வியாழன், 29 அக்டோபர், 2026

‘பேராசை பேரிழப்பு’... மறவற்க முதல்வர் ஜோசப் அவர்களே!

சற்றும் எதிர்பாராமல் தமிழ்நாட்டின் ‘முதல்வர்’ என்னும் உயர்பதவி கிடைத்ததோ இல்லையோ, மேலும் மேலும் மேலும் புகழ் ஈட்டி, உலக அளவில் ‘நம்பர் 1’ பிரபலம் ஆக வேண்டும் என்னும் ஆசைக்கு அடிமையாகிவிட்டார் நம்மவர் ஜோசப் என்பதை மேற்கண்ட காணொலிகள் உறுதிப்படுத்துகின்றன.

காணொலி நிகழ்ச்சிகள் இயல்பாகவே நடைபெற்றனவா, ஜோசப்பின் ஆயுட்காலக் கொத்தடிமைகளால் ஏற்பாடு செய்யப்பட்டனவா என்னும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

உலகின் ஈடு இணையற்றதொரு தலைவராகி, அனைத்து நாடுகளையும்[குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, ரசியா போன்றவை] தன் பிரதிநிதிகள் மூலம் கட்டி ஆளப்போகிறாரா[ஆங்கிலேயன் ஆண்டது போல] ஜோசப்?

‘பேராசை பேரிழப்பு’ என்னும் முன்னோர் மொழியை நம் தரணி புகழும் தலைவர் ஜோசப் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.