சில நாட்கள் முன்புவரை, உலகிலேயே தமிழன்தான் அதி புத்திசாலி என்னும் நம்பிக்கையில்[“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாரதி சொன்னதை நினைவுகூர்க] இறுமாப்புடன் ஏறு போல் பீடு நடை போட்டுப் பிற இனத்தவரைப் பொறாமையில் புழுங்கச் செய்துகொண்டிருந்தோம்.
இன்றோ, உலகிலேயே 'நம்பர் 1’ முட்டாள் தமிழன்தான் என்று நிரூபணம் ஆகிவிட்ட நிலையில்[நடிகன் விஜய் நிகழ்வில் பலர் உயிரிழப்பு & படுகாயம்], தலை குனிந்து தள்ளாடி நடந்துகொண்டிருக்கிறோம்.
நடிகன்கள் பல மணி நேரம் தாமதமாக வருவதே இம்மாதிரியான அவலங்கள் நிகழ வேண்டும் என்பதற்காகத்தான்.
மக்களிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பிறர் அறியச் செய்வதற்காக அவன்கள் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.
இது புரியாத செம்மறி ஆடுகளாகத் தமிழர்கள் ஆகிப்போனது தமிழின வரலாற்றில் இடம்பெறாத பேரிழிவு ஆகும்.
இனியேனும் தமிழன் திருந்துவானா? எப்போது?
திருத்துவார் யார்?!

