அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

எஸ்.ராமகிருஷ்ணனின் சிரிப்பூட்டும் 'சிவப்பு மச்சம்' சிறுகதை!!!

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கடந்த வார 'விகடன்'[15.08.2018] இதழில் 'சிவப்பு மச்சம்' என்னும் தலைப்பில் சிறுகதை எழுதியுள்ளார். பிரபலமானவர் என்பதற்காகவே சில எழுத்தாளர்களின் படைப்புகளைச் சில பிரபல இதழ்கள் வெளியிடுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
தொழிலில் நொடித்துப்போனதால் ஓர் ஏழை விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்.

அரசு எந்திரம் பரபரப்பாகச் செயல்படுகிறது.

விவசாயியின் வீடு தேடி வந்த அதிகாரிகள், உரிய ஆவணங்களில் விவசாயியின் மனைவி 'ராக்கி'யிடம் கையெழுத்துப் பெற்றதோடு, ''விரைவில் உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுவிடும். அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றி கூறிச்செல்கிறார்கள்.

ராக்கியும், கொஞ்சம் நாட்கள் கழித்து ஆட்சியர் அலுவலகம் சென்று விசாரிக்கிறார். அதிகாரிகளோ, ராக்கியை அலட்சியப்படுத்தியதோடு அவர் மனம் புண்படும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.

மனம் நொந்த ராக்கி, ''நீங்கெல்லாம் உருப்பட மாட்டீங்க'' என்று சாபம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

இதுவரையிலான நிகழ்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பம்சம் ஏதுமில்லை. மிகச் சாதாரண நடையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

கதையின் மையப்பகுதியில், கதையோடு ஒட்டாத ஒரு நிகழ்வை ஒட்டவைத்து அடுத்து என்ன நிகழுமோ என்று அறியும் ஆவலை வாசகர் மனங்களில் தூண்ட முயல்கிறார் கதாசிரியர்

சுப்பிரமணியம் ஓர் உயர் அதிகாரி. ராக்கிக்கான உதவித் தொகைக்கு 'அனுமதி' வழங்குபவர் அவர். அனுமதி வழங்காததால், விவசாயியின் மனைவி ராக்கி சாபம் கொடுத்துச் சென்ற நிலையில், அவர்[சுப்பிரமணியம்] நெற்றியில் அன்று ஒரு சிவப்பு மச்சம் தென்படுகிறது; அது தோனறியதற்கான காரணத்தை மருத்துவ ரீதியாக அறிந்திட இயலாமல் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார் அவர்; குணப்படுத்த இயலாத நோயாக அது உருமாறும் என்று அஞ்சுகிறார்.

இந்நிலையில் இன்னொரு அதிசயமும் நிகழ்கிறது.

சுப்பிரமணியத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 23 பேர்களுக்கும் அதே மாதிரியான சிவப்பு மச்சம் அவரவர் நெற்றியில் தோன்றியிருக்கிறது.

எந்த ஒருவருக்கும் மச்சம் உருவானதற்கான காரணம் புரியவில்லை.

குணப்படுத்துவதற்கு, 'மச்சத்தின் மீது சந்தணம் பூசுதல், எச்சில் தடவுதல் , பச்சிலைகளை அரைத்துப் பூசுதல் என்று அவரவர்க்குத் தெரிந்த கை மருத்துவத்தைப் பரிந்துரைக்கிறார்கள்.

என்ன செய்தும் எந்த ஒருவருக்கும், கெடுதி விளைவிக்கும் அந்த மச்சம் மறையவே இல்லையாம்.

குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில், உடம்பின் குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிடத்தக்க ஒரே மாதிரியான சிவப்பு மச்சம் தோன்றுவது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை.

சாத்தியம் இல்லாத ஒன்று சாத்தியப்பட்டது என்றால், அதைச் சாத்தியப்படுத்தியது யார்?

கடவுள் என்கிறாரா எழுத்தாளர்?

இத்தகைய மாயாஜாலங்களை நிகழ்த்தி, எத்தனை எத்தனை ஆண்டுகளாக, எத்தனை எத்தனை குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறார் அவர்?

போதிய புள்ளிவிவரங்கள் தருவாரா ராமகிருஷ்ணன்?

வெளியிடுவதற்குப் பத்திரிகைகள் உள்ளன என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் கதை கட்டிவிடுவதா?

இதன் பிறகும் தஒடர்கிறது கதை.....

ராக்கிக்குரிய உதவித் தொகைக்கான ஆணையைப் பிறப்பித்ததோடு, உதவித் தொகையை எடுத்துக்கொண்டு ராக்கியின் வீடு தேடிச் செல்கிறார்கள் உயர் அதிகாரி சுப்பிரமணியமும் ஏனைய அலுவலர்களும். ஆனால் அந்தோ.....

ராக்கி அவரின் வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவரைக் கண்டறியவும் இயலவில்லையாம். 

குற்றம் புரிபவர் தண்டிக்கப்படுவர் என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாத ஒரு நம்பிக்கை மட்டுமே. குற்றம் புரிந்த சுப்பிரமணியத்தையும் 23 பேரையும் சிவப்பு மச்சம் தோன்றித் தண்டித்தது என்று பிரபல எழுத்தாளர் கதை சொல்லியிருப்பது.....

சிந்திக்க வைக்கிறதா, சிரிக்கத் தூண்டுகிறதா?
=======================================================================


11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கதைய வாசித்து ரசித்து வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்த அதிராவுக்கு நன்றி.

      நீக்கு
  2. சிரிப்பு தான் வருகிறது. பெரும்பாலான இந்திய அரசு அதிகாரிகள் ஆன்மிகத்தில் மூழ்கியவர்களே. அவர்களும் இந்த கதையை படித்தால் சிரித்துவிட்டு வழமை போல லஞ்சம், ஊழல், மோசடிகளில் ஈடுபடுவார்கள்.அப்படி சம்பாதிக்கும் பணத்தில் சிறு பகுதியை கடவுளுக்கு லஞ்சமாகவோ, அல்லது அவரை குஷிபடுத்த பூஜைகளோ செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடிகோடியாய்ச் சம்பாதித்தவர்கள் கடவுள்களையும் கோடீஸ்வரக் கடவுள்களாக ஆக்குகிறார்கள்.

      இந்த ராமகிருஷ்ணன் தமிழின் 100 சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்!

      நன்றி வேகநரி.

      நீக்கு
  3. வியப்பாக இருக்கிறது ஐயா
    எஸ்.ராமகிருஷ்ணனா இதுபோன்ற கதையினை
    மூடநம்பிக்கையினைப் போற்றுகின்ற கதையினை எழுதியுள்ளார்
    வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரிக் கதைகளைத்தான் இதழாசிரியர்கள் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கிறார்கள்!

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  4. இப்படி நடந்தா நல்லதுன்னு ஆசைப்பட்டு எழுதியிருக்கார். அதிலென்ன தப்பு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கடமையை[பக்க வாத்தியம்]ச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.

      இம்மாதிரியெல்லாம் ஆசைப்படுவதால் என்ன பயன்? எழுத்தாளர் சிந்திக்க வேண்டாமா?

      நன்றி பக்க வாத்தியம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. கதை, வாசகரைச் சிந்திக்க வைக்கவில்லை; சிரிக்கத் தூண்டுகிறது என்றே நம்புகிறேன்.

      நன்றி தனபாலன்.

      நீக்கு