எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

உலகை ஆண்ட முதல் இனம் தமிழினம்!!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆராய்ச்சியாளர் ‘ரோமைன் செமினல்’. மானிட இனத்தின் ‘இனப் பரவல்’ குறித்து உலகளவில் ஆய்வு நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அண்மையில் இவர் ஆய்வுகள் நிகழ்த்தியிருக்கிறார். தமிழினம் குறித்த தம் ஆய்வு முடிவுகளை அண்மையில் அறிவிக்கவும் செய்திருக்கிறார். 

‘நான் அறிந்தவரையில் உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி வாழ்ந்துள்ளனர். தமிழகத்திற்கு ஐரோப்பியர் வருகைபுரியாமல் இருந்திருந்தால், உலகையே தமிழர்கள் தங்களின் ஆளுமையின் கீழ் கொண்டுவந்திருப்பார்கள்’ என்று நம் இனத்தைப் புகழ்ந்துரைத்திருப்பது நம்மைப் பெருமிதத்தில் மிதக்கச் செய்கிறது.

உரிய ஆதாரங்களை முன்வைத்து, தமிழருக்கும் எகிப்தியர்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்பையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

விழுப்புரம் பகுதியில் வசிக்கும் இருளர்களின் மரபணுக்கள், ஆஸ்திரேலியா, மலேசியா, ஜாவா, இலங்கை, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா போன்ற நாட்டு மக்களின் மரபணுக்களுடன் ஒத்திருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்காக ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களைத் தமிழர்கள் இஞ்கு அழைத்துவந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

ஐரோப்பியரும் கிரேக்கரும் உலக அளவில் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முன்பே தமிழர்கள் அந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு நம் இனத்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறார் ஆராய்ச்சியாளர் ரோமன் செமினல்.

தமிழினம் இவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.