எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 30 ஆகஸ்ட், 2025

சல்லாபச் சாமியார் ‘ஜக்கி’யும் சிந்திக்கத் தெரியாத அப்பாவிப் பக்தர்களும்!!!

த்குரு[சத்துக்குரு ஜக்கி] புனிதக் கைலாய யாத்திரையை நிறைவு செய்து இன்று(29/08/2025) தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விக்குச் சத்குரு பதிலளிக்கையில், “மூளை அறுவைச் சிகிச்சைக்குப்[ஜக்கிக்கு 2 முறை மூளை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன> இரண்டாவது சிகிச்சை எப்போது எங்கே நடந்தது என்பது யாருக்கும் தெரியாது] பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியைக் காட்டுகிறது” எனக் கூறினார்[தினகரன் செய்தி].

இந்த ஆள், கைலாசப் பயணமாகட்டும் சொர்க்கத்துக்கான ‘டூர்’ ஆகட்டும் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியட்டும். அது நமக்கு ஒரு பொருட்டல்ல; நம்மைக் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்குவது.....

யோக விஞ்ஞானச் சக்தி’தான் தன்னை இமாலயப் பயணம் மேற்கொள்ளச் செய்தது என்று ‘புருடா’ விட்டதுதான்.

‘யோகா’ என்னும் பயிற்சி நாம் அறிந்தது. ‘விஞ்ஞானம்’ பற்றியும் நமக்குத் தெரியும். அதென்ன ‘யோகா விஞ்ஞானம்’?

‘யோகா’ என்பது மூச்சுப் பயிற்சியை உள்ளடக்கிய ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே; மனப்பயிற்சியும்[ஆய்வுக்குரியது]  அதில் அடங்குவதாகவே இருக்கட்டும். இதில் விஞ்ஞானம் புகுந்தது எப்படி?

யோகா விஞ்ஞானமாம்!

இந்த அறிவியல் நுட்பத்தை இந்த ஆள் கற்றது எங்கே? எப்போது? மக்களுக்குத் தெளிவாக[புரியாத எதையெல்லாமோ பேசிப் பேசித் தன்னைச் ‘சத்குரு’[கடவுளின் குரு] ஆக்கிக்கொண்ட மோசடிப் பேர்வழி இந்த ஆளாக்கும்]ப் புரியும்படி விளக்க இயலுமா?

மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதையே தொழிலாக்கிக் கோடி கோடியாய்ச் சம்பாதித்த இந்தக் ‘கேடி’க்குக் கடும் தண்டனை வழங்கப்படுதல் மிக முக்கியம். 

அதிகார வர்க்கத்தின் முழு ஆதரவு அதைத் தடுக்கிறது.

‘யோகா விஞ்ஞானச் சக்தியால், மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரையை நடத்திமுடித்ததாகச் சொல்லும் இந்த ‘டூப்பிளிகேட்’ சாமியாரால், அறுவைச் சிகிச்சைகளுக்குக் காரணமான ‘மூளை ரத்தக் கசிவை’த் தடுக்க இயலாமல்போனது ஏன்?

இது மக்கள் கேட்கவேண்டிய கேள்வி.

எப்போது கேட்பார்கள்?

இந்தப் போலி ஆன்மிகவாதி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிப் பெரும் போராட்டம் நடத்துவது எப்போது?

காத்திருப்போம்.

                                           *   *   *   *   *

https://www.dinakaran.com/news/kailash_yatra_sadhguru/