பதிவின் தலைப்புக்கு விளக்கவுரை தேவையில்லை. காணொலி காணுங்கள், புரியும்!
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- “எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.
வியாழன், 11 ஏப்ரல், 2024
‘ரோடு ஷோ’... ‘ஷோ’ காட்டும் ‘சூப்பர் மேன்’ மோடி!!!
veeran4h
தமிழ் நாட்டின் தலைவர்கள், தேர்தல் பரப்புரையில் ஆண்ட கட்சி என்றால் தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்பார்கள் ! கூட்டம் நடத்துவார்கள் ! தெரு முனைப் பிரச்சாரம் செய்வார்கள் ! இது என்னடா புதுசா அழகிப் போட்டில வர மாதிரி... ‘கேட் வாக் மாதிரி... ‘ரோடு ஷோ’ வாம் ....! கேக்கவே நாராசமா இருக்கு! அம்பி அம்பி இது தமிழ் நாடுடா!
அதென்ன ரோடு ஷோ....
அது ஒன்னுமில்லீங்க தம்பி...
முன்னெல்லாம் டூ வீலர், கார் எல்லாம் ஷோ ரூம்ல வச்சு விற்பாங்க...
விற்காத வாகனங்களை, வங்கி வாசல்... முக்கியச் சாலைகளில் ஒரு குடையை வைத்து ஒரு டேபிள் போட்டு நாலு பேர் விற்பனை செய்யறாங்கள்ல அது மாதிரிதான்....
செல்லாக் காசான அரசியல் கட்சியும் தலைவர்களும் இப்படித் தெருவுல தங்களையும் தங்கள் கட்சியையும் காட்சிப்படுத்தறதுதான் ‘ரோடு ஷோ’…
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
