வெள்ளி, 26 டிசம்பர், 2025

ராமாதாசா, அன்புமணியா? ‘பூவா தலையா?’ போட்டால் தெரியும்!

தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையிலான பதவிப் பிரச்சினை, ஒரு தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.*

பெற்றெடுத்த மகனுக்கு அன்புமணி என்று அழகான தமிழ்ப் பெயர் சூட்டி, வளர்த்து ஆளாக்கி, மருத்துவராக்கி, கட்சியில்[பாமக] உயர் பதவி கொடுத்து, டெல்லி அமைச்சராகவும் அமர்த்தி அழகு பார்த்துப் புளகாங்கிதப்பட்ட ராமதாஸ் என்னும் தமிழினப் பற்றுள்ள அப்பனுக்கு[நல்ல தலைவரும்கூட], வரலாறு கண்டிராத அளவுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்புமணியைப் போன்ற ஒரு புதல்வன் இம்மண்ணில் இதுவரை தோன்றியதில்லை என்றே சொல்லலாம்[இவரைவிடவும், பெற்றவனை ஈவிரக்கமின்றிப் போட்டுத்தள்ளிவிட்டுப் பதவியைக் கைப்பற்றிய மொகலாய மன்னர்களின் சில வாரிசுகள் தேவலாம்].

அப்பனுக்கும் மகனுக்குமான போட்டி/போர், முடிவொன்றை எட்டாததால், பிற சாதிக்காரர்கள் ஒட்டுமொத்தப் பாட்டாளி மக்கள் கட்சியினரையும் பார்த்து நகைக்கிறார்கள்.

இதைத் தவிர்ப்பதற்கு, ‘சமரசத் தீர்வு’க்கான திட்டமொன்றை இருவரிடமும் பரிந்துரைப்பது அடியேனின் விருப்பம்.

அது.....

‘பாமக’வின் உண்மை விசுவாசிகளைத் திரட்டி[அத்தனை எளிதல்ல], அவர்கள் முன்னிலையில் ‘பூவா தலையா’ போட்டுப் பார்ப்பது.

பூ விழுந்தால் பெரியவர் ராமதாஸே ‘பாமக’வின் ஆயுட்காலத் தலைவர். தலை விழுந்தால்[விழக்கூடாது என்பது அடியேனின் பிரார்த்தனை] அன்புமணி தலைவராவார்.

                                               *   *   *   *   *

*https://news7tamil.live/g-k-mani-expelled-from-pmk-anbumani-announces.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMw-qruBA&utm_content=rundown#google_vignette