எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 16 அக்டோபர், 2023

இஸ்லாமியர்-யூதர் போரில் ‘இறுதி வெற்றி’ யாருக்கு?!

‘தமிழ்ச்சரம்’ திரட்டியில் இடம்பெற்றுள்ள கீழ்க்காணும்* பதிவைச் சற்று முன்னர் வாசிக்க நேர்ந்தது.

நிகழ்ந்துகொண்டிருக்கும் ‘இஸ்லாம்[ஹமாஸ்]-இஸ்ரேல்[யூதர்] போரில் இரு தரப்பிலும் ஏற்பட்ட, ஏராளமான உயிர்ச்சேதம்&பொருட்சேதம் பற்றிய விவரங்களை ஊடகங்கள் பலவும் வெளியிட்டுவருகின்றன.

உறவுகளை இழந்து பரிதவிப்போர், உடலுறுப்புகள் சிதைந்து உரிய சிகிச்சைக்கு வழியில்லாமல் சாவோடு போராடுவோர், பெற்றவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி மடிய, அனாதைகளாகி அழுது சோரும் சிறார்கள் என்றிவர்களுக்காகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அத்தனைப் பேர்களுக்காகவும்  மனிதநேயம் போற்றுவோர் மனம் வருந்துகிறார்கள்; வாய்ப்பு நேரும்போது தம்மாலான உதவிகளைச் செய்யவும் காத்திருக்கிறார்கள்.

அந்த நல்ல உள்ளங்கள், மத பேதங்களையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

அவர்கள் மனிதர்களை மனிதர்களாக நேசிப்பவர்கள்.

அவர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

அவர்களில் பலரும் கீழ்க்காணும் பதிவை வாசித்திருக்கக்கூடும்.

*இறுதி வெற்றி முஸ்லிம்களுடையதே

பலஸ்தீன முஸ்லிம்களிடமும் ஈமானும், இறை நம்பிக்கையும், வீரமும் உண்டு. காசாவின் சேதங்கள், சோகங்களை தந்தாலும் இறுதி வெற்றி முஸ்லிம்களுடையதே.