எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 21 டிசம்பர், 2024

மரணமும், அழியும் உடலுறுப்புகளுக்கான[அணுக்கள்] கால இடைவெளியும்

மூளை, நரம்பு ஆகியவற்றிலுள்ள செல்களுக்குத் தொடர்ந்து உயிர்க்காற்று[ஆக்சிஜன்] தேவைப்படுவதால், சுவாசம் நின்றவுடன், சில நிமிடங்களில் அவை இறந்துவிடும்.

இதயம், கல்லீரல், சிறுநீரகம், கணையம் ஆகியவை[அணுக்கள் சாகாமலிருப்பதால்] சுமார் ஒரு மணி நேரம் உயிர்வாழும்.

தோல், தசைநாண்கள், இதய வால்வுகள், கார்னியாக்கள் ஆகியவை ஒரு நாளுக்குப் பிறகும் உயிருடன் இருக்கும்.

இறுதியாக அழிபவை வெள்ளை இரத்த அணுக்கள் ஏறக்குறைய மூன்று நாட்கள் வாழும்.

[ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் இறக்கும் கடைசிக் கட்டத்தை வீடியோ படம் பிடித்து அசத்தியிருக்கின்றனர், ஆஸ்திரேலியாவிலுள்ள லா ட்ரோப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.]

[ஒருவர் இறந்தவுடன், உடம்பானது அழிவின் இறுதிக் கட்டத்தை அடைகிறது. அந்த நேரத்தில்தான் மரபணு[DNA]வின் ஒரு பகுதி RNAஇல் நகலெடுக்கப்படுகிறது. ஒரு நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அல்லது ஓரிரு நாட்களுக்குள் இது நிகழலாம்].

* * * * *

தகவல்:

தாமஸ் கெய்ன்[எழுத்தாளர், ஓவியர், சிந்தனையாளர்]