திங்கள், 30 செப்டம்பர், 2024

சென்னையில் பேடிகள் வைத்த ‘ஹசன் நஸ்ரல்லா[ஹிஸ்புல்லா தலைவன்]’ பேனர்!!!

‘இஸ்ரேல் நாட்டின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, வீரரைப் போல் சித்தரித்து, சென்னையில், 'பேனர்' வைத்திருக்கிறார்கள்’[‘இஸ்ரேல்- இஸ்லாம் தீவிரவாதிகளுக்கு இடையிலான போரில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ‘ஹசன் நஸ்ரல்லா’ கொல்லப்பட்டார்] என்பது செய்தி.

அதில், உலகத்தில் மாபெரும் மாவீரன் என்று அவருக்கு அடைமொழி கொடுத்து வீரவணக்கம் செலுத்தியிருக்கிறார்கள் இஸ்லாம் சமயப் பெயரிலிகள்[கோழைகளா, மத வெறியர்களா?].

சென்னையில் பேனர் வைத்தது ஏன்?.

வடநாட்டில் ஏதேனும் ஒரு நகரத்தில் வைத்தால், இந்து வெறியர்கள் இவர்களை ஓட ஓட விரட்டிப் பிடித்து உதைப்பார்கள்; கட்டி வைத்து அடித்துக் கொல்லுவார்கள்[தாடி வைத்தவனையும், மாட்டுக்கறி விற்பவனையும்கூட இஸ்லாமியன் என்று நினைத்துத் தாக்கினார்கள் என்பது வரலாறு] என்பதால் அங்கெல்லாம் வைக்கவில்லை.

தைரியம் இருந்தால் இஸ்ரேலை ஆதரிக்கிற அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ தட்டி[பேனர்] வைத்து ஹசன் நசரல்லாவின் வீர மரணத்தைக் கொண்டாடியிருக்கலாம்.

ஹிஸ்புல்லா அமைப்பைப் பற்றியோ, நஸ்ரல்லா பற்றியோ அவ்வளவாக அறிந்திராத அல்லது பொருட்படுத்தாத மக்கள் வாழும் அமைதிப் பூங்காவன தமிழ்நாட்டில் பேனர் வைத்தது அவர்கள் கோழைகள் மட்டுமல்ல, பொல்லாத மத வெறியர்கள் என்பதையும் அம்ம்பலப்படுத்தியிருக்கிறது!

இந்தப் பெயரிலிகள் சிலரோ பலரோ ஒருவர் மிச்சமில்லாமல் அனைவரையும் தேடிப் பிடித்துத் தண்டனை வழங்குவது ஆட்சியாளர்களின் தலையாய கடமை ஆகும்.


ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

‘தி.லட்டு’... “பெருமாள் பார்த்துக்கொண்டிருக்கிறார்”-குஷ்பு! நடவடிக்கை எப்போது மேடம்?!

லகெங்கும் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ள ‘திருப்பதி மாட்டுக் கொழுப்பு கலந்த லட்டு’ப் பிரச்சினை நீடிக்கிறது. குற்றம் புரிந்தவர்களை அடையாளம் கண்டு உரிய தண்டனைகளை வழங்கினால் மட்டுமே பிரச்சினை தீரும்.

அது அத்தனை எளிதல்ல என்றே தோன்றுகிறது.

இந்நிலையில் முன்னாள் நடிகையும் இந்நாள் பிரபல அரசியல்வாதினியுமான ‘குஷ்பு’ வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனிக்கத்தக்கதாக உள்ளது.

குசுபுவின் அறிவிப்பு:

#கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு விவகாரம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்து மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புண்படுத்தியிருக்கிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். வெங்கடேசப் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்"[vikatan.com/]#

‘வெங்கடேசப் பெருமாள் பார்த்துக்கொண்டிருக்கிறார்’ என்று குசுபு குறிப்பிட்டிருப்பதன் மூலம் பெருமாள் பார்ப்பதை அவர் பார்த்திருக்கிறார் என்று தெரிகிறது[பெருமாள் பார்ப்பதை அற்ப மனிதர்களால் பார்க்க இயலாது. இத்தொடர்பு ஞானிகளுக்கும் மகான்களுக்கும்கூட வாய்க்கப்பெறாதது].

லொழுப்பு லட்டு குறித்த நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிற வெ.பெருமாள் எடுக்கவிருக்கும் அல்லது, எடுத்த நடவடிக்களைக் குசுபு உரிய நேரத்தில் விவரிப்பார் என்று 100% நம்பலாம்.

குசுபுவுக்கு வெ. பெருமாளின் பக்தர்கள் சார்பில் கோடானுகோடி நன்றிகள்!

                                *   *   *   *   *

https://www.vikatan.com/government-and-politics/actress-and-bjp-cadre-kushboo-about-tirupati-laddu-issue


சனி, 28 செப்டம்பர், 2024

மோடியைக் ‘கேடி’ ஆக்கும் முகநூல் குசும்பர்கள்!!!

 







[கோடியில் புரளும் மோடியின் குரு[பரம்பொருளுக்கும் குரு!]

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

அருள்மிகு ஏழுமலையானை அசிங்கப்படுத்தும் ஆட்டு[செம்மறி] மூளை மனிதர்கள்!!!

என்றெண்ணல் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி கோயிலை மீண்டும் புனிதப்படுத்த வேண்டும் என்று தொடர் விரதம் இருக்கிறார். திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் சமயலறை உள்ளிட்டப் பகுதிகளில் ஹோமம் வளர்த்து சாந்தி பூஜை செய்ததுஅதைத் தொடர்ந்து ஆந்திராவின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், திருப்பதி வெங்கடாசலபதியைச் சாந்தப்படுத்தப் பாத யாத்திரை செய்யவிருக்கிறார்கள்’[www.vikatan.com/].

கோபத்துக்குள்ளான ஏழுமலையானைச் சாந்திப்படுத்தப் பூஜை செய்தார்களாம்! கடவுள் கோபப்படுவாரா? பட்டால் அதை அற்ப மனிதர்களால் தணிக்க முடியுமா? முடியும் என்று நம்பிப் பூஜை செய்பவர்களை ஐந்தறிவு உயிரினங்களில் எந்த இனத்தில் சேர்ப்பது?

கலப்படம் செய்யப்பட்டபோது வெ.பதி ஆழ்ந்த உறக்கத்தில் அல்லது தியானத்தில் இருந்தாரா? இல்லை என்றால் கலப்படம் செய்யும்போதே அதைச் செய்தவனைத் தன்னிடமுள்ள சக்கராயுதத்தால்[பெருமாள், ஏழுமலையான், கிருஷ்ணப் பரமார்த்தமா, திருமால் என்று பல பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்] கழுத்தை அறுத்துப் பிணமாக்கியிருக்கலாம். குறைந்தபட்சம், கலப்படம் செய்தவனைத் திருத்தியிருக்கலாம்.

எதுவும் செய்யாமல் இருந்ததற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம்.

பூஜை செய்கிறார்களாம் பூஜை.

ஒரு நபர் உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதம் இருந்தால் கோயில் புனிதம் அடைந்துவிடுமா? உண்ணாநோன்புக்கான உண்மைக் காரணம்தான் என்ன? விளக்கம் தருவாரா அவர்?

மண்டையில் உள்ள மூளையில் 001%கூடப் பயன்படுத்தாத இவர்களை மரமண்டையர் என்பதா, களிமண் மண்டையர்கள் என்று சாடுவதா?

இன்னும் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் உள்ளன.

ஆறறிவு இருந்தும் முழுக்க முழுக்கக் காட்டுமிராண்டிகளாகவே வாழும் இவர்களிடம் கேட்பதால் அணுவளவும் பயன் இல்லை என்பதால் அவை தவிர்க்கப்படுகின்றன.

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/actress-and-bjp-cadre-kushboo-about-tirupati-laddu-issue

வியாழன், 26 செப்டம்பர், 2024

‘திருப்பதி லட்டு’... ‘சத்’துக்குருவுக்கு ஒரு கொட்டு!!!

‘பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. ஹிந்துக் கோவில்களை அரசு நிர்வகிக்காமல் பக்தியுள்ள ஹிந்துக்கள் நடத்த வேண்டிய காலம் இது’ என்று சத்குரு தெரிவித்துள்ளார்[தினமலம்].

சத்துக்குருவுக்கு.....

குருதேவரே,

‘நல்லது கெட்டது’ எல்லோருக்கும் தெரியும். அதென்னங்க புனிதம்?

புனிதம் என்றால் ‘தூய்மை’ என்று பொருள். அந்தத் தூய்மையைத்தான் கடவுளோடு சம்பந்தப்படுத்திப் புனிதம் என்கிறீரா?

புனிதத்திற்குப் பொருள் காண்பது இருக்கட்டும், பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது என்கிறீரே, அதன் மூலம் பக்தி இல்லாதவர்கள் எல்லாம் புனிதர்கள் அல்ல என்கிறீர்.

சரி என்றே கொள்வோம்.

பக்தர்களில், உண்மைப் பக்தர்கள், கோடி கோடியாய் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் போலிப் பக்தர்கள் என்று இரு வகையினர் உள்ளனர்.

உண்மையான பக்தர்களைக் கண்டறிவது எப்படி?

முகம் முழுக்கத்[உம்மைப் போல] தாடி மீசை வளர்த்தவர்களா?

உம்மைப் போல வகை வகையான விதம் விதமான படாடோப ஆடை அணிபவர்களா?

எந்நாளும் காவி உடை உடுப்பவர்களா?

இங்கிலீஸில் கொஞ்சமும் புரியாத தத்துவம் பேசி ஞானி என்று பட்டம் பெற்றவர்களா?

தவறாமல் தினமும் கோயிலுக்குச் செல்பவர்களா? கட்டுக் கட்டாய் உண்டியலில் பணம் போடுபவர்களா?

மாமூலாகக் கோயில்களுக்குப் போய் முடிக்காணிக்கை(மொட்டை) செலுத்துபவர்களா?

இவர்களெல்லாம் அல்ல; அவர்கள் மனப்பூர்வமாய்க் கடவுளை நம்பித் துதிப்பவர்களே[உண்மையான பக்தர்கள்] என்பீரேயாகில், பெரும்பான்மைப் போலிகளுக்கிடையே மிகச் சிறுபான்மையராக உள்ள அவர்களைக் கண்டுபிப்பது எளிதல்லவே.

கணிசமான அளவிலேனும் அவர்களைக் கண்டுபிடித்தால்தானே அவர்களிடம் கோயில்களை ஒப்படைக்க முடியும்.

அது சாத்தியமே அல்ல என்பதால், உலகப் புகழ் பெற்ற கோடீசுவரப் பக்தரான உம்மிடமே அனைத்துக் கோயில்களையும் ஒப்படைத்திட வேண்டும் என்பது உம்முடைய உள்மன ஆசை!

ஆசை நிறைவேற எம் மனம் செறிந்த வாழ்த்துகள் குருநாதரே!!

                                            *   *   *   *   *

https://www.dinamalar.com/news/india-tamil-news/where-there-is-no-devotion-there-is-no-holiness-sadhguru-/3737688


புதன், 25 செப்டம்பர், 2024

மரண வலியும் மன வலிமையும் அம்மையார் நிர்மலாவின் ஆன்மிக நெறியும்!!!

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டை ஆளுவோரின் கடமை மக்களின் உயிர் காப்பதும் நலம் காப்பதும்தான். மறந்தும் ஆன்மிகத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்களாயின், அது பேரழிவின் அறிகுறியாகும்.


ஒரு நிறுவனத்தின் பெண் ஊழியர் அளவு கடந்த பணிச் சுமையால், கட்டுக்கடங்காத மன அழுத்தத்திற்கு உள்ளாகி உயிரிழக்கிறார்[ஆதாரம் கீழே*].


அவரின் விலைமதிப்பற்ற உயிர் பறிபோகக் காரணம் நிறுவனத்தின் நிர்வாகிகள் மட்டுமல்ல, இது போன்ற நிறுவனங்களின்[நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை] செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்களைத் தண்டிக்கத் தவறிய நடுவண் ஆட்சியாளர்களும்தான்.

இந்த நாட்டின்[ஒன்றியம்] ஆட்சியாளர் குழுவில் ஒருவர் நிர்மலா சீத்தாராமன்.
மேற்கண்ட பெண்ணின் மரணத்திற்குக் காரணமான நிறுவனத்தினரைக் கடுமையாகக் கண்டிக்கத் தவறியதோடு, அந்தப் பெண்ணுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்திருந்தால், பணிச் சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்கும் வலிமையைப் பெற்றிருப்பார்[உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது] என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

மன வலிமை என்பது முறையான மனப் பயிற்சியால் பெறத்தக்கது. கடவுள், ஆன்மா எல்லாம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவற்றின் மூலம் மன வலிமை பெறுவது சாத்தியமே இல்லை[காலங்காலமாகத் தொடர் பரப்புரையின் மூலம் இந்தவொரு மூடநம்பிக்கையை மக்கள் மனங்களில் வெகு ஆழமாகப் பதித்துவிட்டார்கள் பாவிகள்].


குற்றம் புரிபவர்களைத் தேடிப் பிடித்து உரிய தண்டனை வழங்காமல், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பகுத்தறிவைக் கருவறுக்கும் வகையில் அறிவுரை வழங்குவது அடாத செயலாகும்.


அம்மா நிர்மலா மட்டுமல்ல, இவரணைய நாட்டை ஆளும் கும்பலும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு, அறிவியல்பூர்வமாகத் தீர்வு காண்பதைத் தவிர்த்து, ஆன்மிகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


துன்பங்களைத் தாங்குவதற்கான மன வலிமையைப் பெற ஆன்மிகம் பயன்படும் என்ற நிர்மலாவின் ஆலோசனை அபத்தமானதாகும்.


ஒரு கயவன் பெண்ணொருத்தியை வன்புணர்வு செய்ததால் கடும் வேதனைக்குள்ளான அவள் தற்கொலை செய்துகொள்வதாக ஓர் நிகழ்வு[அவ்வப்போது நடைபெறுகிற ஒன்றுதான்].


இந்தக் கொடூர நிகழ்வை முன்னிறுத்தி நிர்மலா அம்மையாரிடம் நாம் கேட்கும் கேள்வி.....


சூழ்நிலை காரணமாகவோ, உயரிய சிந்தனையின் மூலமாகவோ அதீத மன வலிமையைப் பெறாத நிலையில், வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றால், உங்கள் ஆன்மிகம் அதைத் தடுத்து நிறுத்துமா?


அமைச்சர் என்னும் ஒரே ஒரு தகுதியை மட்டும் உரித்தாக்கி, நிர்மலாவோ பிற அமைச்சர்களோ எளிதில் தீர்க்க இயலாத பிரச்சினைகளுக்கு ஆன்மிகமே தீர்வு என்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல!

* * * * *

*#எர்னஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 26 வயது அண்ணா செபஸ்டியன் பணிச்சுமையால் உண்டான மன அழுத்தம் காரணமாகக் கடந்த வாரம் உயிரிழந்தார்[https://tamil.goodreturns.in]


இந்நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,


அன்னாவின் மரணம் தொடர்பாகக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார், “சிஏ படித்து முடித்த ஒரு இளம் பெண் பணிச்சுமை காரணமாக[உண்டான மன அழுத்தத்தால்] இறந்து விட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது” என்று குறிப்பிட்ட அவர்.....


பொத்தாம்பொதுவாக, “நீங்கள் என்ன படித்தாலும், எந்த வேலையைச் செய்தாலும் அவற்றால் உண்டாகும் அழுத்தத்தைத் தாங்கும் மனவலிமை இருக்க வேண்டும்[அழுத்தம் ஏற்படக் காரணமானவனைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?] அந்த வலிமை ஆன்மீகத்தால் மட்டுமே சாத்தியம்" என்று கூறினார்#

* * * * *

https://tamil.goodreturns.in/news/divinity-is-the-only-way-to-gain-inner-strength-to-handle-pressure-says-nirmala-sitharaman-on-ca-dea-051499.html


செவ்வாய், 24 செப்டம்பர், 2024

நானும் பேடிதான்!!![உண்மைக் கதை; 100% எதார்த்தம்]

து நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........


‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது கொடுமை. கொடுமையிலும் கொடுமை.


அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!


“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” -யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” -எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.


“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” -சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.


”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”


“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”


“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.


இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!


“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.


அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.


கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.


நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.


‘சே, என்ன மனிதர்கள்!’


ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!


ஆண்களா இவர்கள்?


ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.


நம் ஊர்களில் பேடிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதா? ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?


லட்சத்திற்குப் பத்துபேர் தேறுவார்களா?


கோபிக்காதீர்கள்..... அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?


யோசிக்கிறீர்கள்?


ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.


இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது என்று கேட்க நினைக்கிறீர்களா?


“ஆறு மாசம் இருக்கலாம்." -நான்.


“எங்கே?” -நீங்கள்.


“சேலத்தில்.” -நான்.


“உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?”


“இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.” -நானாகிய ‘பசி’பரமசிவம்


“அட!... வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”


“அது வந்து.....”


“என்னய்யா வந்து போயி, மத்தவங்களோடு நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே; அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”


“அது வந்து..... அது வந்து..... வந்து.....”

* * * * *

***பதிவு ரொம்பப் பழசு[2016]


திங்கள், 23 செப்டம்பர், 2024

'பிரதோஷம்’ என்னும் பெயரில் விஷம் பரப்பும் பரம்பரைப் பொய்யர்கள்!!!!!!

முதம் பெறுவதற்காக அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது நஞ்சு வெளியேறியது. அதனால் விளையும் பேரழிவைத் தடுக்கச் சிவபெருமான் அதை விழுங்கினார். சிவனான தன் கணவனுக்கு ஆபத்து நேராமலிருக்கப் பார்வதி தேவி அவரின் தொண்டைக் குழியை அழுத்திப் பிடிக்க, அது அங்கேயே நின்றுவிட்டது. கழுத்து[கண்டம்[ நீல நிறமாக மாறியதால் பரமசிவக் கடவுள் ‘நீலகண்டன்’ என்று அழைக்கப்பட்டார் என்பது புராணக் கதை.

சின்னஞ் சிறுசுகளைத் தவிர இக்கதையை அறியாதார் இல்லை என்றே சொல்லலாம்.

அனைத்தையும் படைத்த முழு முதல் கடவுள் நஞ்சை விழுங்கியதால் அவருக்கு ஆபத்து நேரும் என்று எவனோ ஓர் அண்டப்புளுகன் சொன்ன கதையை ஆதாரமாக வைத்து, சிவனார் நஞ்சு விழுங்கிய நாள்தான் ‘பிரதோஷம்’ என்றும், அந்த நாளை வழிபடுவதுதான் ‘பிரதோஷ வழிபாடு என்றும் விசேட நாட்களில் கோயில்தோறும் ஆண்டாண்டுதோறும் விசேச வழிபாடு நடத்துகிறார்கள் விஷமிகள்.

'நான் ஆறறிவு மனிதன்' என்று நெஞ்சு நிமிர்த்தித் திரிகிறவர்களில் எத்தனைப் பேர் இதைக் கண்டித்தார்கள்? கண்டிக்கிறார்கள்?

கோயில்தோறும் மணியடித்துப் பொருளில்லாத மந்திரங்கள் சொல்லித் தங்களை மிக மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் செய்யும் அத்தனை விசேட பூஜைகளுமே புராணப் புளுகுகளை உண்மை நிகழ்வுகள் என்று நம்பச் செய்வதற்குத்தான்.

ஒரு கேள்வி.....

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில், சிவன் கோயில்கள் பலவற்றிலும் இவர்கள் பிரதோஷ பூஜை செய்கிறார்களே, பக்தக் கோடிகளில் எவராவது ‘பிரதோஷம்’[எல்லையற்ற ஆனந்தமாம்] என்றால் என்ன என்றோ, புராணப் புளுகை நம்பி விழா எடுப்பதால் நேரம் விரயமாகிறதே தவிர, பயன் என்ன என்றோ கேட்டிருக்கிறார்களா?

கேட்கமாட்டார்கள். காரணம், முட்டாளாகவே இருப்பதில் பெறும் சுகம் புத்திசாலியாக வாழ்வதில் இல்லை என்று நம்புகிறவர்கள் அவர்கள்!
  * * * * *
***மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. பிரதோசம்(Pradosha) என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும்[விக்கிப்பீடியா].


ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

ஏழுமலையான் கோயிலில் இனி ‘திருப்பதி அல்வா’?!?!

‘புகழ்பெற்ற திருப்பதி கோவில் லட்டுவில் விலங்குக் கொழுப்புகள் கலக்கப்பட்ட விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. நாளை முதல் 3 நாட்கள் பரிகார பூஜை நடக்கவுள்ளது’[தினமலர்].


பாவங்களைச் செய்தமைக்காகச் செய்யப்படும் பரிகாரங்களைப் பிராயச்சித்தம்
 என்றும் அழைக்கின்றனர். இவற்றில் கொலை முதலிய கொடிய பாவங்களிலிருந்து விடுபட வழிவகைகள் கூறப்பட்டுள்ளன[.https://ta.wikipedia.org/wiki]


கடவுள் என்று ஒரு நபரைக் கற்பனை செய்து, அவனை வழிபட்டால் துன்பங்கள் தீரும் என்னும் நம்பிக்கையை மக்கள் மனங்களில் திணித்தவன்கள் பக்தியின் பெயரால் பிழைப்பு நடத்தும் ஆன்மிகப் புரட்டன்கள்.


நற்செயல்களால் புண்ணியமும், கெட்டக் காரியங்களால் பாவமும் சேர்கிறது[செய்பவர்களை] என்று புளுகி வைத்தவன்கள் இவன்களே[அமைதியான வாழ்வுக்கு நல்லன செய்தலும் தீயன தவிர்த்தலும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை].


பாவம் செய்தவரைக் கடவுள் தண்டிப்பார்; புண்ணியவான்களை ஆசீர்வதிப்பார் என்று புருடா[சொர்க்கச் சுகம், நரக வதை உட்பட] விட்டவன்களும் இந்தப் பாவிகளே.


அடுத்து இந்த அயோக்கியர்கள் அடித்துவிட்ட பொய் கற்பனைக்கு எட்டாதது.


செய்த பாவங்கள் நீங்க இவன்கள் பரிகார பூஜை செய்கிறான்களாம்.


என்ன அது பரிகார பூஜை?


தீயை மூட்டி, அதில் குடம் குடமாய் நெய்யைக் கொட்டி ஆவியாக்கி, புரியாத ஒரு குப்பை மொழியில் மந்திரம் சொல்வதால், செய்த பாவங்கள் புண்ணியங்களாக மாறிவிடுமா?அப்புறம் எதற்குப் பாவம் செய்யாதே என்று புத்திமதி சொல்லுறானுங்க?].


திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பாவ காரியம். அதற்குப் பரிகாரம் செய்யவிருக்கிறார்கள் என்பதுதான் ஊடகங்களில் இப்போதையப் பரபரப்புச் செய்தி.

மாட்டுக் கொழுப்பைக் கலப்பது தப்பு என்றாலும்[பன்றிக் கொழுப்பு, குதிரைக் கொழுப்பு போன்றவற்றைச் சேர்க்கலாமா?] அது கலக்கப்பட்ட லட்டைத்தான் பக்தர்கள் இப்போதும் விரும்பி வாங்குகிறார்கள் என்பது தினமலர்ச் செய்தி.

மாட்டின் கொழுப்பைக் கலப்பது தவறு என்றால், அதன்  பாலைக்கொண்டு சாமியைக் குளிப்பாட்டுவது தவறில்லையா?[எது தப்பு, எது சரி என்று நிர்ணயம் செய்ய இவன்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

கோயிலுக்கு வந்து வழிபட்டுவிட்டு[மனம் சம்பந்தப்பட்டது]ப் போகிறவனுக்கு வாய்க்குச் சுவையான லட்டு[மட்டும்] கொடுப்பது ஏன்”


லட்டுடன் அல்லது, அதற்குப் பதிலாக அல்வா, ஜிலேபி, மைசூர்பாகு, குலோப்ஜாமூன் போன்ற சுத்த நெய்யினால் செய்த இனிப்புப் பண்டங்களைப் பிரசாதம் என்னும் பெயரில் வழங்கி வருமானத்தைப் பெருக்கலாம்; பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.


செய்யுமா ஏழுமலையான் கோயில் நிர்வாகம்?!

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

‘இது ஸ்ரீரங்கநாதர் சாமி கழிப்பறை’!!!

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலைச் சுற்றி, 7 பிரகாரங்கள்[தெருக்கள்] உள்ளன.

விழாக் காலங்களில் ரங்கநாத சாமி அவர்கள் நகர்வலம்[தெருக்களில்] வருவது வழக்கம்.

இந்த நகர்வலத்துக்கு இடையூறு செய்யும் வகையில் மாநராட்சிக்காரர்கள் இரண்டு தெருக்களில் பொது மக்கள் பயன்பாட்டிற்காகக் கழிப்பறைகள் கட்டுகிறார்கள். 

இந்தக் கழிப்பறைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும் என்று  கட்டுமானத்திற்குத் தடை விதிக்கும்படி ‘நகர் நலக் கூட்டமைப்பினர்’ வழக்குத் தொடுக்க, கழிவறை கட்டுவற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்[செய்தி: தினமணி].

கழிப்பறைகள் தெருவோரங்களில் கட்டப்படுகின்றன. ரங்கநாதரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கானவை அவை.

கழிப்பறைகள் இல்லாவிட்டால் அவர்கள் ‘ஒன்னுக்கு ரெண்டுக்கு’ப் போவது எங்கே? 

கோயில் வளாகத்தைச்[சுற்றுச் சுவர் ஓரங்களில்] சுற்றிலும், தெருவோரச் சந்துபொந்துகளிலும் கழித்துவைத்தால், சப்பரங்களில் சாமியைச் சுமப்பவர்களும் சூழ்ந்து செல்லுபவர்களும் மட்டுமல்ல, ஸ்ரீரங்கநாதரே மூக்கைப் பொத்திக்கொள்ள நேரிடும்.

இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத குறுமதியாளர்களா நகர் நலக் கூட்டமைப்பினர்?

வழக்குத் தொடுத்த இவர்களைக் கண்டிக்காமல் இவர்களுக்குச் சாதகமாக உயர் நீதிமன்றம் தடை விதித்தது நாட்டு மக்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிகழ்வாகும்.

இது விசயத்தில் ஸ்ரீரங்கம் மாநகராட்சியாளருக்கு நாம் வழங்கும் பரிந்துரை.....

கழிவறைக்கான கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில், ‘இது ஸ்ரீரங்கநாதர் கழிப்பறை’[இது ரங்கநாதருக்கானது. மனிஷாள் நுழைய அனுமதி இல்லை] என்று பெரிதாகப் பெயர்ப்பலகை வையுங்கள்.

வைத்தால்.....

கட்டுமானப் பணியைத் தடுக்கவோ, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கவோ எவனுக்கும் துணிச்சல் வராது!

                                    *   *   *   *   *

https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2024/Sep/19/interim-ban-on-construction-of-toilets-on-srirangam-temple-uthra-streets

வியாழன், 19 செப்டம்பர், 2024

மறதி நோய்க்கு[alzheimer] மருந்தாகிறது ‘வயாகரா’!!!

‘வயாக்ரா போன்ற மருந்துகளை உட்கொள்ளும் ஆண்கள் ‘மறதி’ நோய்க்கு உள்ளாவது 18% அளவுக்குக்  குறைகிறது என்கிறது ’நியூராலஜி’ இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு. 

 2000 - 2017க்கு இடையிலான காலக்கட்டத்தில், உடலுறவு விசயத்தில் பலவீனம் கண்டறியப்பட்ட 40 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதும் ஆன 269,725  ஆண்களின் மருத்துவப் பதிவுகளை லண்டன் பல்கலைக் கல்லூரி(UCL) நிபுணர்கள் ஆய்வு செய்தபோது வயாக்கரா போன்ற மருந்துகளின் பயன்பாடு கண்டறியப்பட்டதாம்.

அதென்ன ‘போன்ற’?

நோய்வாய்ப்படும்போது[அல்லது, உடல் நலத்துக்காக] எடுத்துக்கொள்ளும் மருந்துகள்.

அல்சைமர்ஸ் ஆராய்ச்சியாளர்கள்[UK] கூறியது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், டிமென்ஷியாவை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கவும் அல்லது சிகிச்சையளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சில்டெனாபில்(வயக்ரா என விற்கப்படுகிறது), தடாலாஃபில் (சியாலிஸ்), வர்தனாஃபில் & அவானாஃபில் உள்ளிட்ட PDE5I மருந்து வகைகளில் பாதிக்கும் கூடுதலாக(55%) பரிந்துரைக்கப்படுகின்றன.

உயர் இரத்த அழுத்தம் & ஆஞ்சினா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட வயாகரா இவற்றில் முதன்மையானது ஆகும்.

                                           *   *   *   *   *

விரிவானதும் மிகத் துல்லியமானதுமான தகவல்களுக்குக் கீழ்க்காணும் ஆங்கிலக் கட்டுரையை வாசிக்கலாம்.

Viagra could be the key to curing Alzheimer’s (msn.com)

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

மோடிஜி, அதென்ன கணக்குங்க ‘ஆயிரம் ஆண்டு’!?

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 4-ஆவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து, தன் ஆட்சிக்காலச் சாதனைகளைப் பட்டியலிட்ட மோடி, இன்றைய இந்தியா இன்றைக்கு மட்டும் அல்ல, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

‘இந்தியா ..... அடித்தளம் இடுகிறது’ என்பதை, ‘மோடிஜி அடித்தளம் இடுகிறார்’ என்று திருத்திக்கொள்ளுங்கள்.

தீராத நோய்கள், வறுமை, கொலை, கொள்ளை, வன்புணர்வு[இந்தியா ஒரு பெண்ணாக இருப்பதற்கான[வாழ்வதற்கான] மோசமான இடமாக மதிப்பிடப்பட்டுள்ளது. https://www.haqcrc.org/news/truth-about-indias-gendercide/போன்றவற்றால் ஆண்டுதோறும் உயிரிழப்போர் எண்ணிக்கை பல்லாயிரம்; பல லட்சங்கள் என்றும் சொல்லலாம்.

இந்த அவல நிலையை மாற்றியமைக்கவே இன்னும் மிகப் பல ஆண்டுகள் தேவை.

இதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தோ, தேவைப்படும் கால அவகாசம் குறித்தோ மோடி பேசியிருந்தால் அவரை நாட்டு நலனில் அக்கறை கொண்ட நல்ல பிரதமர் என்று பாராட்டலாம்.

அதை விடுத்து, 2047இல் இந்தியா வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும்[15 ஆக., 2023] என்பது போல வாய்போன போக்கில் அடித்துவிடுவதை வழக்கமாகக்கொண்ட இவர், இப்போது, அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம்[இந்தியா வளர] இடுவோம் என்று பேசியிருக்கிறார்.

இவருக்கு முன்பு, இந்த நாட்டை ஆண்ட நம் தலைவர்களெல்லாம் அடித்தளம்(வளர்ச்சிக்கான திட்டங்கள்?)    அமைக்கவில்லையா?

இல்லை என்றே கொண்டாலும். ஏற்கனவே 10 ஆண்டுகள் இவர் பிரதமராக இருந்தபோது அடித்தளம் போடுவது பற்றி வாய் திறவாதது ஏன்?

இப்போது திறந்தது மகிழ்ச்சிதான். எனினும், ஒரு சந்தேகம்..... 

50,100 ஆண்டுகளுக்கான அடித்தளம் அமைத்தால் அதுவே பெரிய சாதனை. இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அமைக்கிறாராம். 

அதென்ன கணக்கு ஆயிரம் ஆண்டுகள்?

இன்று ஆயிரம் என்றவர் இன்னும் சிறிது காலம் கழித்து அதைப் பத்தாயிரம், பதினைந்தாயிரம், லட்சம், பத்து லட்சம் என்றும் உயர்த்துவாரோ?

“உலக அளவில், கொஞ்சமும் சிந்திக்காமல் பேசுகிறவர் நம் பிரதமர் மட்டும்தானா?” என்றெழும் கேள்வி நம்மைத் தீராத கவலையில் ஆழ்த்துகிறது!