2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இன்று[04.05.2026] பகல் 12.00 மணி நிலவரப்படி, ‘தி.மு.க.’ படு தோல்வியைத் தழுவியுள்ளது[58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை].
‘பிரபல நடிகரின் ‘தவெக’வும், 107[பகல் 12 மணி நிலவரம்] இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களைக் கைப்பற்றுவது அசாத்தியம்தான்.
தனிப் பெரும்பான்மை பெற எந்தவொரு கட்சிக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் ‘தவெக’வும் ‘அதிமுக’வும் இணைந்தால்[இரு கட்சிக்காரர்களும் மிகக் கடுமையாக மோதிக்கொண்டது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனாலும் சுயநலவாதிகளின் ஆதிக்கம் அரசியலில் மேலோங்கியுள்ள நிலையில் இதுவும் நடக்கலாம்] ஆட்சியமைக்கலாம்.
இவர்கள் இணைந்து ஆட்சியமைத்தாலும், நடிகன் தனித்து ஆட்சியமைத்தாலும், இவர்களால் தொடர்ந்து ஆள முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
இந்த இருவரின் குடுமிகளும் ‘பாஜக’ அதிபதி மோடி கையில் உள்ளதால் நீடிக்க அனுமதிக்கமாட்டார். அனுமதித்தாலும், அவர் குரங்காட்டியாகவும் இவர்கள்[அதிமுக & தவெக] அவர் சொன்னபடியெல்லாம் ஆடும் குரங்குகளாகவும்தான் இருப்பார்கள் என்பது உறுதி.
ஆக,
தமிழ்நாடு தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி ‘திமுக’வோ, ‘அதிமுக’வோ ‘தவெக’வோ அல்ல; ‘பாஜக’[மோடி] மட்டுமே.
இனி தமிழ்நாட்டின் ‘தலைவிதி’ மோடி கையில்!
