கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தில் உள்ளது ‘சித்பவானந்தா’ பள்ளி.
இப்பள்ளியின் மாணவி ஒருவர் பூப்பெய்திய நிலையில் தேர்வு எழுதச் சென்றார்.
மதத்தின் பெயரால் மடமையை வளர்க்கும் இந்தப் பள்ளி நிர்வாகம் சிறுமியை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்துத் தேர்வு எழுதச் செய்துள்ளது[செய்தி: ‘பாலிமர் தொ.க.> காலை 06.45[11.04.2015] செய்தி].
பக்தி வேடம் தரித்துத் தங்களை மகா யோக்கியர்களாக மக்களை நம்பவைத்துக் கோடிகளில் கொள்ளை அடிக்கும் அயோக்கியர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவர்களில் பலரும் மூடநம்பிக்கை வளர்ப்பில் முனைப்புடன் செயல்படுபவர்கள்.
‘சித்பவானந்தா’ பள்ளி அவற்றில் ஒன்று.
கொஞ்சமும் தயக்கத்திற்கு இடம்தராமல் பள்ளி உரிமையாளனை{பங்குதார்கள்[?] உட்பட}க் கைது செய்து வழக்கு[இதுவும் வன்கொடுமைதான்]த் தொடுத்துத் தண்டிப்பது தமிழ்நாடு அரசின் தலையாய கடமை ஆகும்[பள்ளியை நடத்தும் பொறுப்பை அரசே ஏற்றல் வேண்டும்].
மு.க.ஸ்டாலின் அவர்கள் தம் கடமையைச் செவ்வனே செய்துமுடிப்பார் என்பது நம் நம்பிக்கை.
* * * * *
***சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க, பள்ளியின் முதல்வர் மட்டும் பணி ‘இடைநீக்கம்’ செய்யப்பட்டிருக்கிறார் என்பது செய்தி.
* * * * *
தினகரன்[நாளிதழ்]:
கோவை,ஏப்.10: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ஆம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளியில் தற்போது முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே அந்த மாணவி கடந்த 5ஆம் தேதி பூப்பெய்தினார்.
அதன்பிறகு கடந்த 7ஆம் தேதி மற்றும் நேற்று நடைபெற்ற தேர்வின்போது, மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது அலட்சியமாகப் பதில் கூறியுள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.