எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

பொன்முடியின் ‘ஆபாசப் பேச்சு’... புரியாதவர்களுக்காக!

விலைமாதர் இல்லத் தலைவிக்கும் வாடிக்கையாளனுக்கும் இடையிலான ‘மறைமுக உரையாடலை, சைவ & வைணவச் சமய அடையாளங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி பேசியதை, அமைச்சர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டித்தார்கள் என்பதைத்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. அவரின் கண்டனத்துக்கு உள்ளான உரையை வாசிக்கும் பேறு[ஹி... ஹி... ஹி!!!] வாய்க்காமல் வருந்தியவர்களில் அடியேனும் ஒருவன்.

நீண்ட நேரத் தேடலுக்குப் பின்னர், ‘யூடியூப்’ காணொலி ஒன்று என் வருத்தத்தைப் போக்கியது.

அமைச்சரின் அந்தக் காணொலிப் பேச்சின் மூலம்தான், விலைமாதர் விடுதிகளில், நின்றுகொண்டோ[வாடிக்கையாளனும் விலைமாதும்] நீட்டிப் படுத்த கோலத்திலோ உடலுறவு கொள்வதற்குத் தனித் தனி ‘ரேட்’ உண்டு என்பதை அறிய முடிந்தது.

இந்த அசிங்கத்தை அம்பலப்படுத்தியதோடு அமைச்சர் தன் பேச்சை முடித்துக்கொண்டிருந்தால் வசுவுகளுக்கு உள்ளாகி அவர் வதைபட்டிருக்கமாட்டார்.

அவர் செய்த மாபெரும் தவறு.....

அந்தப் ‘பலான’ இடத்து ‘நின்றும் நீட்டிப் படுத்தும்’ செய்யும் ஆபாச நிகழ்வைச் சைவ&வைணவ மதக் குறியீடுகளுடன் ஒப்பிட்டதுதான்.

ஒப்பீட்டை, பலான விடுதித் தலைவிக்கும் வாடிக்கையாளனுக்கும் இடையேயான உரையாடல் மூலம் அறியச் செய்திருக்கிறார் அமைச்சர்.

உரையாடல்:

பலான இல்லத் தலைவி: “இது விசயத்தில் நீங்க வைணவமா சைவமா?”

வாடிக்கையாளன்:[கேள்வியின் பொருள் புரியாமல்] “புரியலையே”

தலைவி: “வைணவம்னா[நின்றுகொண்டு.....!] அஞ்சு[ரூபாய்?> எந்தக் காலத்தில்? 1971?]

 சைவம்னா[படுத்த கோலத்தில்....!] பத்து.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு[ஆபாசத்தின் உச்சம்; மூடநம்பிக்கைச் சாடலல்ல]ப் பலரும் கண்டனங்கள் தெரிவித்ததாக அறிகிறோம். 

காணொலி:

சிறுமதியாளன் ‘சித்பவானந்தா’ பள்ளி[கோவை]த் தாளாளனைச் சிறையில் தள்ளுக!!!

கோவை மாவட்டம்  கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தில் உள்ளது ‘சித்பவானந்தா’ பள்ளி.

இப்பள்ளியின் மாணவி ஒருவர் பூப்பெய்திய நிலையில் தேர்வு எழுதச் சென்றார்.

மதத்தின் பெயரால் மடமையை வளர்க்கும் இந்தப் பள்ளி நிர்வாகம் சிறுமியை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்துத் தேர்வு எழுதச் செய்துள்ளது[செய்தி: ‘பாலிமர் தொ.க.> காலை 06.45[11.04.2015]  செய்தி].

பக்தி வேடம் தரித்துத் தங்களை மகா யோக்கியர்களாக மக்களை நம்பவைத்துக் கோடிகளில் கொள்ளை அடிக்கும் அயோக்கியர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவர்களில் பலரும் மூடநம்பிக்கை வளர்ப்பில் முனைப்புடன் செயல்படுபவர்கள்.

‘சித்பவானந்தா’ பள்ளி அவற்றில் ஒன்று.

கொஞ்சமும் தயக்கத்திற்கு இடம்தராமல் பள்ளி உரிமையாளனை{பங்குதார்கள்[?] உட்பட}க் கைது செய்து வழக்கு[இதுவும் வன்கொடுமைதான்]த் தொடுத்துத் தண்டிப்பது தமிழ்நாடு அரசின் தலையாய கடமை ஆகும்[பள்ளியை நடத்தும் பொறுப்பை அரசே ஏற்றல் வேண்டும்].

மு.க.ஸ்டாலின் அவர்கள் தம் கடமையைச் செவ்வனே செய்துமுடிப்பார் என்பது நம் நம்பிக்கை.

                                      *   *   *   *   *

***சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க, பள்ளியின் முதல்வர் மட்டும் பணி ‘இடைநீக்கம்’ செய்யப்பட்டிருக்கிறார் என்பது செய்தி.

                                    *   *   *   *   *

தினகரன்[நாளிதழ்]:

கோவை,ஏப்.10: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ஆம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளியில் தற்போது முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே அந்த மாணவி கடந்த 5ஆம் தேதி பூப்பெய்தினார்.

அதன்பிறகு கடந்த 7ஆம் தேதி மற்றும் நேற்று நடைபெற்ற தேர்வின்போது, மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது அலட்சியமாகப் பதில் கூறியுள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

https://www.dinakaran.com/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/