எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 27 செப்டம்பர், 2025

திருப்பதி ஏழுமலையான் சாமியும் விஜய் என்னும் தெய்வத் திருமகனும்

கடவுளைத் தரிசிக்கத்தான் நம் மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் ஓர் உதாரணம்.

இன்றளவில், விஜய் என்னும் நடிகனைரைத் தரிசிக்க, வீதிகளிலும் வீட்டு மாடிகளிலும் கால்கடுக்க நின்றுகொண்டும், உயிரையும் துச்சமாக எண்ணித் தெருவோர மரக் கிளைகளில்  தொற்றிக்கொண்டும்,  கடவுளைத் தரிசிக்கக் காத்திருப்பதைவிடவும் அதிக நேரம் நம் மக்கள் காத்திருப்பது நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது[கடந்தக் காலங்களில் நம்மை ஆண்ட புரட்ட்ட்ட்சித் தலைவருக்கும் புரட்ட்ட்ட்சித் தலைவிக்கும்கூட இந்த அளவுக்குக் கூட்டம் கூடியதில்லை].

ஆக, கடவுள்களைவிடவும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் விஜய் என்பது சந்தேகமறப் புரிகிறது.

2026இல் விஜய் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராவதும், மக்கள் அவரைப் ‘தெய்வத் திருமகன்’[தெய்வத் தாய்’ என்றாற்போல] என்றழைத்துப்[காணொலிக்காரன், ‘விஜய் அரசியல் பிரமோற்சவம்’ என்று தலைப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது] புளகாங்கிதப்படுவதும்  உறுதி.

வாழ்க ஆளப் பிறந்த தமிழர் தலைவன் விஜய்! வளம்பெறுக தமிழ் மக்கள் அவர் ஆட்சியில்!!