தை மாத அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீட்டுக்கு வந்துசேர்ந்த பிறகு கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை. அந்த விளைபொருட்கள்தான் ஓர் ஆண்டுக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கின்றன. அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்குத்தான் வீடுகளுக்குக் காப்புக் கட்டுவதாகச் சொல்கிறார்கள்.
இதற்கு வேப்பிலை, சங்கராந்திப் பூடு, ஆவாரம் பூக்கொத்து ஆகியவற்றின் தொகுப்பு வீடுகளின் முகப்பில் காட்சிக்கு[காவலுக்கு?] வைக்கப்படுகின்றன.
”நம்மவர்களால்[தமிழர்கள்] பாரம்பரியமாக இது செய்யப்படுவதால் இதைப் புத்திசாலித்தனமான செயல் என்று ஏற்க இயலாது. மேற்கண்ட மூன்று பொருட்களுக்கும் பண்டம் கெட்டுப்போகாமலிருப்பதற்கும் தொடர்பு ஏதுமில்லை. தமிழர்கள் தூக்கிச் சுமக்கும் மூடநம்பிக்கை[திணிக்கப்பட்டது> மகர சங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை]களில் இதுவும் ஒன்று” என்கிறார் என் நெருங்கிய நண்பர் ஒருவர்.
மேலும், காப்புக்கட்டு அன்று[14.01.2026], மேற்கண்ட முப்பொருள்களின் தொகுப்பைத் தன் கழுத்தில் தொங்கவிட்டுத் தெருத்தெருவாகச் சுற்றிவந்தார்.
இதை வேடிக்கை பார்த்து, கமுக்கமாகப் பலர் சிரிக்க, நெருங்கிவந்து விசாரித்தவர்களிடம், “வீட்டிலுள்ள அறுவடை செய்யப்பட்ட உணவுப் பொருள் கெட்டுப்போகாமலிருக்க வீடுகளில் கட்டுற மாதிரி, சில நாட்களேனும் என் மனசு கெடாமலிருக்கக் ‘காப்புக்கட்டு’ கட்டியிருக்கேன். இது முட்டாள்தனம்னா, வீடு, மிதிவண்டி, பைக், கார் போன்ற வாகனங்களுக்கும் கட்டுவது இதைவிடவும் பல மடங்கு முட்டாள்தனமானது. தைப் பொங்கல் கொண்டாடுவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. தமிழனை முட்டாள் ஆக்குவதற்காகவே நம் இனத் துரோகிகள் வலிந்து திணித்தது இந்த வழக்கம்” என்று ஒரு குட்டிச் சொற்பொழிவு நிகழ்த்தி அவர்களைத் திகைக்க வைத்தார்.
இன்றுதான் அவரின் கழுத்தில் ‘காப்புக்கட்டு’ தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனிக்க நேர்ந்தது. படம் எடுத்து[படத்தில் முகம் தெரியக்கூடாது என்பது அவர் விதித்த கட்டுப்பாடு] வெளியிட்டிருக்கிறேன்.
====================அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து, தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.
பொங்கலிடுவதற்கு முன்னர் "காப்புக்கட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில் வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள்//
=================
இதற்கு எதற்கு ஒரு பண்டிகை?!
//போகி என்ற சொல் சமஸ்கிருதத்தின் போக அல்லது போக்ய என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் – அனுபவம், செல்வம், வளம் என்பதாகும். மேலும், பழைய துன்பங்கள், சோம்பல், துக்கங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து> பழைய பொருட்களை எரிப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?], புதிய நம்பிக்கைகளுடன் வாழ்க்கையைத் தொடங்கும் நாளாகவும்[மற்ற நாட்களில் இந்த நம்பிக்கைகள் தேவையில்லையா?] போகி கருதப்படுகிறது//

