எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தமிழ் வளருது... வளருது! மோடியால் வளருது!!

 


பிரதமர் மோடி சிலை

Government & Politics

ண்ணாமலையாரின்[பாஜக] நடைப்பயணத்தில், ‘மோடி’யாரின் ஊர்ந்து செல்லும் பிரமாண்ட சிலை, சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்கும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம்.


‘மோடி உருவச்சிலை எழுந்து நிற்பது போன்றும், தலையை இரு பக்கமும் திருப்பிப் பார்த்துக் கையை அசைப்பது போன்றும் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. அந்தச் சமயத்தில் பிரதமர் மோடியின் இந்தி உரை ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது’ன்பது சில மணி நேரங்களுக்கு முன்னரான செய்தி[https://www.vikatan.com/government-and-politics/politics/modi-statue-in-annamalai-kanniyakumari-walk]


மோடிஜி, உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தன் உடம்பைக் கட்டாக வைத்திருக்கிறார் என்பது உலகறிந்த செய்தி.


உலக அளவில் உலா செல்லும் இடங்களில் எல்லாம், “தமிழ் மிகப் பழமையானதொரு மொழி; மிக மிக மிக மிக மிகச் சுவையான தேனினும் இனிய மொழி; இதை நான் என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்’ என்பதுபோல் தமிழுக்குப் புகழ்மாலை சூட்டவும் அவர் தவறுவதே இல்லை.


இப்படிப் பேசிப் பேசிப் பேசியே அத்தனைத் தமிழர்களின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டுள்ளார் என்பது நாமனைவரும் அறிந்ததே[நீங்கள் எப்படியோ, அடுத்த தேர்தலில் என் வாக்கு ‘பாஜக’வுக்குத்தான்].


இப்போது மேற்கண்ட செய்தியின் கடைசி வரியை மீண்டும் வாசியுங்கள்.


வாசிப்பின் மூலம், அவரின் இந்தி உரை ஒலிபரப்பாகும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து[இது தமிழ்நாடு என்பதால், தமிழில் “வணக்கம்” சொல்லி ஆங்கிலத்தில் பேசுவதாக, சிலையை வடிவமைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள்] பேரதிர்ச்சிக்கு உள்ளாகாதீர்.


காரணம், தமிழின் மீது மோடி கொண்டுள்ள பற்று கிஞ்சித்தும் கறைபடியாதது.


அவர் இந்தியில் உரையாற்றுவதுபோல் சிலை கட்டமைக்கப்பட்டிருப்பது…..


நடுவணரசில் தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பதால் மனம் நொந்துபோன, தலைவர் அண்ணாமலையாரின் ‘உள்குத்து’ வேலை இது என்பதை அறிவீராக!


வாழ்க மோடி! ‘என்றுமுள தமிழ்’ போல வாழ்க!!

அவரு[னு]க்கு நன்றி சொல்வதா, சாபம் கொடுப்பதா?!

பிறந்ததிலிருந்து, சிசுவில் இருக்கும் உறுப்புகள் படிப்படியாக வளர்வதும், கூடுதல் உறுப்புகள் இணைவதுமாக நம் உடம்பு வளர்ச்சியடைகிறது.

சிந்திக்க உதவுகிற மூளையும் வளர்கிறது.

வளர்தல் என்பது இயல்பானது; நம் ‘விருப்பம்’ காரணமாகவோ வேண்டிக்கொண்டதாலோ நிகழ்வது அல்ல.

ஆளாளுக்குக் கூடக் குறைய என்றிருந்தாலும் வளர்வது தொடர்கிறது.

ஒரு கட்டத்தில், வளர்வது தடைபட்டு, தேய்வதும் அழிவதும் ஆரம்பமாகின்றன. வாழ்க்கைச் சூழல், வாழும் முறை போன்றவற்றால், அவை வித்தியாசப்படலாம்.

ஆனால்.....

ஏதோவொரு வயதில், அல்லது, மனிதர்களுக்கான அதிகபட்ச வயதைத் தொட்டுவிட்ட நிலையில் முற்றாய் அழிந்துபோகிறோம்.

உடல் மட்டுமல்லாமல், நாம் பெற்றிருந்த அறிவுடன், அன்பு, பற்று, பாசம், நேசம், காதல், காமம் என்று அத்தனை உணர்வுகளும் இல்லாமல் போகின்றன.

பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடிக்கும் இம்மண்ணில் நாம் விட்டுச் செல்லும் நமக்கான அடையாளம் எதுவுமே இல்லை.

விரும்பினால்.....

எதிர்பால் நபரொருவரைத் துணைசேர்த்து, வாரிசையோ வாரிசுகளையோ பெற்றுப் போட்டுவிட்டுச் செத்தொழியலாம்.

இதுதானே வழ்க்கை!

கடவுள் இருப்பது உண்மையானால், இப்படி நம்மை வாழப் பணித்ததற்காக அவருக்கு நன்றி சொல்வதா, அல்லது, அவனுக்கு “நாசமாப் போ” என்று சாபம் கொடுப்பதா?


***சங்ககாலத் தமிழர்கள் சிறந்த சிந்தனையாளர்கள். இப்போது போல அப்போது மூடர்களின் ஆதிக்கம் இல்லை!

“ஓர் இல்லத்தில் மகிழ்ச்சி ஆரவாரம். இன்னொன்றில் அழுகைக் குரல் ஒலிக்கும் அவலம். படைத்தவன்[கடவுள்] கிஞ்சித்தும் பண்பில்லாதவன்” -புறநானூறு[பாடல் 194]ப் பாடலொன்றின் உட்கருத்து இது.