மூளை, நரம்பு ஆகியவற்றிலுள்ள செல்களுக்குத் தொடர்ந்து உயிர்க்காற்று[ஆக்சிஜன்] தேவைப்படுவதால், சுவாசம் நின்றவுடன், சில நிமிடங்களில் அவை இறந்துவிடும்.
இதயம், கல்லீரல், சிறுநீரகம், கணையம் ஆகியவை[அணுக்கள் சாகாமலிருப்பதால்] சுமார் ஒரு மணி நேரம் உயிர்வாழும்.
தோல், தசைநாண்கள், இதய வால்வுகள், கார்னியாக்கள் ஆகியவை ஒரு நாளுக்குப் பிறகும் உயிருடன் இருக்கும்.
இறுதியாக அழிபவை வெள்ளை இரத்த அணுக்கள் ஏறக்குறைய மூன்று நாட்கள் வாழும்.
[ஒருவர் இறந்தவுடன், உடம்பானது அழிவின் இறுதிக் கட்டத்தை அடைகிறது. அந்த நேரத்தில்தான் மரபணு[DNA]வின் ஒரு பகுதி RNAஇல் நகலெடுக்கப்படுகிறது. ஒரு நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அல்லது ஓரிரு நாட்களுக்குள் இது நிகழலாம்].
* * * * *
தகவல்:
தாமஸ் கெய்ன்[எழுத்தாளர், ஓவியர், சிந்தனையாளர்]