புதன், 6 மே, 2026

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ‘வடக்கன் ராகுல் காந்தி’யின் ஆதிக்கம்!!!

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் முயற்சியில் ‘தவெக’ தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.

கூடுதலாகத் தேவைப்படும் 11 உறுப்பினர்களைப் பெறுவது எப்படிச் சாத்தியமாகும்[இது குறித்த கவலை நமக்கில்லை] என்பது குறித்துப் பலதரப்பட்ட அரசியல் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துவரும் நிலையில்.....

விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து, கிரிஸ் சோடங்கர்[வடக்கன்] அறிவிப்பார்’ என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சொல்லிக்கொண்டிருக்கிறார்[செய்தி].

தமிழ்நாடு ‘பாஜக’வைப் பொருத்தவரை வடக்கன்களே[மோடி, அமித்ஷா.....] ஆதிக்கம் செலுத்துவது போல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகையை[“ராகுலின் முடிவே எங்கள் முடிவு”> அடிமை செல்வப் பெருந்தகை] முற்றிலுமாய் ஓரங்கட்டி, கிரிஸ் சோடங்கர், மல்லிகார்ஜுன் கார்கே போன்றவர்கள் மூலம் வடக்கன்  ராகுல்காந்தி ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது தமிழராய்ப் பிறந்த அத்தனைப் பேருக்கும் தலைக் குனிவை ஏற்படுத்துகிறது.

‘பாஜக’வோ காங்கிரஸ்ஸோ கட்சி எதுவாயினும், தலைமை வகிக்கும் தமிழினத் தலைவர்கள் வடக்கன்களின் அடிமைகள் என்னும் அவல நிலையிலிருந்து மீள்வது எப்போது?

எப்போது? எப்போது? எப்போது?