எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 5 பிப்ரவரி, 2026

“ஜோதிமணி, சுதா... பிரதமரைத் தாக்கத் திட்டம்”... சங்கிச் சபாநாயகர்!

நல்ல வேளை, அப்படி ஏதும் நடக்கவில்லை. நடந்திருந்தால்.....

பொம்மணாட்டிகளிடம் உதை வாங்கிய பிரதமர் என்று ஒட்டுமொத்த உலகமும் மோடியைப் பார்த்துக் காறித் துப்பியிருக்கும்!

‘பெண் சாமி’ சிலைகளை அலங்கரிக்க ‘அர்ச்சகிகள்’ தேவை!!!

கல்லாலும் களிமண்ணாலும் உலோகங்களாலும் வடித்தெடுக்கப்பட்ட சிலைகளை[கடவுள்கள்]த்தான் மனிதர்கள் வழிபடுகிறார்கள்.

சிலைகளுக்குள், வழிபடப்படுகிற கடவுள்கள் இருக்கிறார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.

சிலைகளை ஆண் சாமிகளுக்கானவை பெண் சாமிகளுக்கானவை என்று இருவகையாகப் பிரிக்கலாம்.

சாமி சிலைகளுக்கு அபிஷேகம் எனப்படும் சிறப்புப் பூஜை செய்யும்போதெல்லாம், அவை[சிலைகள்]களுக்கான ஆடைகளைக் களைந்து, புனித நீர் பெய்து சுத்தப்படுத்திய பிறகே பால், பழம், சந்தணம், பன்னீர் போன்றவற்றால் குளிப்பாட்டுகிறார்கள்[மீண்டும் அவற்றிற்கு ஆடைகளும் ஆபரணங்களும் அணிவிப்பது வழக்கமான ஒன்று] அர்ச்சகர்கள்.

பெரும்பாலான கோயில்களில், ஆண் கடவுள்கள் மட்டுமல்லாமல் பெண் கடவுள்களுக்கும்[அன்னை மீனாட்சி, லக்குமி, சீதேவி, பூதேவி போன்றவர்கள்] சிலைகள் உள்ளன என்பதையும், அவற்றுக்குள் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் கடவுள்கள் எழுந்தருளியிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க.

ஆண் சாமிகளைத் தொட்டுக் கழுவி, பால் பழம் பன்னீர் தேன் போன்றவற்றால் அபிஷேகங்கள் செய்யும் அதே அர்ச்சகர்கள்[ஆண்கள்]தான் பெண் சாமிகளையும் தொட்டு அபிஷேகம் செய்கிறார்கள்.

இதை நேற்றுவரை அவர்கள் செய்தார்கள்; இன்றும் செய்கிறார்கள்.

இது தவறு; அபச்சாரம்.

இனியேனும், கோயில்களில் பெண் சாமிகளை அலங்கரித்து அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, உடனடியாகப் பெண் அர்ச்சகர்கள்[அர்ச்சகிகள்] நியமிக்கப்படுதல் வேண்டும்.

அரசிடம்[அறநிலையத் துறை] இதற்கான கோரிக்கையைப் பரிந்துரைத்து, உடனடியாகத் தமக்குரிய கடமையை நிறைவேற்றுவார்களா நம் பக்தர்கள்... குறிப்பாகப் பெண் பக்தர்கள்?

மீண்டும் நினைவூட்டுகிறோம்.....

பக்தர்களே, நீங்கள் வழிபடுவது வெறும் சிலகளையல்ல, உள்ளே நிரந்தரமாக எழுந்தருளியிருக்கும் ஆண் & பெண் கடவுள்களை!