மனித நாகரிகம் என்பது மாற்றங்களுக்கு உள்ளாவது.
பழைய நாகரிகங்கள், காலவெள்ளத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகிப் புதிய நாகரிகங்களாக உருவாவது இயற்கை.
மனிதர்கள் ஓர் இனத்தை[மனித இனம்]ச் சார்ந்தவர்கள் ஆயினும், அவர்கள் வாழும் நாட்டுச் சூழ்நிலைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அவர்களின் நாகரிகமும் மாறுபடும்; அழிதலும் நிகழும்.
மாறுதலுக்கு உள்ளாகாத, அல்லது அழியாத மனித நாகரிகம் என்று எதுவும் இல்லை. இந்தியா என்னும் நிலப்பகுதியில்[ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே இந்தியா என்றொரு நாடு உருவானது. ‘பாரதம்’ என்னும் பெயரில் ஒரு நாடு இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை] நிலவிய வேறு வேறு நாகரிகங்களும் இதற்கு விதிவிலக்கானவை அல்ல.
வேறு வேறு நாகரிகங்களை உள்ளடக்கிய இந்திய மண்ணில், ‘இந்துச் சமூகம்’ என்ற ஒன்று என்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லை. பல்வேறு இனங்கள் மட்டுமே உள்ளன.
இஸ்லாம், கிறித்துவம் போன்ற மதச் சார்புடையவர்களை ஒதுக்கி, எஞ்சியுள்ளவர்களை[பல இனத்தவர்] ‘இந்துக்கள்’ ஆக்கியவர்கள் இந்து ஆதிக்க வெறியர்கள்.
வரலாறு இதுவாக இருக்க.....
ஏதோ ஒன்று இருக்கிறதாம். அந்த ஏதோ ஒன்று எது? அது இந்துமத வெறி.
மேலும், “பாரதம் என்பது அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால் இந்துச் சமூகம் எப்போதும் இருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்துச் சமூகம் மையமானது” என்றும் கதையளந்திருக்கிறார்.
உலகின் தோற்றம் குறித்த உண்மை அறியப்படாதது போலவே, இதன் அழிவு எப்போது நிகழும் என்பதும், அது எவ்வகையானதாக இருக்கும் என்பதும் எவருக்கும்[விஞ்ஞானிகள் உட்பட] தெரியாது. அழிவு நிகழுமாயின், இந்துச் சமூகமோ விந்துச் சமூகமோ வேறு எந்தச் சமூகமோ எதனாலும் உலகை நிலைநிறுத்த இயலாது.
‘ஆர் எஸ் எஸ்’ என்னும் கும்பலின் ஆதிக்கம் நீடித்தால், உலகம் அழிகிறதோ அல்லவோ, இந்து மதம் அழியும் என்று வேண்டுமானால் உறுதிபடச் சொல்லலாம்.

