எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

மாரடைப்பா[heart attack], இதயச் செயலிழப்பா[cardiac arrest] மிக ஆபத்தானது எது?

இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படும்போது[ரத்தக் குழாய்களில் உருவாகும் அடைப்பு காரணமாக] ஏற்படுவது ‘மாரடைப்பு[heart attack]’ என்பது நம்மில் பலரும் அறிந்ததே. 

இதயத்தைத் துடிக்கத் தூண்டுகிற மின்சாரத்தை[இதயத்தில் உள்ள "சைனோஏட்ரியல் கணு[SA node)" என்ற இடத்தில் உருவாகிறது இந்த மின்சாரம்> SA node உருவாக்கும் மின் தூண்டல், இதயத்தின் வழியாகப் பரவி, இதயத் தசைகளைச் சுருங்கி விரியச் செய்கிறது. இதன் மூலம் இதயம் சீராகத் துடிக்கிறது]உற்பத்தி செய்யும் SA node செயலிழக்கும்போது இதயத் துடிப்பு முழுமையாக நின்றுபோவது இதயச் செயலிழப்பு[cardiac arrest]’ ஆகும்.

மாரடைப்புக்கு உள்ளானவரைப் பதற்றப்படாமல் இருக்கத் தூண்டி, மருத்துவமனைக்குக் கொண்டுசென்றால் அவர் குணமடைவதற்கு வாய்ப்புள்ளது.

இதயச் செயலிழப்புக்கு உள்ளானவரின் இதயத் துடிப்பு நின்றுபோய் அவர் நிலைகுலைந்து சரிந்து விழுவது நிகழக்கூடும் என்பதால், மாரடைப்புக்கு உள்ளானவரையும்விட இதயச் செயலிழப்புக்கு உள்ளானவரின் நிலை மிகவும் ஆபத்தானதாகும். அவரின் மார்பைப் பலமுறை அமுக்கி[CPR[or Cardiopulmonary Resuscitation]அவரை மீண்டும் சுவாசிக்கச் செய்து மருத்துவரை அணுகுவது உரிய சிகிச்சை முறை ஆகும்.

AED இருந்தால் அதைப் பயன்படுத்தலாம்[AEDகள் என்பது ஒரு வகையான கணினிமயமாக்கப்பட்ட டிஃபிபிரிலேட்டர் ஆகும். இது மாரடைப்பை அனுபவிக்கும் நபர்களின் இதயத் துடிப்பைத் தானாகவே பகுப்பாய்வு செய்கிறது. அது இதயத்திற்கு மின் அதிர்ச்சியை அளித்து இதயத்தின் இயல்பான துடிப்பை மீட்டெடுக்கிறது.

ஆக, மாரடைப்பைப் பற்றி மட்டுமே தெரிந்திருப்போர், இதயச் செயலிழப்பு பற்றியும் அறிந்துகொண்டிருப்பது மிக நல்லது,
* * * * *
உதவி: ‘குங்குமம் டாக்டர்’, ஆகஸ்டு 1-15, 2025]