திங்கள், 29 அக்டோபர், 2018

மன்மத 'வலை'தளங்கள்!!!

ஒரு வினாடியில், 28258 வலைத்தளப் பயனர்கள் 'ஆபாசத் தளங்களில்’ ஐக்கியமாகிறார்கள்! 42.7% பேர் [இதெல்லாம் பழைய கணக்கு] இவற்றின் வாடிக்கையாளர்கள்!! ஆ.வ. தளங்கள் தடை செய்யப்பட்டால், இவர்களில் பாதிப்பேருக்காவது பைத்தியம் பிடிக்கும்!!

இணையத்தில் புழங்குகிற எவரும் ‘ஆபாசத் தளங்கள்’ பற்றி அறியாமலிருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், ”ஆபாசத் தளமா? சே...” என்று நம்மில் முகம் சுழிப்பவர்கள் பலர்.

“அதிலென்ன தப்பு? அது மாதிரி தளங்களில் ஒரு ரவுண்டு வந்தா, அன்னிக்கிப் பூரா புத்துணர்ச்சியோட செயல்பட முடிகிறது” என்பாரும் உளர்.

யாரோ denwuld னு ஒரு வெள்ளை மனசுக்காரர் சொல்கிறார்:
By denwuld on 6/18/2010 1:32:22 AM Rating: 1
I don't think that its wrong.there are so many legal pron sites on internet.who gave that kind of services to their customer.i read some articles on internet about pornography who said that its a good option to keep our mind fresh.i don't know how it right but some time pornography is ok.

“addiction to internet pornography is increasing at an outstanding rate" [www.familysafer.com] என்று எச்சரிக்கை செய்பவர்களும் இருக்கிறார்கள்.
”there are more porn sites than there are stars in the sky" என்று கிண்டலடிக்கவும் செய்கிறார்கள்.

'porn is the life blood of the internet' என்கிறார் ஓர் ஆ.வ. தள ஆய்வாளர்.

ஒட்டு மொத்த வலைத்தளங்களில், 37% பக்கங்களை, pornography எனப்படும் ஆபாசப் பதிவுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு புள்ளிவிவரம்.[dailytech.com]
                              +                                      +                                                      +
அடுத்து வரும் தகவல், நம்மை வாய் பிளக்க வைக்கிறது.

Pornography Time Statistics
Every second - $3,075.64 is being spent on pornography
Every second - 28,258 Internet users are viewing pornography
Every second - 372 Internet users are typing adult search terms into search engines
Every 39 minutes: a new pornographic video is being created in the United States [www.extrmetech.com]
Internet Pornography Statistics
Pornographic websites 4.2 million (12% of total websites)

Pornographic pages 420 million
Daily pornographic search engine requests 68 million (25% of total search engine requests)
Daily pornographic emails 2.5 billion (8% of total emails)
Internet users who view porn 42.7%
Received unwanted exposure to sexual material 34%
Average daily pornographic emails/user 4.5 per Internet user
Monthly Pornographic downloads (Peer-to-peer) 1.5 billion (35% of all downloads)    [answers. yahoo.com][அம்மாடியோவ்.....இதெல்லாம் நிஜமா!!!]

கூகிளின் அரிய தொண்டு!

now google; "google" you get 1,990,000,000.... as you can seee porn is not the number one main part of the internet, it can still be high up but rather, websites about google dominate all other factors...[answers.yahoo.com]

இம்மாதிரி, ’hot...hotter...hottest’ தளங்களால் விளையும் பாதிப்புகள் என்ன? ஆங்கிலத்திலேயே படியுங்கள்.

‘Porn can alter attitudes about sex. One study showed that when exposed to large amounts of porn, both males and females came to view things like casual or extramarital sex as more acceptable. Porn can also make people dissatisfied with their real-life sex partners' appearance and performance. Porn can create unrealistic expectations about sex. Aggressive porn, which typically shows violence against women, can make males exhibit more aggressive behavior toward women in real life. Aggressive porn that shows women giving into and even enjoying things like rape can lead to the attitude that coercion is not so offensive and that rape victims "asked for it". There are a few additional disadvantages as well. For example, browsing porn sites at work could get you into trouble.’

ஆபாசத் தளங்களில், ‘படு கவர்ச்சி’க் கன்னிகளைக் கோடிகள் கொடுத்து நடிக்க வைக்கிறார்கள். அயல் நாடுகளில், இதையே தொழிலாகக் கொண்ட ‘விபச்சாரர்’களை உறவாடவிட்டு, நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு பிரமிக்க வைக்கிறார்கள்.

இது, நடைமுறை சாத்தியமே இல்லாத எதிர்பார்ப்புகளையும், நிறைவேறாத ஆசைகளையும் மனதில் திணிக்கிறது; கட்டுப்படுத்தவே முடியாத காம வெறியைத் தூண்டுகிறது.

இதனால், காம இன்பமே வாழ்க்கை என்ற எண்ணம் மனதில் வேரூன்றுகிறது.  அதைத் தேடி நாயாய்...பேயாய் அலைவதில், மன அமைதி நிரந்தரமாய்த் தொலைந்து போகிறது.

கீழ்வரும் ஒரு கருத்துரையையும் படியுங்கள்.

'I think the disadvantages of porn are the fact that you wife or gf might not be as pretty as the women in the pornography. Also your wife or gf might not have the same skills in the bedroom as the women in the porno film. Also your wife or girlfriend might not be willing to do all of the things that the women do in porno. Kinda sad because the women in the videos do it for money, but the wife / gf do it for love i mean if your wife doesn't want to do it, it makes it seem like money is more important that love. Also porno is to please the man and fulfilling fantasies, sometimes the wife just wants to get it over with or does stuff just 2 get things in return. Kinda sad, plus porno u can just turn it off when your done, a wife u can't u gotta keep the movie playing 24/7 and you have to deal with the drama afterwards which can be a good or a bad thing. I am trying 2 stay away from porno it gives me false hopes of happiness, and every time i watch it i feel guilty because i think i try 2 hold my girlfriend 2 false expectations. Especially when she makes comments like i'm not a porn star.' 
பணத்துக்காக ஒரு ‘நீலப்பட நாயகி’ செய்வதையெல்லாம் ஒரு மனைவியால் செய்ய முடியுமா? அது முடியாத போது, கணவன் மனைவி உறவு, உடைந்த கண்ணாடியாய்ச் சிதறிப் போகும்தானே +                                          +                                          + 
ஆக, ஆபாசத் தளங்களின் எண்ணிக்கையும், அவற்றில் உலா வருவோரின் எண்ணிக்கையும் பெருகி வரும் நிலையில், இதற்கான தீர்வுதான் என்ன?
’ஒரு காலக்கட்டத்தில், குடும்ப உறவுகள் சிதைந்து,  பெரும்பாலான மனிதர்கள் சுயநலமிகளாய் மாறிப்போவார்கள்.. செக்ஸ் அடாவடித்தனங்களால், சச்சரவுகளும், மோதல்களும் அதிகரித்து, மிகப் பெரிய அழிவை மனித குலம் சந்திக்கும். அதன் மூலம் பாடம் கற்றுப் படிப்படியாய்த் திருந்தும்.’ என்றிப்படி அனுமானிப்பவர்கள் இருக்கிறார்கள்.
’இப்படியொரு அசாதாரண நிலை உருவாவதற்குள், உலக நாடுகள் விழித்துக்கொள்ளும். பெரும்பாலான் இஸ்லாமிய நாடுகளில் தடை விதித்திருப்பது போல, உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் ஆபாசத் தளங்களுக்குத் தடை விதிக்கும் காலம் வரும். எப்போதும் போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று நம்பிக்கை தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.


யார் எதைச் சொன்னாலும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆபாசத் தளங்களின் வளர்ச்சி கண்டு அஞ்சவே செய்கிறார்கள். 

இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஊகம் செய்வதும் அவ்வளவு எளிதல்ல.
முடிவாக, ஒரு உபாயத்தை முன் வைக்க என் மனம் விரும்புகிறது.

அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஆபாசத் தளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

தடை நீடித்தால்..........

திருமணம் செய்வதற்கான சூழல் இல்லாதவர்களும், ஆ.வ.தளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களும் வடிகால் தேடுவார்களே, என்ன செய்வது?

என்ன செய்வது?

‘சிவப்பு விளக்கு’த் தொழிலுக்கு அரசுகள் அனுமதி வழங்குவது போல, ‘சிவப்பு விளக்கு browsing centre' களுக்கு அனுமதி வழங்குவது பற்றிப்  பரிசீலனை செய்யலாம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

14.04.2013 இல் எழுதப்பட்ட பதிவு!

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ஆபாசக் கவிஞரா லீனா மணிமேகலை?!?!

'லீனா மணிமேகலை உலக அளவில் கவனம் பெற்ற ஆவணப்பட இயக்குநர்; பத்திரிகையாளர்; கவிஞர்; இவருடைய கவிதைகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன' என்றிவ்வாறு வெகுவாகப் புகழப்பட்டிருக்கிறார் கவிஞர் லீனா மணிமேகலை{'தமிழ் இந்து'['பெண் இன்று' இணைப்பு] 28.10.2018'} நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில்.

மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி.

கட்டுரையின் இறுதியில்.....

லீனா மணிமேகலை ஆகச் சிறந்ததோர் கவிஞர் என்பதற்கு ஆதாரமாக அவருடையை ஒரு கவிதையையும் பதிவு செய்திருக்கிறார் கட்டுரையாளர்.
அந்தக் கவிதையில் சில வரிகளும் நம் சந்தேகங்களும்:

#காவல் அதிகாரி
என் கவிதையைப் பிடித்துக்கொண்டு சென்றார்
விசாரணையின்போது அவர்
கண்களைக் கட்டிக்கொண்டார்
ஆடையில்லாத என் கவிதையைக் காண 
அவருக்கு அச்சமாக இருந்ததாம்#

'ஆடையில்லாத கவிதை' என்றால் ஆபாசக் கவிதை என்பது நமக்குப் புரிகிறது. இவருடைய கவிதைகள் ஆபாசமானவை என்று யாரெல்லாம் சொன்னார்கள்? கட்டுரையாளர் ஒரு சின்னஞ்சிறு பட்டியல்கூடத் தராததால், கவிஞரே தன்னை ஆபாசக் கவிஞர் என்று சொல்லிக்கொள்கிறாரோ என்று சந்தேகம் எழுகிறது.

#குற்றம் விளைவிப்பதே
தன் தலையாய பணி என்பதை
என் கவிதை ஒத்துக்கொண்டதால்
அபராதமும் சிறைத்தண்டனையும்
விதித்த நீதிபதி
தன் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டார்#

படிக்கவும் கேட்கவும் கூடாத அளவுக்கு அப்படி என்ன எழுதிவிட முடியும்?

மார்பகம் என்பதை முலை என்றோ, பிறப்புறுப்பு என்பதை அல்குல் என்றோ, இன்னும் வேறு வேறு வகையிலோ எழுதலாம். நீதிபதியே கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்ளும் அளவுக்கு இவரால் என்ன எழுதிவிட முடியும்?

#அபராதம் கட்டப் பணம் இல்லாததால்
சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை#

கவிதையைச் சிறையில் அடைப்பதா? அதெப்படீங்க? யாருமே படிக்கக் கூடாதுன்னு தடை விதிப்பதைச் சொல்கிறாரா? இவருடைய எந்தவொரு கவிதைக்கும் இன்றுவரை அரசு தடை விதித்ததாகத் தெரியவில்லையே!

கவிதையைச் சிறையில் அடைக்கிறதுன்னா வேறு என்னதான் அர்த்தம்?

#சிறையில் அடைக்கப்பட்ட கவிதை
கம்பிகளை மீட்டிக்கொண்டு
சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது
நாளடைவில் மற்ற கைதிகளும்
ஆடைகளைக் களைந்தனர்#

கவிதை கம்பி எண்ணிக்கொண்டு பாடல் இசைத்ததாம். அது எப்படிங்க?!மற்ற கைதிகளும் ஆடை களைந்தார்களாம். யார் அந்தக் கைதிகள்?

மற்ற கவிஞர்களைச் சொல்கிறாரா? இவரைப் பார்த்துட்டு மற்றவர்களும் ஆபாசக் கவிதை எழுதினார்களா?

என்னதான் சொல்கிறார் லீனா மணிமேகலை?

கவிஞருக்கும் கட்டுரையாளருக்குமே வெளிச்சம்!!! 

வெள்ளி, 26 அக்டோபர், 2018

'அம்மா'வின் ஆன்மாவும் அ.தி.மு.க. ஆட்சியும்!!

''அம்மா ஆன்மாவின் துணையுடன் நாங்கள் நல்லாட்சி நடத்துவோம்'' என்று தமிழ்நாடு 'செய்தி - விளம்பரம்' துறை அமைச்சர் அவர்கள், கோவில்பட்டியில் உரையாற்றியிருக்கிறார்[நாளிதழ்கள், 26.10.2018].
புரட்சித்தலைவியின் மறைவால் இன்றளவும் துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழக மக்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அறிவிப்பு இது.

அமைச்சருக்கு நம் பணிவான வேண்டுகோள்.....

அடுத்த கூட்டத்தில் உரையாற்றும்போது, ''புரட்சித்தலைவி ஜெயலலிதா[அம்மா] மட்டுமல்ல, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா ஆகியோரின் ஆன்மாக்களின் உதவியையும் நாட இருக்கிறோம்'' என்று மறவாமல் அறிவிப்புச் செய்துவிடுங்கள்இதனால், நம் மக்களின் மகிழ்ச்சி பன்மடங்கு பெருகும்.

ஆன்மாக்களை வரவழைப்பது அத்தனை எளிதல்ல என்பதால், கோடீஸ்வரக் கோயில்களுக்குக் குழுவாகச் சென்று வழிபாடு நிகழ்த்துங்கள்; பெரும் பொருட்செலவில் விசேட பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்; கோயில் உண்டியல்களை நிரப்புங்கள்.

நீங்கள் வரவழைக்க விரும்பும் ஆன்மாக்கள் வான்வெளியிலிருந்து சொர்க்கபுரிக்கு இடம்பெயர்ந்திருக்கவும் கூடும். அங்கிருந்து அவைகளை வரவழைத்திட மகாப் பெரிய யாகங்கள் செய்திட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். 

ஓர் எச்சரிக்கை.....

அண்மையில் காலமான கருணாநிதியின் ஆன்மா, புரட்சித்தலைவியின் குரலில் பேசி உங்களையெல்லாம் தவறான பாதையில் செலுத்தவும்கூடும். விழிப்புடன் செயல்படுங்கள்.

எப்போதாவது பெரியார் பெயரையும் உச்சரிப்பதன் மூலம் நீங்கள் பகுத்தறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புவது உண்டு. அந்தப் பெரியாரின் ஆன்மா நரகத்தில் உழன்றுகொண்டிருக்கும் என்பதால் அதை வரவழைக்கும் முயற்சியை முற்றிலுமாய்த் தவிர்த்திடுங்கள்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு என்று படு பயங்கரக் கொடூரச் செயல்களில் ஈடுபட்ட அயோக்கியர்களின் ஆன்மாக்கள் அண்டவெளியில் எப்போதும் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும். அத்தகைய ஆன்மாக்கள் உங்களின் நல்லாட்சிக்குப் பங்கம் விளைவிப்பதைத் தடுத்திட, ஜோதிடக்கலை வல்லுநர்களை வரவழைத்து உரிய பரிகார பூஜைகளைச் செய்திடுங்கள்.

வாழ்க அம்மாவின் ஆன்மா! அதன் துணையுடன் தொடர்க உங்களின் நல்லாட்சி!!
------------------------------------------------------------------------------------------------------------------

IndiBlogger

Your post is on the IndiBlogger homepage.

Dear pasiparamasivam,
Your post 'அம்மா'வின் ஆன்மாவும் அ.தி.மு.க. ஆட்சியும்!!has been selected for IndiBlogger's Featured Posts, and is on the homepage of IndiBlogger right now!
Tweet this Share this
If you would like to add the 'Featured Post on IndiBlogger' badge to your post, you may get the badge at the following link:
Keep blogging!
The IndiBlogger Team

செவ்வாய், 23 அக்டோபர், 2018

சாகப் பிறந்த மனிதனுக்குச் சாமி ஒரு கேடா?!

பொழுதைக் கழிப்பதற்குத்தான் வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கினேன். பதிவுகளின் சாரம் வேறு வேறாக இருப்பினும், கடவுளின் 'இருப்பு' குறித்து ஆராய்வது பிடித்திருந்ததால், அது குறித்துப் பல பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுள்.....

கீழ்வரும் பதிவு மிக மிக மிகச் சிறந்தது என்பது என் நம்பிக்கை. காரணம், முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் இது கடவுளை ஆராய்கிறது என்பதே.

நான் பிறந்த நாள் கொண்டாடியதில்லை. மாறாக, தமிழறிந்தோர் அனைவரும் தவறாமல் படித்திட வேண்டும் என்னும் எண்ணத்தால், என்னின் இந்தப் பதிவை ஆண்டுக்கு ஒரு முறை மீள்பதிவாக வெளியிட முடிவெடுத்துள்ளேன்.

'சாமி என்னடா சமயம் என்னடா சாகப் பிறந்த மானிடனே!!!' என்பது இதன் முந்தைய தலைப்பு. 

தொடர்வது உங்களின் விருப்பம் சார்ந்தது. நன்றி.

னைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் கடவுள்[என்கிறார்கள்].

நம்மைப் படைத்தவரும் அவரே.

நாம் வேண்டிக்கொண்டதால் கடவுள் நம்மை மனிதராகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, நம் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து  இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான்  சொன்னால் அதை உங்களால் எளிதில் மறுத்திட இயலாது.

அவர் படைத்துவிட்டார்.

வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்.

வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் சாவது 100% உறுதி.

இது தெரிந்திருந்தும் நம்மில் எவரும் செத்து மடியத் தயாராயில்லை.

ஆசை...‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசைதான் காரணம். ஆசைப்பட வைத்தவரும் அந்தப் பேரருளாளன்தான்!

இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், சாவு நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்கிறது.

இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?

நம்மில் மிகப் பெரும்பாலோர் நம்புகிற...நாள்தோறும் போற்றித் துதி பாடுகிற கடவுள்தானே?

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணை வடிவான கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார்.

இவர் மட்டும் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.

ஆனால், மானுடப் பதர்களான நமக்கும் பிற உயிர்களுக்கும் மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.

இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?

படைப்புத் தொழிலைக் கைவிட்டு, வெறும் சூன்யத்தில் கலந்து மோனத் தவத்தில் ஆழ்ந்து கிடக்கலாமே? உயிர்களற்ற வெறும் பிண்டமான அண்டத்தைக் கண்டு ரசித்துக் காலம் கழிக்கலாமே? அதை விடுத்து.....

உயிர்களைப் பரிதவிக்கச் செய்யும் பாவச் செயலை ஏன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்?

தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த நபரையா மக்கள் இத்தனை காலமும் வழிபட்டார்கள்? இனியும் வழிபடப் போகிறார்கள்?!

தங்களின் வருகைக்கு நன்றி.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

திங்கள், 22 அக்டோபர், 2018

'பெண்' உருவில் மூன்று பேய்கள்!!!

'தமிழ் இந்து'[22.10.2018] நாளிதழில் வெளியான ஒரு செய்தியை உள்ளது உள்ளவாறே பதிவு செய்திருக்கிறேன். பதிவின் தலைப்பு மட்டுமே என்னுடைய கைங்கரியம்!
கடந்த 2014 நவம்பரில் ஓடும் பேருந்தில் 3 இளைஞர்களை, அக்காவும் தங்கையும் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை யாரும் மறந்திருக்க முடியாது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால் 3 பேரையும் அடித்துத் துவைத்ததாகச் சகோதரிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.
அந்தச் சகோதரிகள் ஹரியாணாவின் ரோட்டக் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, பூஜா. அவர்களுக்கு ‘வீரமங்கைகள்' என்று ஊடகங்கள் பட்டம் சூட்டி மகிழ்ந்தன. குடியரசு தின விழாவில் ஹரியாணா அரசு, இருவருக்கும் தலா ரூ.31,000 பரிசுத்தொகை வழங்கியது. பல்வேறு பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. இரு மாணவிகளும் கல்லூரிக்குச் செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ரோட்டக் சிறப்புப் புலனாய்வுப்பிரிவுப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
பேருந்துப் பயணத்தின்போது மூதாட்டி ஒருவரின் இருக்கையை ஆர்த்தியும் பூஜாவும் ஆக்கிரமித்துள்ளனர். இதை ஆட்சேபித்த கல்லூரி மாணவர்கள் தீபக், மோஹித், குல்தீப் ஆகியோர் மூதாட்டிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். ஆத்திரமடைந்த அக்காவும் தங்கையும் 3 மாணவர்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதை செல்போனில் படம் பிடிக்குமாறு தங்கள் தோழியிடம்[இவளையும் சேர்த்ததால் பேய்கள் மூன்றாயின!] கூறியுள்ளனர். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள், 3 மாணவர்களுக்கு ஆதரவாகப் போலீஸில் வாக்குமூலம் அளித்தனர். சகோதரிகளிடமும் மாணவர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனையைப் போலீஸார் நடத்தினர். இதில் ஆர்த்தியும் பூஜாவும் அப்பட்டமாகப் பொய் கூறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ரோட்டக் நீதிமன்றம், கடந்த 2017 மார்ச்சில் 3 மாணவர்களும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி அளித்த தீர்ப்பில் 3 பேரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்தது.
எதிர்காலம் பாழானது
தீர்ப்பு குறித்துத் தீபக்கும் குல்தீபும் கூறியபோது, ‘‘வழக்கிலிருந்து விடுதலையாகிவிட்டோம். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டது. கல்லூரிபடிப்புக்குப் பிறகு ராணுவத்தில் சேரத் திட்டமிட்டிருந்தோம். ராணுவம், துணை ராணுவப் படைகளில் இணைய அதிகபட்ச வயது 23. இப்போது எங்களுக்கு 24 வயதாகிவிட்டதால் ராணுவத்தில் சேர முடியாது. போலிப் புகாரால் எங்கள் வாழ்க்கை பாழாகிவிட்டது’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
பாலியல் வழக்கால் தீபக்கின் கல்லூரிப் படிப்பும் பாதியில் நின்றுவிட்டது.
மோஹித் கூறியபோது, ‘‘டெல்லி போலீஸ் பணியில் சேர வேண்டும் என்பது எனது சிறுவயது லட்சியம். பாலியல் புகார் வழக்கால் அது கனவாகிவிட்டது. நானும் எனது பெற்றோரும் சமுதாயத்தில் சந்தித்த அவமானங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனது தாயார் வெளியில் செல்லும்போது பர்தா அணிந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்’’ என்று தெரிவித்தார்.
ஊடகங்கள் மீது புகார்
மூன்று மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தீப் ரதி கூறியபோது, ‘‘பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே செய்திகள் வெளியிடப்படுகின்றன. ரோட்டக் சகோதரிகளுக்கு ‘வீரமங்கைகள்' என்று பட்டம் சூட்டிய ஊடகங்கள், 3 மாணவர்களையும் அரக்கர்களைப் போன்று சித்தரித்தன. வீடியோ வெளியானபோது நாள்தோறும் பரபரப்பாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், 3 மாணவர்களும் விடுதலைசெய்யப்பட்ட செய்தியை யாருமே கண்டுகொள்ள இல்லை.
போலிப் புகாரால் எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் 3 பேரும் அப்பாவிகள் என்பதை ஊடகங்கள் உரக்க அறிவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஒருதரப்பாகச் செய்தி வெளியிடுவதைத் தவிர்த்து இருதரப்பு நியாயத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'தமிழ் இந்து' நாளிதழ்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

பெண்ணினமே...பொறுத்தது போதும்!!!

பெண்களே.....

ஆடவரைக் காட்டிலும் நீங்கள் பக்தியில் சிறந்தவர்கள். ஆனால், எந்தவொரு கோயிலிலும் நீங்கள் அர்ச்சகராகப் பணி செய்ய அனுமதிக்கப்பட்டதில்லை. கோயில்களை நிர்வகிப்பவர்களும் ஆண்களே.

பெண்ணைத் தெய்வம் என்றார்கள். விதம் விதமான பெயர்களில் கோயில்களில் குடியேற்றினார்கள்; சிலை வைத்து வழிபட்டார்கள். ஆனால், அந்தப் பெண் தெய்வங்களுக்குப் பூசை செய்யும் உரிமைகூட உங்களுக்கு வழங்கப்பட்டதில்லை. 


இந்துக் கோயில்கள் என்றில்லை, கிறித்தவம், இஸ்லாம் போன்ற பிற மதக் கோயில்களிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் ஆண்களே. கோயில்களைக் கூட்டிப் பெருக்கவும் பூத்தொடுத்துக் கொடுக்கவும் மட்டுமே நீங்கள் பணியமர்த்தப்பட்டீர்கள்.

கடந்த காலங்களில் கணவர்களையே கடவுளாக வழிபட்டவர்கள் நீங்கள். இப்போதும்கூட, அவர்கள் கைகாட்டும் கடவுள்களைத்தான் வழிபடுகிறீர்கள்.

ஆண்களில் நாத்திகர்கள் உண்டு. உங்களில் வலைவீசித் தேடினாலும், ''நான் கடவுள் மறுப்பாளி'' என்று சொல்லும் பெண்களைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல.

பட்டறிவு காரணமாக, பக்திமானாக இருந்து நாத்திகனாக மாறும் ஆடவரைக் காண முடியும். நீங்களோ, கணவனுக்காகவும் பெற்றெடுத்த பிள்ளைகளின் நலனுக்காகவும் கடவுளை நேர்ந்துகொள்பவராகவே காலம் கழிக்கிறீர்கள்.

பக்தியால் நீங்கள் பயன் பெறுகிறீர்களோ இல்லையோ, உண்மையில் பக்திநெறிக்குச் சிறிதும் பங்கம் நேராமல் பாதுகாப்பவர் நீங்களே. கற்பனையில் உருவாக்கப்பட்ட பல கடவுள்கள் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருப்பது உங்களால்தான்.

நீங்கள் இழிவுபடுத்தப்படுவதைக் கண்டுகொள்ளாத கடவுள் கடவுளே அல்ல; அந்தவொரு கடவுளை மட்டுமல்ல, இந்த அவலத்தை வேடிக்கை பார்க்கும் எந்தவொரு கடவுளும் உங்களுக்கு வேண்டாம்.
வேண்டாம்...கடவுள் வேண்டாம்...கடவுள்களும் வேண்டாம்.

''ஒழிக கடவுள்!...ஒழிக கடவுள்கள்!!'' என்று முழங்குங்கள். பருவப் பெண்களே[10 - 50].....உரத்த குரலில் முழங்குங்கள்.
=======================================================================

சனி, 20 அக்டோபர், 2018

சபரிமலைப் பிரச்சினைக்கு 'ஆன்மிக அரசியல்வாதி' வழங்கிய தீர்வு!!!

''சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனால், கோயில் சடங்குகளிலும் ஐதீகங்களிலும் எவரும் தலையிடக் கூடாது'' -இது, சற்று முன்னர்[20.10.2018, நண்பகல் 12.00] ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஆன்மிக அரசியல்வாதி கூறியது[ஆதாரம்: 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் அறிவிப்பு]

செய்தியறிந்து, தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது!!!

அவரளித்த  பேட்டி: https://youtu.be/KOmP_DchWI0

'10 முதல் 50 வரையிலான வயதுக்கு உட்பட்ட பெண்கள்[காம இச்சையைத் தூண்டுபவர்கள்] சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஐதீகம். குறிப்பிட்ட வயதிலான அந்தப் பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ந்தத் தீர்ப்பு, காலங்காலமாய்க் கடைபிடிக்கப்பட்ட ஐதீகத்தை மீறுவதாகத்தான் உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் ஆன்மிக அரசியல்வாதி[நடிகர் ரஜினி], ஐதீகத்தில் தலையிடக் கூடாது என்கிறாரே, இது எப்படிச் சாத்தியம் என்று குழம்புகிறீர்களா?

குழம்பவேண்டாம்.
ஆழ்ந்து சிந்தியுங்கள். அதி தீவிரமாகச் சிந்தியுங்கள். ரஜினி என்ன சொன்னார் என்பது   உங்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்.

புரியவில்லை என்றால்.....

உங்களின் அறிவுக் குறைபாட்டை எண்ணித் தலைதலையாய் அடித்துக்கொள்ளுங்கள்! நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்!!

ராவணன் சாபம்!!!!!

எப்போதோ செத்துப்போன ராவணனை மீண்டும் சாகடிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் 'தசரா' பண்டிகை இந்த ஆண்டும் 'பஞ்சாப்' மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் நடந்தது[20.10.2018 ஊடகச் செய்தி].

இணைப்பு: https://youtu.be/vtgPqMo9wUE

நிகழ்ச்சியில், கட்டுக்கட்டாகப் பட்டாசுகள் சுற்றப்பட்ட பிரமாண்ட ராவண பொம்மை நிறுத்தி வைக்கப்பட்டது[ராவண வதம்]; தீயிடப்பட்டது.

அண்டவெளி கிடுகிடுக்க, அதி பயங்கர ஓசையுடன் ராவணன் வெடித்துச் சிதறலானான்.

மெய் மறந்து, தம் மதியிழந்து, உயிருள்ள ராவணனே வெடித்துச் சிதறுவதாக எண்ணிக் குதூகளித்திருந்தவர்கள், ''ராவணன் ஒழிக!'' என்று விண்ணதிர முழங்கிகொண்டிருக்கையில்.....

நின்ற நிலையில் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த ராவணன் ஒரு புறமாகச் சரிந்து விழலானான். கூடிக் களித்திருந்த மக்கள் கூட்டம் பக்கவாட்டுகளில் சிதறி ஓடலாயிற்று. எங்கும் இருள் சூழ்ந்த அந்த அந்திப் பொழுதில்,  உயிர் பிழைத்திடும் ஆசையில், குறுக்கிட்ட ரயில் பாதைகளையும் கடந்து ஓடினார்கள் மக்கள். இரண்டு பாதைகளிலும் விரைந்து வந்த அதிவேக விரைவு ரயில்கள் அவர்கள் மீது மோதியதால் 70 பேர் பலியானார்கள். மிகப் பலர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஒளிவுமறைவில்லாமல் ஓர் உண்மையை உங்கள் முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளேன். அது.....

ராவணனின் பூத உடம்பு ராமனால் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவனின் சூக்கும தேகம்... அதாவது, 'ஆவி' வானவெளியில் இன்றளவும் சஞ்சரித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

ஆண்டுதோறும், பண்டிகை கொண்டாடுவதாகச் சொல்லித் தான் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு கண்டு மனம் பொருமிக்கொண்டிருந்த அவன், 70க்கும் மேற்பட்ட ராம பக்தர்களின் உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறான். பலரைப் படுகாயம் அடையச் செய்திருக்கிறான்.
நம்புங்கள். இந்தக் கொடூர விபத்தை நிகழ்த்தியவன் ராவணன்...ராவணனே.

எப்போதோ கல்யாணம் கட்டிக்கொண்டதாக எவரோ எப்போதோ கட்டிவிட்ட கதையை நம்பி இப்போதும் சில சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைக்கிறார்கள்.

எவரோ கட்டிவிட்ட கதையை நம்பி இப்போதும், தாமே கந்தக் கடவுளாக மாறிச் சூரனைச் சம்காரம் செய்து ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

இப்படி, எத்தனை எத்தனையோ பொய்க்கதைகளை நம்புகிறவர்கள் நான் சொல்லுகிற இந்த உண்மைக் கதையை மனப்பூர்வமாக நம்பலாம். நம்புவதால் நம்புகிறவர்களுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை.

இல்லை.....இல்லவே இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------
விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் காயமுற்றவர்களுக்காகவும் மனப்பூர்வமாய் வருந்துகிறேன்.

வெள்ளி, 19 அக்டோபர், 2018

'கடவுள் ஒருவரே' என்று சொன்னவன்.....?

இவ்வுலகில் வழிபடப்படுபவர்கள்.....

ஈஸ்வரன், அல்லா, மகா விட்ணு,  காக்கும் கர்த்தர் என்று பல மதம் சார்ந்த கடவுள்கள்.

முனியாண்டி, முனியப்பசாமி, கருப்புசாமி, ஐயனார், மெய்யனார்னு ஜாதி சார்ந்த கடவுள்கள்.

ஆதி முதல் ஆதிக்கம் செலுத்திவரும் ஆண் கடவுள்கள்.

ஈஸ்வரி, பரமேஸ்வரி, பத்மாவதி, பச்சைநாயகி, மாரியம்மா, காளியம்மா என்று அருள்பாலிக்கும் வகை வகையான பெண் கடவுள்கள். 

ஐயப்பன், மெய்யப்பன், ஆஞ்சநேயன்னு வாலிப வயதிலும் பிரமச்சரியம் காக்கும் கடவுள்கள்.

மலையப்பசாமி, சுப்பிரமணியசாமின்னு இரண்டு பெண்டாட்டி கட்டிய  அதிர்ஷ்டக் கடவுள்கள்.

பக்தியைச் சோதிக்கிறேன் பேர்வழி என்று பக்தனின் உத்தம மனைவியைத் தன் பஞ்சணைக்கு அழைத்த கடவுள்கள்.

கள்ளப் புணர்ச்சிக்கு அலையும் தேவாதி தேவக் கடவுள்கள்.

ஊத்தை உடம்புடன் மண்ணில் நடமாடி இன்று சொர்க்கத்தில் நடமாடுவதாக நம்பப்படும் 'மகா பெரிய' கடவுள்கள்.

இவர்களைப் போல இன்னும் [இங்கே] எத்தனை எத்தனையோ கடவுள்கள்![அவர் ஒருவரே. மக்கள் வெவ்வேறு பெயர்களில் அவரை வணங்குகிறார்கள் என்பது வெற்றுரை; சப்பைக்கட்டு!]

உண்மை இதுவாக இருக்க....

''கடவுள் ஒருவரே'' என்று சொன்னவன்..... 

அறிவிலியா, நம் அனுதாபத்திற்குரியவனா?
*************************************************************************************************

வியாழன், 18 அக்டோபர், 2018

இன்னும் ஒரு பிரமச்சாரிக் கடவுள்!!!!!

சபரிமலை ஐயப்பசாமி பிரமச்சாரிக் கடவுள் என்பதால், அவரைத் தரிசனம் பண்ணப் பருவப்பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சபரிமலைக்குப் பத்து முதல் ஐம்பது வயது வரையிலான வயதுடைய  பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று பல இந்துமத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆயினும், நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்துவதில் கேரள அரசு மிக உறுதியாக உள்ளது.

நேற்று[17.10.2018], சபரிமலைக் கோயிலின் நடை திறக்கப்பட்ட நிலையில், மேற்குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் ஐயப்பனைத் தரிசிக்கச் சென்றபோது, தீவிர ஐயப்ப பக்தர்களால் அவர்கள் வழிமறித்துத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காவல்துறைப் பாதுகாப்புடன் சென்ற பெண் நிருபர்களும் கல் வீசித் தாக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மீது பக்தர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்த, காவல்துறையினரும் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். மோதல் தொடர்கிறது.

இந்நிலையில், கடவுளின் தேசத்தில் பல்வேறு ஆன்மிக அமைப்புகள் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு [பந்த்] அழைப்பு விடுத்துள்ளன.

சபரிமலை ஐயப்பன் என்னும் ஒரு பிரமச்சாரிக் கடவுளைப் பருவப் பெண்கள் நேரில் தரிசித்தல் கூடாது என்பதில் உறுதி காட்டும் பக்தகோடிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தோன்றுகிறது. போராட்டத்தை ஒடுக்குவதில் கேரள அரசும் உறுதியாக உள்ளது.

தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு செய்யுமோ செய்யாதோ, விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து, மலையாள தேசத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே நம் போன்றோர் விருப்பம். மாறாக.....

பிரமச்சாரிக் கடவுளான ஐயப்பன் பொருட்டு நடக்கும் போராட்டம் தொடருமேயானால்.....

''ராமன் ஏகபத்தினி விரதன்; அவர் சீதையைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதால் கூட நினைக்கமாட்டார்; வேறு எந்தப் பெண்ணும் அவரை நினைக்கக் கூடாது. ஆகவே,  ராமர் கோயிலுக்குள்ளும்,  அனுமன் பிரமச்சாரி[இராமனின் தொண்டனாக விளங்கிய அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர் என்கிறது தமிழ் விக்கிப்பீடியா. 'ராம லக்ஷ்மணர்களைக் காப்பதற்காக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது, அவரது உடலில் பெருக்கெடுத்த   வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது' என்றொரு கதையும் உண்டு]  என்பதால், அனுமன் கோயிலுக்குள்ளும் பருவப் பெண்களை அனுமதிக்கக் கூடாது''* என்றதொரு கோரிக்கையை முன்வைத்து, புதியதொரு போராட்டத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்குவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது; மனதில் கவலை படர்கிறது.
எனவே, பொது அமைதி காப்பதில் மத்திய மாநில அரசுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்; வேண்டுகோள்!
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
*பதிவொன்றில் வாசிக்க நேர்ந்தது. அதன் முகவரியைச் சேமிக்கத் தவறினேன். பின்னர் தேடியும் கண்டறிய இயலவில்லை. வருந்துகிறேன்.

புதன், 17 அக்டோபர், 2018

வையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்!!!

ஐயப்ப பக்தர்களே,

ஐயப்பசாமியின் தோற்றம் குறித்தோ, அவரின் அளப்பரிய சக்தி குறித்தோ, அவர் மீதான உங்களின் மெய்யான பக்தி குறித்தோ கேள்வி எழுப்புவது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல...அல்லவே அல்ல. நம்புங்கள். சபரிமலை ஐயப்பசாமியைத் தரிசிக்கும் வாய்ப்பு, பருவப்பெண்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது குறித்து என் எண்ணங்களைப் பதிவு செய்வது மட்டுமே.

பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்?

ஐயப்பசாமி பிரமச்சாரிக் கடவுள். அவரைத் தரிசிக்கச் சபரிமலை செல்லும் பக்தர்களும், காமம், குரோதம், வெகுளி, மயக்கம் போன்ற தகாத உணர்வுகளைக் கட்டுப்படுத்த விரதம் இருப்பவர்கள். காம உணர்வைத் தூண்டும் பருவ வயதுப் பெண்கள் சபரிமலைக் கோயிலில் அனுமதிக்கப்பட்டால், சாமியின் பிரமச்சரியம் கலையும்; உங்களின் விரதம் சீர்குலையும் என்று நம்புகிறீர்கள்.

உங்களின் நம்பிக்கை மெய்யானது எனின் ஒரு சந்தேகம்.....

இந்த வையகம், ஒன்று முதல் ஆறு வரையிலான அறிவு படைத்த கோடானுகோடி உயிர்களின் வாழ்விடமாக உள்ளது. சபரிமலையும் ஒரு வாழ்விடம்தான்.

உயிர்களின் இனப்பெருக்கத்திற்கு மூலகாரணமான 'ஆண் - பெண்' புணர்ச்சி மண்ணுலகம் எங்கும் நிகழ்வது போலவே, சபரிமலையிலும் நிகழவே செய்யும்.
சின்னஞ்சிறிய உயிர்களின் சேர்க்கை கண்ணுக்குத் தட்டுப்படா எனினும், பறவைகள், விலங்குகள் போன்றவை புணர்ந்து இன்புற்றிருக்கும் காட்சிகள் நிச்சயம் உங்களின் பார்வையில் படவே செய்யும். விரதம் இருக்கும் உங்களின் மன உறுதியை அம்மாதிரிக் காட்சிகள் சோதிக்காவா? சாமியின் பிரமச்சரியத்தைப் பாதிக்காவா?

''பாதிக்கா'' என்பது உங்களின் பதிலாயின், உரிய முறையில் பாதுகாப்பாக ஆடை உடுத்துவரும் பருவ வயதுப் பெண்களைக் பார்ப்பது மட்டும் எப்படிப் பாதிக்கும்?

என்னதான் மனதைக் கட்டுப்படுத்த விரதம் இருந்தாலும், மனம் என்னும் குரங்கு கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த, சந்தித்த அழகுப் பெண்களைக் கற்பனை செய்து உங்களின் விரதத்திற்கு மிக மிக மிகக் கொஞ்சமே கொஞ்சமேனும் பங்கம் விளைவிக்காதா?

''விளைவிக்காது'' என்று 100% உறுதிபட உங்களால் உரைக்க இயலுமா?

கடும் விரதத்தால், இரும்பனைய மன உறுதியைப் பெற்றுவிடும் உங்களால், சபரிமலைக்கு வருகை புரியும் பருவ வயதுப் பெண்களை உடன் பிறந்த சகோதரிகளாக நினைக்க முடியும்தானே?

அப்புறம் ஏன் அவர்களின் வருகையை எதிர்க்கிறீர்கள்?!

மாதவிடாய் நிகழ்வு வெகு இயற்கையானது; வயிற்றில் தேக்கி வைத்திருந்து வெளியேற்றும்போது கெட்ட வாசனை பரப்பும் மலம் போன்றது அல்ல. ஆனால், மாதவிடாய்ப் பெண்களைத் தீண்டத் தகாதவர்கள் ஆக்கியதோடு சபரிமலைப் பயணத்துக்குத் தகுதி அற்றவர்களாகவும் ஆக்கிவிட்டீர்கள். உங்கள் செயலில் நியாயம் இருப்பதாகவே கொள்வோம். அந்தச் சில நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் அவர்களையும் அனுமதிக்கலாமே? 

இனியேனும் சிந்திப்பீர்களா?

இறுதியாக, என்னை வாட்டி வதைக்கும் மனக்குமுறலை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இனவிருத்திக்காகக் கருவைச் சுமப்பதான தியாகச் செயல் புரியும் பெண்களிடமிருந்து வெளிப்படும் மாதவிடாய் நீங்கள் நினைப்பதுபோல் அசுத்தமானது என்றால்.....

இந்த 'அசுத்த'ப் பெண்களை படைத்தவர் யார்? 

தான் படைத்த கோடானுகோடி உயிர்களுக்கிடையே, சபரிமலையில்[மட்டும்] நுழையக்கூடாத இழிபிறவியாக இவர்களைப் படைத்ததில் உங்கள் ஐயப்பனின் பங்கு என்ன?

''எதுவும் இல்லை'' என்பது உங்களின் பதிலாயின்.....

அதைச் செய்தவர் வேறு யாரோ ஒரு கடவுள். 

''அவர்...அல்ல அல்ல, அவன் ஒழிக...ஒழிக'' என்று உரத்த குரலில் முழங்குகிறேன்...இனியும் நான் முழங்கிக்கொண்டே இருப்பேன்.

செவ்வாய், 16 அக்டோபர், 2018

'அந்த' எழுத்தாளர் மீது மேலும் ஒரு '#Me Too' பெண் புகார்!!!!!

சற்று முன்னர் ஊடகங்களில்  வெளியான ஒரு செய்தி.....

#ஏற்கனவே, '#Me Too' இயக்கத்தைச் சேர்ந்த பல பெண்களின் பாலியல் தொடர்பான குற்றச் சாட்டுகளால் கதி[மதி]கலங்கி நிற்பவர் 'அந்த'ப் 'பிரபல' எழுத்தாளர். இப்போது, 10 வயதுச் சிறுமி ஒருத்தியும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்#
செய்தி வெளியிட்ட ஊடகங்களில் 'இளைய தலைமுறை'யும் ஒன்று. அந்த ஊடகத்திற்கு[தொலைக்காட்சி], பிரபலத்தின் மீது குற்றம் சுமத்திய சிறுமி அளித்த பேட்டி.....

நிருபர்: உங்க பெயர்?

சிறுமி: பைந்தமிழ்க்கொடி

நிருபர்: வயசு?

சிறுமி:  பத்து

நிருபர்: பிரபல எழுத்தாளர் உங்களை வன்புணர்வு செய்ததாகச் சொல்றீங்க. அந்தத் துயரச் சம்பவம் குறித்து விவரமாகச் சொல்ல முடியுமா?

சிறுமி: அப்போ நான் ஒரு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவி.....

நிருபர்: [அதிர்ச்சியடைந்தவராக] வயசு பத்துன்னு சொன்னீங்க. இப்போ கல்லூரி மாணவின்னு......

சிறுமி: பொறுமையாக் கேளுங்க. அப்போ நான் கல்லூரி மாணவி. அந்த எழுத்தாளருடைய கவிதைகள்னா எனக்கு உசுரு. அவரை நேரில் சந்திச்சிப் பாராட்ட ஆசைப்பட்டேன். அந்த ஆசை ஒரு கட்டத்தில் வெறியாவே மாறிடிச்சு. எங்க ஊர்ப்பக்கம் அவர் வந்தா எப்படியும் சந்திச்சிப் பேசிடறதுங்கிற முடிவோட காத்திருந்தேன்.

நிருபர்: அந்த வெறி எப்போ காதலா மாறிச்சி?

சிறுமி: [கோபத்துடன்] இந்தக் குசும்புதானே வேண்டாங்கிறது. காதலெல்லாம் இல்ல. நான் அவருடைய ரசிகையா மட்டுமே இருந்தேன்..... அது வந்து அப்புறம்.....

கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தார்.....

''எங்க கல்லூரி இலக்கியப் பேரவையில் சொற்பொழிவு நிகழ்த்த வந்திருந்தார் அவர். அவர் பேசி முடிச்சதும் மத்தப் பெண்களோட நானும் ஆட்டோகிராஃப் குறிப்பேட்டை நீட்டினேன். என்னைக் கொஞ்ச நேரம் ஒரு மாதிரியா உத்துப் பார்த்துட்டுக் கையெழுத்து இட்டதோட, தான் தங்கியிருந்த விடுதியின் முகவரியையும் எழுதியிருந்தார். நான் எதிர்பார்த்திருந்த வாய்ப்புக் கிடைச்ச சந்தோசத்தோடு அவர் தங்கியிருந்த அறைக்குப் போனேன். கவிதை நடையில் பேசிப் பேசியே என்னை வசியம் பண்ணிக் கெடுத்துட்டார். அவர் இப்படிப்பட்ட ஆளுன்னு எனக்குத் தெரியாம போச்சு'' என்று சொல்லி, சிறிது நேரம் தேம்பித் தேம்பி அழுதாள் சிறுமி.

ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்துக்குப் பதில் கிடைக்காத நிலையில் தலையைச் சொறிந்துகொண்டிருந்த நிருபர், ''இப்போ உங்களுக்கு வயசு பத்து. கல்லூரி மாணவியா இருந்தபோது அவர் உங்களைக் கெடுத்துட்டதாச் சொல்றீங்க. கனவு ஏதும் கண்டீங்களா?'' என்றார்.

''கனவல்ல; 100% நிஜம்.''

''குழப்புறீங்களே..."

''குழப்பவெல்லாம் இல்ல. இந்தச் சோகச் சம்பவம் நடந்தது என்னுடைய போன பிறவியில். அப்போ என் வயசு பதினேழு. எழுத்தாளருக்கு முப்பது வயசு[இப்போ 64] இருக்கலாம். அவருக்குத் திருமணமும் ஆகியிருந்தது. என் கற்பை இழந்த அன்னிக்கே, அவர் மீது இருந்த மரியாதை காரணமா, 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லே'ன்னு எழுதி வெச்சிட்டுத் தற்கொலை செய்துகிட்டேன். கொஞ்ச வருசங்கள் ஆவியா அலைஞ்சேன். பத்து வருசம் முன்னாடி தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பொண்ணாப் பிறந்தேன். நேத்திக்கு முந்தைய நாள்தான் கடந்த பிறவியில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் என் நினைவுக்கு வந்திச்சி. '#Me Too' இயக்கத்தில் சேர்ந்தேன். எழுத்தாளர் எனக்குச் செய்த துரோகத்தை அம்பலப்படுத்தினேன்'' என்றாள் சிறுமி.

சிறுமிக்கு நன்றி சொன்னதோடு, விதம் விதமான 'போஸ்'களில் அவளைப் படமும் எடுத்துக்கொண்டார் 'இளைய தலைமுறை'த் தொலைக்காட்சி நிருபர்.
=======================================================================''IndiBlogger' இன் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது இப்பதிவு. 


ஞாயிறு, 14 அக்டோபர், 2018

வெங்காயக் கிரகங்கள்!!!

ஜோதிடப் புரட்டுகள் குறித்துக் கணிசமான பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சிறியதாயினும் கருத்தமைவில் மிகமிகப் பெரியது. தவறாமல் வாசியுங்கள்.

வானியல் குறித்த அறிவியல் வெகுவாக வளர்ந்துள்ள நிலையில்.....

ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்கிவிடுவதால் சந்திரன் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும், அதுவே சந்திர கிரகணம் என்று இன்றளவும் புளுகிக்கொண்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, சந்திரன் மீது சூரிய ஒளி  படுவதில்லை. சந்திரன் மீது இருள் படிவதால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.  இவ்வுண்மை, குறைந்தபட்ச அறிவியல் அறிவு உள்ளவர்களுக்குக்கூடத் தெரியும்.

மற்றபடி, சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றுக்குமான இடைவெளிகளிலோ, வேறு இடங்களிலோ பாம்பு பூரான் என்று எந்தவொரு ஜந்துவும் சுற்றிக்கொண்டிருக்கவில்லை.

ராகு கேது என்ற பெயரில் கோள்கள் ஏதும் இல்லை என்று அறிவியலாளர் அறிவித்த பின்னரும், அவை மற்ற கிரஹங்களைப்[கோள்கள்] போல் கண்களால் கண்டறியத் தக்கன அல்ல; அவை நிழல் உருவம் கொண்டவை என்று ஜோதிடர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதுபோல், வானவெளியில் நிழல் வடிவக் கோள்கள் ஏதும் இல்லை என்கிறது இன்றைய அறிவியல்[ஆதார நூல்: 'அறிவியல் உண்மைகளும் அரிய செய்திகளும்', மணிவண்ணன் பதிப்பகம், மேற்கு மாம்பலம், சென்னை].

ஆனாலும், அவர்கள் தொடர்ந்து 'ராகுகேது'க்களை இணைத்தே பலன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்[பெரியார் அடிக்கடி பயன்படுத்திய 'வெங்காயம்'தான் நினைவுக்கு வருகிறது].

ஜோதிடர்கள் பொய் சொல்கிறார்கள்; சொல்லிவிட்டுப் போகட்டும். அலையலையாய் இன்றளவும் அவர்களைத் தேடிச் செல்கிற கூட்டத்தை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?!
------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 12 அக்டோபர், 2018

இந்தத் 'தில்' கிழவனைத் தினமும் நினையுங்கள்!!!

இந்த ஆண்டு[2018], இயற்பியலுக்கான  நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர்,  ”ஆப்டிகல் டிவீசர்ஸ்” எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறுகிறார். பரிசுத் தொகையான 6.5 கோடி ரூபாயில்[மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது] 50 சதவிகிதத்தை இவர் பெறுகிறார்.
சதம் அடிக்க நான்கே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்படியொரு பரிசைப் பெற்று உலகோரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இந்தக் கிழவர். ஆனால், இதை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையாம்.

அவருடனான ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியும் அவரின் பதிலும்..... 

“அய்யா நீங்கள் மிகப்பெரிய உலக சாதனை புரிந்திருக்கிறீர்கள். அதற்காக உலகளவிலான அங்கீகாரமும் உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, உங்களை நாங்கள் நேர்காணல் செய்யவேண்டும்.........”
“மன்னிக்கவும். நான் அடுத்த சாதனைக்கான ஆராய்ச்சி அலுவல்களில் மும்முரமாக இருப்பதால் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.”  

கிழவர் அப்படியென்ன செய்துவிட்டார்?  

'சிறிய பாகங்களைப் பிடித்துக்கொள்வதற்காக ஒரு இடுக்கி (ட்வீஸர்) பயன்படுத்தப்படுவதை,  நாமெல்லாம் 'வாட்ச் ரிப்பேர்', 'மொபைல் போன் ரிப்பேர்' கடைகளுக்குச் சென்றிருந்தால் பார்த்திருப்போம் இல்லையா? அதுபோல நானோ, மைக்ரோ துகள்களில் நடைபெறும் அணு ஆராய்ச்சிகளில் கண்களுக்கே புலப்படாதா ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள ஒரு உபகரணம் வேண்டுமென்பதை உணர்ந்து இவர் தொடங்கிய ஆராய்ச்சிதான் 'ஆப்டிகல் ட்வீஸர்'. லேசர்  உயர் ஒளிக்கற்றைகளைச் செலுத்தி அவை தரும் அழுத்தத்தின்மூலம் பிடித்துக்கொள்ளும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததுதான் இவரது சாதனை. குறிப்பாக, தற்போது 'லேசர்' மூலம் செய்யப்படும் கண் அறுவைச் சிகிச்சையின் போது பேருதவி புரியும் என்று மருத்துவத்துறை மகிழ்கிறது.
அமெரிக்காவின் பெல் ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருக்கும் இவர், இயற்பியலின் ஒளியியல்துறையில் மிகப்பெரிய சாதனைபுரிந்து, 96 வயதில் (இவர்தான் உலகிலேயே இதுவரை 'நோபல்' பெற்றிருப்பவர்களில் மூத்த வயதுடையவர்) 2018ஆம் ஆண்டுக்கான பரிசினை (மூன்றிலொருவராகப்) பெற்றிருக்கிறார். இவரிடம் இன்று செய்தியாளர் கேட்டபோதுதான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
ஆமா, அப்படியென்ன அடுத்த ஆராய்ச்சி?
'சூரியசக்தியினை ஆக்கபூர்வமாக்குவது எப்படி?' என்பதாம்.'
கில்லாடிக் கிழவர்தான்!
நடுத்தர வயதைக் கடந்துவிட்டாலே, நமக்காகக் கதவு திறந்து வைத்துக் காத்திருக்கும் மரணத்தை எண்ணி மனம் கலங்குகிறோம். இந்தக் குடுகுடு கிழவருக்கு மட்டும் சாவுக்கு அஞ்சாத மனதிடமும் கொள்கைப் பிடிப்பும் வாய்த்தது எப்படி?

அது எப்படியானதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், தினமும் ஒரு முறையாவது இந்தக் கிழவனை நினைப்போம். சாதி, மதம், சாமி, பூதம், சொர்க்கம், நரகம் என்று சொல்லித் திரியும் சுயநலவாதிகளைப் புறந்தள்ளிச் சுயசிந்தனையுடன், வாய்த்த அற்ப வாழ்நாளை அமைதியாகவும் பயனுள்ள வகையிலும் வாழ்ந்து முடிப்போம்.

நன்றி.

இப்பதிவும், IndiBlogger முகப்புப் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது.