்ந்துவிட்டாரே!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு