எனது படம்
உடல் நலம் குறித்தோ, வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றியோ எழுதினால், அவை வாசிப்போருக்குப் பயன்படக்கூடும். படைப்புத் தத்துவம், நிரந்தரம், நிலையாமை பற்றியெல்லாம் எழுதுவதால் பயன் என்ன? விரிவாகவும் வெகு ஆழமாகவும் இவை சிந்திக்கத் தூண்டுவதால் பயன் உண்டு என்று உறுதிபடச் சொல்லலாம்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

மோடியைப் ‘பின்தொடர்வோர்’[followers] 10 கோடி! அடேஏஏஏஏஏங்கப்பா!!

 ளுந்து வடை, பருப்பு வடை, வாழைப்பூ வடை, கீரை வடை, மசால் வடை என்று விதம் விதமாய் வடைகள் சுடுவதில்[பொய் பேசுவது] இவருக்கு இணையான தலைவர்கள் எவரும் இல்லை.

இவர் வடை சுடுவதைக் கண்டு கண்டு ரசிப்பவர்களா இந்த 10 கோடிப் பேர்?

கைவசம் உள்ள எண்ணற்ற வண்ண வண்ண ஆடைகளால்[நேரத்துக்கு ஒன்று] தன்னை அலங்கரித்து, ஏறு போல் நடை பயில்வதைப் படம் எடுக்கச்செய்து வெளியிடுகிறாரே, அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்படுபவர்களா அவர்கள்?

ஆண்டின் பெரும்பாலான நாட்களில், அயல்நாட்டு உறவை மேம்படுத்துவதாகச் சொல்லி, இவர் உலக நாடுகளுக்குச் சுற்றுலாச் செல்லும் நிகழ்வுகளை, ஊடகங்களில் பார்வையிட்டுத் தாமும் உலகம் சுற்றும் அனுபவத்தைப் பெறுகிறவர்களா அவர்கள்?

இவர் கோயில் கோயிலாகச் சென்று விழுந்து கும்பிடுகையில், தாங்களும் விழுந்து கும்பிட்ட அனுபவத்தைப் பெற்று[ஊடகங்கள் வாயிலாக]ப் புண்ணியம் சேர்க்கிறார்களே அந்தப் பக்திமான்களா அவர்கள்?

அந்த அவர்களின் எண்ணிக்கைதான் 10 கோடி என்றால்.....

10 கோடியில், இன்ஸ்டாகிராமில்[மோடியின் தளத்தில்] தாமாக இணைந்தவர்கள் எத்தனைப் பேர்?

இணைக்கப்பட்டவர்களின்[போலி முகவரியில்] எண்ணிக்கை என்ன?[//வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் போலி இணைப்புகள் போன்ற சமூக ஊடக மோசடிகள் இடம்பெறுகின்றன// -https://www.quickheal.co.in/knowledge-centre/how-to-spot-social-media-scams/]

அறிந்துகொள்ளும் ஆர்வம் நம் மக்களில் ஏராளமானவர்களுக்கு உள்ளது!