சனி, 30 ஏப்ரல், 2022

தமிழர்கள் இந்தி படிக்கலாம்! எப்போது?

[படம்: 'வினவு']

"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் படி" என்கிறார் ஒருவர். அது ஆகச் சிறந்ததொரு அறிவியல் மொழி என்பது அவருக்கு மறந்துபோனது.

"இந்தி தெரியாதென்றால் இந்தியாவிலிருந்து வெளியேறு" என்று மிரட்டுகிறார் இன்னொருவர்.

இவர்களில் ஒருவர் நடுவணமைச்சர். மற்றொருவர் மாநில அமைச்சர்.

இந்தியில் பேசும்படி, ஒரு கன்னடப் பெண் அவளின் தாய் மண்ணிலேயே(பெங்களூரு) இந்தி வெறியர்களால் மிரட்டப்படுகிறாள்[இவையெல்லாம் அண்மைக்கால நிகழ்வுகள் மட்டுமே. சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்துத் திருத்த வேண்டிய தலைமை அமைச்சரோ அமைதி காப்பதன் மூலம் அவர்களின் செயலுக்கு அங்கீகாரம் வழங்குகிறார்].

ஒரு தமிழனாக நாம் முன்வைக்கும் கேள்விகள், மேற்கண்ட அமைச்சர்களின் திமிர்ப் பேச்சுக்கு  எதிர்வினையாக அமையக்கூடும்.

***இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, அல்லது அதை வைத்துப் பிழைப்பு நடத்தும் பிரமுகர்களே,

"இந்தி படி... படி" என்று ஓயாமல் கூச்சலிட்டுக்குஒண்டிருக்கும் நீங்கள் எங்களின் தாய்மொழியாகிய தமிழைப் படித்தீர்களா?[குறைந்தபட்சம் ஒரு 'தமிழ் மொழியாக்கக் கருவி'யையேனும் கைவசம் வைத்திருக்கிறீகளா?] இல்லையென்றால், எங்களளவில் அயல் மொழியான இந்தியைப் படிக்கச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?["வணக்கம்" சொல்வது, திருக்குறளிலிருந்தும் புறநானூற்றிலிருந்தும் மேற்கோள் காட்டுவது எல்லாம் ஏமாற்று வேலைகள்].

இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் கோடி கோடி கோடிக் கணக்கில் செலவிட்டிருக்கிறீர்கள்[நாடறிந்தது]. அதற்குச் சமமான தொகையை எங்களின் தமிழ் வளர்ச்சிக்குச் செலவிடுங்கள். உங்கள் இந்தியைவிடவும் பழைமையும் பல வளங்களும் நிறைந்த தமிழை இந்தியாவின் ஆட்சி(மற்ற மாநில மொழிகளும் இடம்பெறலாம்) மொழி ஆக்குங்கள். இவற்றைச் செய்து முடித்த பிறகு, "இந்தி படி" என்று எங்களிடம் நீங்கள் வேண்டுகோள் வைக்கலாம். நாங்களும் பரிசீலிப்போம். "வெளியேறு" என்று மிரட்டவெல்லாம் வேண்டாம். மிரட்டினால்.....

"நாங்கள் வெளியேறுவது தவிர்க்க இயலாதது என்றால், உங்களை முதலில் வெளியேற்றுவோம்" என்று நாங்கள் பதிலடி கொடுக்க நேரிடும். அது நம் இரு தரப்பினருமே விரும்பத்தக்கதாக அமையாது.

"எங்கும் இந்தி, எதிலும் இந்தி" என்று கூச்சலிட்டுக்கொண்டே, தொடருந்துத் துறை[ரெயில்வே], அஞ்சலகங்கள், வங்கிகள் என்று அனைத்து நடுவணரசு அலுவலகங்களிலும் 90% இந்தியைத் திணித்துவிட்டீர்கள்[35 விழுக்காட்டினர் மட்டுமே பேசுகிற இந்தியைப் பெரும்பான்மையினர் பேசுகிற மொழி என்று சொல்லி இதைச் செய்து முடித்தீர்கள். ஆட்சியமைப்பதற்கு மட்டுமே 'பெரும்பான்மை-சிறுபான்மை' பார்ப்பது பொருந்தும். மொழி வளர்ப்பில் இது தவிர்க்கப்படுதல் வேண்டும்].

பொது நிறுவனங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல; அவை இந்த நாட்டின் பொதுச் சொத்து. இங்கெல்லாம் ஏற்கனவே திணிக்கப்பட்ட இந்தி அகற்றப்படுதல் வேண்டும்[அங்கிலம் போதும். இதனால் ஆங்கிலேயருக்கு நாம் மீண்டும் அடிமை ஆகிவிட வாய்ப்பே இல்லை. நமக்கென்று ஒரு பொது மொழி தேவை என்றால், நிபுணர்களின் உதவியுடன், சம அளவில் அனைத்து மாநில மொழிகளையும் ஒருங்கிணைத்து 'இணைப்பு மொழி' ஒன்றை உருவாக்குங்கள்].

அகற்றிய பிறகு, "இந்தி படி" என்று எங்களிடம் நீங்கள் கோரிக்கை வைக்கலாம். நாங்களும் அதைப் பரிசீலிப்போம்.

ஆக, மேற்குறிப்பிட்டவற்றைச் செய்து முடிக்காமல், இந்தி மட்டுமே இந்தியாவை ஆள வேண்டும் என்ற வெறியுடன் தொடர்ந்து செயல்படுவீர்களேயானால்.....

"சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட அவலத்தைத் அன்புகொண்டு நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்" என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

நன்றி!

========================================================================== 


வெள்ளி, 29 ஏப்ரல், 2022

வலியில்லாத மரணம்!!!

ருவருக்குப் 'புற்றுநோய்' ஆரம்பக் கட்டத்தில் இருந்தால் குணப்படுத்திவிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். பலர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்திருக்கிறார்கள்.

46 வயதான இவரை[படத்தில் இருப்பவர்]த் தாக்கிய 'புற்றுநோய்' இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. அதாவது, புற்றுநோய்ச் செல்கள் அவற்றின் முதன்மை இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் பரவிய நிலை இது. இத்தகைய நிலையில் சிகிச்சையின் மூலம் நோயாளியைப் பெரும்பாலும் குணப்படுத்த முடியாது.

இவரைப் பரிசோதித்த ஒரு மும்பை மருத்துவர், "புற்றுநோய்க் கட்டிகள் மற்றும் நிணநீர்க் கணுக்கள் பரவிய நிலையில் காணப்படுவதால், இது கடைசிக் கட்டப் புற்றுநோயாக இருக்கலாம்" என்றார். 

மும்பையிலுள்ள பிரபல டாடா மெமோரியல் மருத்துவமனையின் (டிஎம்ஹெச்) டாக்டர் தேவயானி இவருக்குத் தேவையான சில பரிசோதனைகளைச் செய்தார். இவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த சில நாட்களில் பயாப்ஸி உட்பட வேறு சில முக்கியமான சோதனைகளுக்குப் பிறகு, இவருக்குப் புற்றுநோய் இறுதிக் கட்டத்தில்,  அதாவது நான்காவது கட்டத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2021 பிப்ரவரி முதல் இவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட கீமோதெரபி மற்றும் டார்கெட்டட் தெரப்பி முதலான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன.

ஒரு புற்று நோயாளி, மரணத்திற்கு முன்னரான எஞ்சிள்ள வாழ்நாள் பற்றி நினைத்துப் பார்த்து, மனம் கலங்கிப்போய் அழுது கண்ணீர் வடிக்கும் நேரம் இது. ஆனால், இவரின் மனதிடமோ வியக்கத்தக்கதாக இருந்தது. இவர் சொல்கிறார்.....

"இன்னும் சில வருடங்கள் நான் வாழ்வேன். அந்தச் சில வருட வாழ்க்கையில் என்னுடைய முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிவிடுவேன்.

இப்படி நினைப்பதால்  நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

இது 'மரணம்' மற்றும் 'நம்பிக்கை' ஆகியவற்றுக்கு இடையே உள்ள நிலை. நான் விரும்பினால், மரண பயத்தைப் பீதியாக மாற்றி என்னையும் என் குடும்பத்தையும் துன்பத்தில் ஆழ்த்தலாம்.

ஆனால், அச்சம் என்பதை அகராதியில் ஒரு வார்த்தையாக மட்டுமே எடுத்துக்கொண்டு, என் வாழ்நாள் முழுவதையும் மகிழ்ச்சியாகவும், மறக்கமுடியாததாகவும் மாற்றும் பாதையை நான் தேர்ந்தெடுத்தேன்.

புற்றுநோய்க் கவலையிலிருந்து விலகி இந்த நாட்களை நான் கோவாவில் கழிக்க நினைத்தேன்.

இதை மனைவியிடம் சொன்னேன். CT ஸ்கேன் செய்தபிறகு, மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையத்தை அடைந்தோம். சில மணி நேரம் கழித்து நாங்கள் கோவாவில் இருந்தோம். ஏன் தெரியுமா? எவ்வகையிலும் புற்றுநோய்ப் பயம் என்னை ஆட்கொள்ளவதை நான் விரும்பவில்லை.

சிகிச்சையின் பக்க விளைவுகளால் என் உடல் முழுவதும் எண்ணற்ற காயங்கள் உண்டாகியிருந்தன. அவற்றில் வலி இருக்கிறது. ஆனால் இந்த வலி என் மீது ஆதிக்கம் செலுத்துவதை நான் விரும்பவில்லை.

மரணத்தின் நிதர்சனத்திலிருந்து தப்ப நினைப்பது சாத்தியமற்ற ஒன்று என்பது எனக்குத் தெரியும். நாம் பிறக்கும்போதே, இறப்பும் முடிவாகிவிட்டது. எது நிச்சயமோ அதைப் பார்த்து நாம் ஏன் பயப்பட வேண்டும்? இந்தப் பயத்தை  மகிழ்ச்சியளிக்கும் இனிய தென்றலாய் மாற்றுவது  கோவாவில் சாத்தியப்படும் என்றும் நம்பினேன்.

என் நம்பிக்கை பொய்க்கவில்லை.

நாங்கள் நான்கு இரவுகளைக் கோவாவில் இனிமையாகக் கழித்தோம். மருந்துகளைச் சரியான நேரத்தில் சாப்பிடவேண்டும் என்பதை மறக்கவில்லை. இதனாலெல்லாம் நோய் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லாமல்போனது.

எல்லாக் கடற்கரைகளிலும் பொழுதைக் கழித்தோம்; கடலில் குளித்தோம்; இரவுகளின் பெரும்பகுதி கடற்கரையில் கழிந்தது. டிஸ்கோவிற்குச் சென்றோம்; நிறைய சாப்பிட்டோம்.

மும்பை திரும்பியதும் ஓ.பி.டியில் இருக்கும் டாக்டரிடம் என்ன பேசலாம் என்று சிரித்துக்கொண்டே திட்டமிட்டோம்.

கோவாவில் அரபிக்கடலின் நீல அலைகளுக்கு மேல் பாராசெயிலிங்(கடல் என்பதால் பாராசெயிலிங். மற்ற இடங்களில் பாராகிளைடிங் என்கிறோம்) செய்யச் சென்றுகொண்டிருந்தபோது, 'மேலே போகும்போது உங்கள் மூச்சு நின்றுவிடுமோ?' என்று என் மனைவி கவலைப்பட்டார். 

சிரித்துக்கொண்டே, "அப்படி மரணம் வந்தால், அதைவிடச் சிறந்த மரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் நான் இப்போது சாகப் போவதில்லை. எனக்கு ஒன்றும் ஆகாது" என்று நான் பதிலளித்தேன்.

நாங்கள் மகிழ்ச்சியுடன் 'பாராசெயிலிங்' செய்தோம்.

இப்போது நாங்கள் மலைப்பிரதேசங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை மரண அனுபவம் என்பது எனக்கு இல்லை. வாழ்ந்த அனுபவம் மட்டுமே உள்ளது. இனியும் நான் வாழப்போகும் கதையை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

இப்போது உங்களுக்கு நான் சொல்ல நினைப்பது.....

"புற்றுநோய்க்கு ஆளான எவரொருவரும் என்னைப் போலவே வாழலாம் நண்பர்களே."

==========================================================================

உதவி: https://www.bbc.com/tamil/india-61246585[28 ஏப்ரல் 2022] 


வியாழன், 28 ஏப்ரல், 2022

காமம் 'காதல்' ஆன கதை![புதுப்பிக்கப்பட்டது]

'வயிறு பசிச்சா சோறு.  உடம்பு பசிச்சா ஆண் பெண் புணர்ச்சி. உழைச்சி அலுத்துப் போனா  உறக்கம்’   -இதுதான் மனிதனுக்கு [அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும்கூட] இயற்கை வழங்கிய கொடை.

மேற்கண்ட மூன்று அடிப்படைத் தேவைகளோடு, ஆடம்பரம், பட்டம், பதவி, புகழ் என்று ஏராளமான தேவைகளை ஆறாவது அறிவு வாய்த்ததால் மனிதன் உருவாக்கிக் கொண்டான்.

இவை முற்றிலும் செயற்கையானவை.

தேவையற்ற பல ‘தேவை’களின் பட்டியலில் ‘காதல்’ என்ற ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

மனிதன் விலங்காக வாழ்ந்தவரை.....

காமம் கிளர்ந்தெழுந்த போதெல்லாம், ஆணும் பெண்ணும் தடங்கல் ஏதுமின்றி, உடலுறவு கொண்டு இன்பத்தில் திளைக்க முடிந்தது. மனிதர்களுக்கு ஆறாவது அறிவு வாய்த்த பிறகு இது சாத்தியம் இல்லாமல் போனது. 

பெண்ணைத் தன் உடைமை ஆக்கிக் கொள்வதில் ஆண்களுக்கிடையே உண்டான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, நம் முன்னோர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களுமே, தனிமனிதனின் இயல்பான உடலுறவு சுகத்திற்குப் பெரும் தடைக் கற்களாக அமைந்துவிட்டன. 

தவிர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளும் வேறு பல இடையூறுகளும் குறுக்கிடவே, ஆண் பெண் வேறுபாடின்றி, அனைத்து மக்களுமே செயற்கை உடலுறவு இன்பங்களை நாட வேண்டிய பரிதாப நிலை உருவானது!

இதிலும் முழு மன நிறைவு கிட்டாத நிலை தொடர்ந்த போது,  வெறுமனே ஒருவரோடு ஒருவர் பேசிக் களிப்பதிலும், பார்த்து இன்புறுவதிலும், உடலுறவு கொள்வதால் கிடைக்கும் சுகானுபவங்களைக் கற்பனை செய்து களிப்பதிலும் ஓரளவேனும் திருப்தி பெறுவதற்கான முயற்சியில் இருபாலரும் ஈடுபட்டார்கள். இம்மாதிரியான கற்பனைச் சுகங்களின் தொகுப்புக்குக் ‘காதல்’ என்று பெயர் சூட்டினார்கள்.

காலப்போக்கில், இந்தப் பொய்யான காதல் உணர்வைக் கவிதை, கதை, காவியம், நாடகம் ஆகியவற்றின் கருப்பொருள் ஆக்கினார்கள் படைப்பாளர்கள். இதன் விளைவு.....

காதல் அமரத்துவம் பெற்றது. 

ஆணோ பெண்ணோ ஒருவர் மீது மற்றவர் காமம் கொள்வதைக் காதல் என்று சொல்லிக்கொண்டு அலையும் ஒருவித 'மன நோய்' இளவட்டங்களிடையே தொற்று நோய்போல் பரவியது.

அது தோல்வியில் முடியும்போது, தற்கொலை செய்துகொள்வது ஒரு வழக்கமாக ஆகிப்போனது.

இந்த நோயைக் குணப்படுத்த உளவியல் மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கலாம். அல்லது,

நோய் தொற்றிய நபரை, தொற்றுக்கு உள்ளானபோதே, ஏதேனும் ஒரு வழியை[சரியோ தவறோ]க் கையாண்டு ஓரிரு முறைகளேனும் உடலுறவு அனுபவம் பெறச் செய்யலாம். இது பலனளிக்குமா என்று கேட்க நினைப்பவர்கள், காதலிப்பதாகச் சொல்லிக்கொள்பவர்களின் காதல், கல்யாணம் ஆனவுடன் காணாமல் போவதைக் கருத்தில் கொள்க!

வருகைக்கு நன்றி.

==========================================================================


புதன், 27 ஏப்ரல், 2022

'பசவராஜ் பொம்மை'க்குப் 'பாடம்' கற்பித்த பசுமாடு!!!

'கர்னாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று விஜயாப்புரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது விஜயாப்புராவில் கொட்டகைகளில் மாடுகள் இருந்தன. அங்குச் சென்ற பசவராஜ் பொம்மை மாடுகளுக்கு நெற்றியில் குங்குமம் வைத்துக் 'கோ பூஜை' செய்தார். அப்போது ஒரு மாடு திடீரென அருகில் இருந்த விவசாயியை முட்டித் தள்ளியது. மாடு முட்டியதில் அருகிலேயே இருந்த பசவராஜ் பொம்மையும் சற்றுத் தடுமாறினார். 

அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால், அதிர்ச்சி அடைந்தார். அவரைக் காவல்துறையினர் பத்திரமாக அங்கிருந்து அழைத்து சென்றனர்[பசவராஜ் பொம்மை, மாடுகளுக்குக் 'கோ பூஜை' செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் கடந்த தன் பிறந்த நாள் அன்று மாடுகளைத் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது].'

இது இன்று, 'தினத்தந்தி' சுடச் சுட வழங்கிய காலைச் செய்தி[https://www.dailythanthi.com/News/India/2022/04/27002412/First-Minister-Basavaraj-escapes-unscathed-after-being.vpf   -ஏப்ரல் 27,  2022 00:24 AM]

இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்த நாளிதழ். 

நம் கேள்வி:

இந்தச் செய்தி வெறும் பரபரப்பை மட்டும்தான் ஏற்படுத்தியதா?

பசுவுக்குச் சிந்திக்கும் அறிவோ, 'கோமாதா' என்று கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றி வழிபடுதற்குரிய தகுதியோ பெற்றது அல்ல; 'பத்தோடு பதினொன்று' என்னும் அளவுக்குப் பிற உயிரினங்களைப் போலவே அதுவும் ஓர் ஐந்தறிவு ஜீவன்தான் என்னும் பகுத்தறிவுப் பாடத்தைக் கற்பிக்கவில்லையா?

முதல்வர்[கர்னாடகா] அவர்களே,

மக்களைப் பயனுள்ள வகையில் சிந்திக்கத் தூண்டும் பொறுப்பு,  மாநில முதலமைச்சரான உங்களுக்கு உண்டு. அவர்கள் முட்டாள்களாகவே இருந்துகொண்டு இருந்தால்தான் உங்கள் கட்சி ஆட்சியைக் கைப்பற்றவும், அதைத் தக்கவைக்கவும் முடியும் என்று நம்புகிறீர்களா?

ஒரு விலங்கை வழிபடுவதால் என்ன நன்மை என்று ஒரு நாளும் நீங்கள் சிந்தித்ததே இல்லையா? தீமை மட்டுமே விளையக்கூடும் என்பதையாவது இன்று புரிந்துகொண்டிருப்பீர்கள் என்பது நம் நம்பிக்கை.

ஏதும் விசேடம் என்றால், உங்களின் சொந்தபந்தங்களுக்குக் 'கறி விருந்து' படைக்கத் தவறுவதில்லை. அந்த விருந்துகளுக்கு மூலாதாரமே ஆடுகளும் கோழிகளும்தான். அந்த இரண்டும்தான் பசு மாட்டைவிடவும் அதிகம் பயன் தருபவை. அவற்றை நீங்கள் 'மாதா பிதா' என்று எந்தவொரு பெயரிலும் கொண்டாடுவதில்லையே, ஏன்?

நீங்கள் உங்களின் குலதெய்வமாகக் கருதுகிற பசுமாட்டிடம், "ஓ கோமாதாவே, இன்று ஒரே ஒரு நாள் மட்டும் கூடுதலாக ஒரு லிட்டர் பால் கொடு" என்று கோரிக்கை வைத்தால் அதை அது நிறைவேற்றுமா?

சோதனை முயற்சியாக இப்படியொரு கோரிக்கையை முன்வைப்பீர்களா முதலமைச்சர் அவர்களே?

'இந்தியா பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் வங்காளதேசத்தையும் பாகிஸ்தானைவிடவும் கீழே கிழே இடம்பெற்றுள்ளது' என்பது அண்மைக்காலப் புள்ளிவிவரம் தரும் தகவல்.

குரங்கு, நாய், பன்றி, பாம்பு, பசுமாடு என்று நீங்களும் உங்களைப் போன்ற இந்துத்துவாக்களும்  ஐந்தறிவு உயிரினங்களை வழிபடுவது தொடருமேயானால்.....

இந்தியா, வளரும் நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை அடைவது மட்டுமல்ல, 'வளரவே வளர வாய்ப்பில்லாத நாடுகள்' என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டால், அந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைக் கைப்பற்றும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடமில்லை என்பதை அன்புகொண்டு புரிந்துகொள்ளுங்கள் முதல்வர் அவர்களே!

==========================================================================


செவ்வாய், 26 ஏப்ரல், 2022

கண்டனக் குரல் எழுப்பும் கறுப்பு ஆடுகள்[கவிதை]!

'தினமலர்'[26.09.2004] வாரமலரில் வெளியான ஒரு கவிதையைத் 'தழுவி' எழுதப்பட்டது இந்தக் 'கறுப்பு ஆடுகள்' குறித்த குறுங்கவிதை.

கவிஞர் மயிலாடுதுறை த.வீரப்பன் அவர்களுக்கும் 'தினமலர்' நாளிதழுக்கும் நம் நன்றி.


திங்கள், 25 ஏப்ரல், 2022

'புனிதம்' பொய்யர்களின் புகலிடம்!!!

கராதிகளெல்லாம், 'புனிதம்' என்னும் சொல்லுக்குத் 'தூய்மை', 'தெய்வீகத்தன்மை' என்று பொருள் தருகின்றன.

தூய்மை என்னும் பொருள் ஏற்கத்தக்கது. 'தெய்வம்' இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரை 'தெய்வீகத்தன்மை'யை ஏற்க இயலாது.

'மனிதத்தன்மையே' புனிதம் என்கிறார் 'மனிதம் புனிதம்'[2021 வெளியீடு ஐஸ்வர்யா பப்ளிகேசன்ஸ், குரோம்பேட்டை, சென்னை] என்னும் நூலாசிரியர் நா.பெருமாள்.

மனிதத்தன்மையை மனிதம் என்றே சொல்லலாம். அதற்குப் புனிதம் என்னும் வெளிப்பூச்சு தேவையில்லை.

ஆக, தூய்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லை[ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது], கடவுளைக் கற்பித்துப் பக்தி நெறி பரப்பிய மதவாதிகள், 'தெய்வீகத் தன்மை' என்ற ஒன்றைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது அறியத்தக்கது.

ஆளுக்கொரு நூலை[வேதம் என்னும் பெயரில்] எழுதிவைத்துக்கொண்டு, 'இது கடவுளால் அருளப்பட்டது என்று பரப்புரை செய்த மதவாதிகள்தான், 'புனிதம்' என்னும் சொல்லுக்கு இந்தப் புதிய பொருளை[தெய்வீகத்தன்மை]ச் சேர்த்தவர்கள்.

தூய்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட சொல்லுக்குத் 'தெய்வீகத் தன்மை'யை ஏற்றியதோடு,

கடவுளைப் புகழ்ந்து பேசுகிறவர்களைப் 'புனிதர்கள்' ஆக்கினார்கள். 

அசுத்தம் நிறைந்த ஆற்று நீரைப் புரியாத மந்திரங்களைச் சொல்லிப் 'புனித நீர்'  ஆக்கினார்கள்.

அதைக் கோபுரக் கலசங்கள் மீது கொட்டி மந்திரம் ஓதினால், லட்சக்கணக்கானவர் கூடி நின்று மெய் மறந்து வழிபடுகிறார்கள்.

சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிலைகள் மீது ஊற்றினால் அவற்றில் தெய்வம் குடியேறிவிடும் என்று நம்ப வைத்தார்கள். அதை நம்புகிறவர்கள் கோடானு கோடிப் பேர்.

இந்த உண்மையைச் சொல்லித் "திருந்துங்கள்" என்று சொல்கிறவர்கள் 'நாத்திகர்கள்' ஆக்கப்பட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுகிறார்கள். திருந்தவிடாமல் தடுத்துக்கொண்டிருப்பவர்கள் 'யோக்கியர்கள்', 'உத்தமர்கள்' என்றெல்லாம் போற்றிப் புகழப்படுகிறார்கள்.

ஆக, இல்லாத தெய்வீகத்தன்மைக்குப் புனிதம் என்றொரு சொல்வடிவம் தந்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறவர்கள் மகா மகா மகா புத்திசாலிகள்தான்!!!

==========================================================================


ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

அதிகாலை[4-6 மணி] நேர அந்தரங்க உறவின் நன்மைகள்!

பொதுவாக, தாம்பத்திய உறவு என்றால் அது இரவில், அதுவும் இருட்டறையில்தான் நடக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். நம் சமூக அமைப்பும் அதையேதான் போதித்து வந்துள்ளது.  பெரும்பாலான தம்பதியினர் அதையே கடைபிடித்தும் வருகின்றனர். இதனால், சிலர்[பலர்?] விருப்பம் இல்லை என்றாலும், தேவைக்கு ஏற்ப முன்னிரவிலேயே உறவில் ஈடுபட்டுத் தூங்கச் செல்கின்றனர்.

சில ஆண்கள் அதிகாலையில் உறவு கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், காலையில் வேகமாக எழுந்து வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் செய்து முடித்து, குழந்தைகளைப் பள்ளிக்கும், கணவரை அலுவலகத்திற்கும் அனுப்புவதில் கவனம் செலுத்தும் பெண்கள் "இரவு பார்த்துக்கொள்ளாலாம்" என்று கூறி, கணவர்களின் ஆசைக்கு நிரந்தரத் தடை விதிப்பது மிகப் பெரிய சோகம்.

இம்மாதிரிப் பெண்களுக்காகவே, 'விடியற்காலை உறவால் விளையும் நன்மைகள்'[அண்மைக் கால ஆய்வுகளில் வெளியான தகவல்கள்] இங்கே பட்டியலிடப்படுகிறது.

நன்மைகள்:

1.அதிகாலையில் உறவு கொள்ளும்போது நமது உடலில் "ஆக்ஸிடோசின்" எனப்படும் நல்ல ரசாயனம் ஒன்று வெளிப்படும். இது நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கப் பெரிதும் உதவுகிறதாம். 

2. நோய் எதிர்ப்புப் சக்தி அதிகரிக்கிறது.

3. குளிர் காலத்தில் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிப்பது குறிப்பிடத்தக்க பயனாகும். 

4.இந்த நேர உறவால், இரத்தமானது இரத்த நாளங்களில் சீராக உந்தப்படுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படும். சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குணமடைகின்றன. பெண்களின் கூந்தல், சருமம், நகம் ஆகியவை நன்றாக வளர்ச்சி அடைகின்றன.

5.உடலில் உள்ள 'வளர்ச்சி ஹார்மோன்கள்' தூண்டப்படுவதால் உடல் வலிமை அதிகரிக்கும். 

6.அன்றாடப் பணிகளில் வெகு சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.

*கணவர்கள், தத்தம் மனைவிமாரிடம் இது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தால் மட்டுமே இந்த அதிகாலை நேர உறவுக்கு அவர்கள் சம்மதிப்பார்கள் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

"விடிகாலைத் தூக்கம் தரும் சுகத்துக்கு இணையாகுமா இந்த அந்தரங்க உறவு தரும் சுகம்?" என்று கேள்வி கேட்பவர்களுக்கு நாம் தரும் பதில்.....

"இல்லை" என்பதே! ஹி... ஹி... ஹி!!!

==========================================================================

https://trell.co/read/-3402df53c744 

சனி, 23 ஏப்ரல், 2022

வருத்தும் நோய்களும் மருத்துவர் பதில்களும்!

'தினமணி' நாளிதழின் மிகப் பழைய மருத்துவ மலரிலிருந்து[டிசம்பர் 1999] அனுமதியின்றிச் சுட்டெடுத்தவை கீழ்க்காணும் கேள்விகளும் பதில்களும். 

இடம்பெற்றுள்ள தகவல்களில் சிலவோ பலவோ ஏற்கனவே நீங்கள் அறிந்தவையாக இருப்பினும், அவற்றை நினைவுகூர்தலால் பயனே விளையும் என்பது என் எண்ணம்.

வாசிப்பைத் தொடரலாம்.

கேள்வி-பதில்:

*தலைவலிக்கான காரணங்கள் எவை?

<>காலையில் காப்பி குடிப்பதை வழக்கப்படுத்தியிருந்து ஒரு நாள் குடிக்காமல் இருந்தால் வரலாம். இது சாதாரணத் தலைவலி.

<>மூளையில்கட்டி இருந்தாலும் வரும். இது ஆபத்தானது.

<>கிட்டப் பார்வையும் காரணம்[கிட்டப் பார்வையின் அளவு 0.25இலிருந்து மைனஸ் 0.50வரை இருந்தால் தலைவலி வரும்].

<>கண் நீர் அழுத்த நோய்[க்ளாக்கோமா] இருப்பது, தூங்கி எழுந்தவுடன் தலைவலி வருவதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

<>ரத்த அழுத்த அதிகரிப்பும் தலை வலியை உண்டுபண்ணும்.

<>கழுத்துக்குப் பின்புறம் உள்ள முள்ளந்தண்டு எலும்பு தேய்ந்து அங்கிருக்கும் நரம்புகள் பாதிக்கப்படுவதும் ஒரு காரணம்.

*கர்ப்பக் காலத்தில் எத்தனை மாதம்வரை உடலுறவு கொள்ளலாம்?

<>7 மாதம்வரை கொள்வதில் பாதிப்பு ஏதுமில்லை.

<> அதன் பிறகான உறவு, நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும்.

<>கடைசிவரை உறவு கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்பது தவறு. 

*தும்மலைத் தடுக்க வழி உண்டா?

மூக்கும் உதடும் சேரும் இடத்தில் ஒரு நிமிடம்போல விரலால் அழுத்திக்கொண்டிருப்பதன் மூலம் தும்மலைத் தடுக்கலாம்.

*கொட்டாவி வரும்போது இரு கண்களிலும் நீர் வழிகிறதே, தீர்வு உண்டா?

<>கண்கள் சோர்ந்துபோவதே காரணம். அடிக்கடி இது நிகழ்ந்தால் சத்துணவில் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

*சிறுநீரை அடக்குவதால் உண்டாகும் பிரச்சினைகள் எவை?

<>சிறுநீர்ப் பையில் தேங்கும் நீர் அதை விரிவடையச் செய்யும். படிப்படியாகச் சிறிநீர்ப்பை, தன்னுடைய இயல்பான 'சுருங்கி விரியும்' தன்மையை இழக்கும். சிறுகச் சிறுகத்தான் சிறுநீர் வெளியேறும்; தடைபடுதலும் நிகழும்.

<>சிறுநீர் வெளியேறும் உணர்வு தோன்றும்போதே வெளியேற்றிவிடுவது பிரச்சினை உண்டாவதைத் தவிர்க்க உதவும்.

*பிரசவத்திற்குப் பிறகு வயிறு சுருங்க என்ன செய்யலாம்?

<>உடல்நிலை சற்றே தேறியவுடன் உடற்பயிற்சியைத் தொடங்குதல் வேண்டும்.

<>ஆறு மாதம் போல் பயிற்சி செய்தால் வயிற்றுச் சதை குறையும்.

<>வயிற்றுக்குப் பெல்ட் அணியும் முறையையும் பின்பற்றலாம்.

*குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை 'மாதவிலக்கு' வராது என்பது உண்மையா?

<>தாய்ப்பால் கொடுத்தால் ஆறு மாதம்வரை வராது.

<>தாய்ப்பால் குறைவாகக் கொடுத்தால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

*நாய் கடித்தால் கட்டுப் போடுவது கூடாதா?

<>கூடாது. போட்டால், நாயின் வாயில் தங்கியிருக்கும் ரேபீஸ் வைரஸ் காயத்துக்குள் சென்று நம் ரத்தத்தில் கலக்கும்.

<>நாய் கடித்தவுடன் காயத்தின் மீது சோப்புப் போட்டு, அதிக நீர் விட்டுக் கழுவுதல் வேண்டும்.

<>தெரு நாயோ வெறி நாயோ வீட்டு நாயோ எந்த நாய் கடித்தாலும் தடுப்பூசி போடுதல் அவசியத் தேவை.

*செல்லப் பிராணிகளிடம் அன்பு செலுத்துவது உடல் நலத்தைப் பாதிக்குமா?

<>அன்பு செலுத்துவதில் தவறில்லை. அதன் உடலை நுகர்வதோ, அதன் வாயில் நம் வாயை வைத்து முத்தமிடுவதோ நோய்கள் பரவ வாய்ப்பளிக்கும்.

*மாரடைப்பைத் தவிர்ப்பதற்கான மிக முக்கிய வழிகள்?

<>மன உளைச்சலைத் தவிர்ப்பது மிக மிக முக்கியம்.

<>ரத்தத்தில் கொழுப்புச் சேராமலிருக்கத் தினசரி நடைப் பயிற்சி அல்லது முறையான உடற்பயிற்சி அவசியத் தேவை.

*முகத்தில் 'பரு' உருவாவதைத் தடுப்பது எப்படி?

<>ஒரு நாளில் 3 முறையாவது முகத்தைச் சோப்பினால் கழுவுதல் வேண்டும். 

<>மலச்சிக்கல் ஏற்படாத வகையில், அதிக அளவு தண்ணீர் குடித்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

<>அயோடின் கலந்த உப்பைத் தவிர்த்தல் வேண்டும்.

*கண்களுக்குள் மண்ணோ தூசியோ விழுந்தால் அவற்றை வெளியேற்றுவதற்குச் செய்ய வேண்டியது என்ன?

<>எதுவும் செய்யாமலே இருந்தால் போதும். கண்களில் பெருகும் நீரே அவற்றை வெளியேற்றிவிடும். வெளியேறாவிட்டால் மருத்துவரிடம் செல்வதே நல்லது.

*பற்களைப் பாதுகாக்க வழிகள்?

நிறைய உள்ளன.

<>சாப்பிட்டு முடித்தவுடன் நன்றாக வாய் கொப்பளித்தல்.

<>காலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பல் துலக்குதல் அவசியம்

<>பால், பழம், கீரை முதலானவற்றை உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும்

<>வெற்றிலை, பாக்கு, சிகரெட், பான் போன்றவை கூடவே கூடாது.

<>சொத்தை விழுந்தால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுதல் தேவை.

*எளிதாக மலம் வெளியேற...?

<>நார்ச்சத்து உள்ள பொருள்களை அதிகம் உண்ணுதல் முக்கியம்.

<>எழுந்தவுடன் மலம் கழிக்கச் செல்வதைப் பழக்கப்படுத்துதல் மிக முக்கியம்.

<>அன்றாடம் நடைப் பயிற்சி அல்லது வேறு உடற்பயிற்சியைத் தவிர்த்தல் கூடாது.

==========================================================================

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

'சாதனை' நிகழ்த்துவதில் கிழவர்களை மிஞ்சும் கிழவிகள்!!!

'சாதிக்க வயது தடையல்ல' என்னும் தலைப்பில் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது அடுத்து வரும் செய்தி.[https://tamil.news18.com/news/international/102-year-old-thai-man-breaks-100m-record-in-elderly-athlete-lill-ghta-711615.html  MARCH 05, 2022,].

உலக அளவில் ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்த 'உசேன் போல்ட்' எடுத்துக்கொண்ட நேரத்தை விடவும்[கடந்த 2009ஆம் ஆண்டில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை இவர் 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார்] சுமார் 3 மடங்கு நேரத்தில் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை ஓடிக் கடந்த ஒரு முதியவரை இன்றைய இணைய உலகம் கொண்டாடிவருகிறது. 100 மீட்டர் தொலைவைக் கடக்க 27.08 நொடிகளை எடுத்துக்கொண்ட  அந்த முதியவர்.....

'சவாங் ஜன்ப்ராம்' என்பவர். இவரின் வயது 102.

தாய்லாந்தில் நடைபெறும் வருடாந்திர மாஸ்டர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 4 முறை இவர் பங்கேற்றுள்ளார். குறிப்பாக, '100 மீட்டர் ஓட்டம்', 'ஜாவ்லின் த்ரோ' மற்றும் 'டிஸ்கஸ் த்ரோ' ஆகிய போட்டிகளில் இவர் பங்கேற்பது வழக்கம்.

கடந்த வாரத்தில் 26ஆவது சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்தின் சமுத் சோங்கிராம் மாகாணத்தில் நடைபெற்றது. 100-105 வயது வரையிலான பிரிவினருக்கு நடத்தப்பட்ட அனைத்துத் தடகளப் போட்டிகளிலும், சக போட்டியாளர்களை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார் சவாங் ஜன்ப்ராம்.

சவாங் தினசரி தனது 70 வயது மகள் சிரிபானுடன் நடைப் பயிற்சி செய்கிறார். வீட்டுத் தோட்டத்தில் உதிர்ந்து விழும் இலைகளைக் கூட்டிப் பெருக்குவது உள்பட, சின்னச் சின்ன வீட்டு வேலைகளையும் இவர் செய்கிறார்.

தன் தந்தை எப்போதுமே நேர்மறையாகச் சிந்திப்பவர் என்றும், ஆகவேதான் அவரது உடல் நலனும், மன நலனும் பலமாக இருக்கிறது என்றும் அவருடைய மகள் 'சிரிபான்' ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது நம்மைக் கவர்வதாக உள்ளது.

ஒரு 102 வயது வாலிப வயோதிகக் கிழவர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது மிக்க மகிழ்ச்சி தரும் செய்திதான்.

இந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் நமக்குப் பெரு மகிழ்ச்சி தருவதாக உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த கிழவி ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை நிகழ்த்தினார் என்னும் செய்தி[https://www.hindutamil.in/news/supplements/penn-indru/742030-women-360.html -வெள்ளி, ஏப்ரல் 2022]

வாலிபக் கிழவியின் வயது 105. இவரின் பெயர்: 'ஜூலியா'[இவர் 100 மீட்டரை 62 நொடிகளில் கடந்தார். 

கிழவர் 102 வயதில் சாதித்ததைக் கிழவியார் 105 வயதில் சாதித்தார் என்பதைக் கருத்தில் கொள்க!

"ஓட்டப் பந்தயங்களில் கிழவர்களைப் போல் சாதனை நிகழ்த்தும் கிழவிகளால், 'அது' விசயத்தில் சாதிக்க முடியுமா?" என்று நம்ம ஊர்க் 'குடு குடு' கிழவர்கள் கேள்வி கேட்பார்களேயானால் பதிலளிப்பது நமக்குச் சாத்தியமே இல்லைதான்! 

ஹி... ஹி... ஹி!!!

==========================================================================


வியாழன், 21 ஏப்ரல், 2022

'உக்ரைன்' போருக்குப் பின் புடினுக்குப் புத்தி பேதலிக்கும்!?


'உக்ரைன்' போரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது இப்போது எவருக்கும் தெரியாது.

போரில் தோற்றால்.....

ஒரு வல்லரசின் அதிபர் என்ற முறையில் ஒரு சின்னஞ் சிறிய நாட்டிடம் அடைந்த தோல்வியைப் 'புடின்' அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது.  அதன் விளைவு அவரின் மனநிலை பாதிக்கப்படலாம். 

போரில் வென்றால்.....

கட்டுக்கடங்காத மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பார்.

கொஞ்சம் நாட்கள் கழித்துத்தான் இயல்பு நிலைக்குத் திரும்புவார்[இப்போது போரின் வெற்றியைப் பற்றி அல்லாது வேறு எதையும் சிந்திக்கும் நிலையில் அவர் இல்லை]. 

அந்நிலையில், தான் நிகழ்த்திய போரால் உக்ரைன் மக்கள் பட்ட விவரிப்புக்கு அடங்காத துன்பங்கள் பற்றி, ஊடகங்களில் வெளியான செய்திகளை நினைவுகூர்ந்து சிந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமையும்.

அப்போது அவர் அறிய நேரும் துயரச் செய்திகள் கீழ்க் கண்பவையாகவும், இவை போன்றவையாகவும்  இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

*ரஷ்ய ராணுவத்தினரின் வன்முறையிலிருந்து தப்பிக்க முயன்றவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்கள்.

*நகரங்களிலும் கிராமங்களிலும் சித்திரவதை செய்யப்பட்ட உக்ரைன் மக்களின்   சடலங்கள் தெருக்களில் சிதைந்து சிதறிக் கிடந்தன.

"உக்ரைனில் இருந்து வரும் அகதிகளில் பெரும்பான்மையான பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டுப் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 

*ரஷ்யப் படைவீரர்களின் தாக்குதலுக்கு உள்ளான பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தண்ணீர், உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

*உணவும் உறக்கமுமின்றி, வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். மெத்தை மற்றும் போர்வைகளால் மூடப்பட்ட உருளைக்கிழங்கு அடுக்குகளில்கூட ஒளிந்திருந்து ரஷ்ய ராணுவத்தினரின் கொடூரத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள்.

*போர்க் கைதிகளில், பெண்கள் ஆண் குழுக்களின் முன்னால் நிர்வாணப்படுத்தப்பட்டுத் துன்புறுத்தல்களுக்கும் கற்பழிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்... படுகிறார்கள்.

*UNICEFஇன் அவசரகாலத் திட்டங்களின் இயக்குனராக 31 ஆண்டுகள் பணியாற்றிய 'மானுவல் ஃபோன்டைன்', "பணிக் காலத்தில் மிகக் குறைந்த நேரத்தில் இவ்வளவு சேதம் ஏற்பட்டதை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன்" என்றார்[ஊடகப் பேட்டி].

அவர் மேலும் கூறுகையில், "3.2 மில்லியன்  குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் போதிய உணவு இல்லாத நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 1.4 மில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறார்கள். 4.6 மில்லியன் மக்கள் மாசடைந்த நீரைப் பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

*ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கியேவுக்கு வெளியே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் புகைப்படக் கலைஞர் 'மிகைல் பாலிஞ்சக்' எடுத்த புகைப்படம் உலகையே திகிலடையச் செய்தது. அதில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களின் உடல்கள் போர்வையின் கீழ் மூடப்பட்டிருந்தன. பெண்கள் நிர்வாணமாக இருந்தனர். அவர்களின் உடல்கள் ஓரளவு எரிக்கப்பட்டிருந்ததாகப் புகைப்படக்காரர் கூறினார்.

*பெண்கள் மற்றும் சிறுமிகள் ரஷ்ய வீரர்களால் தாங்கள் அனுபவித்த அட்டூழியங்களைக் காவல்துறை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் கூற முன்வந்துள்ளனர்.  

*கூட்டுப் பலாத்காரம், துப்பாக்கி முனையில் நடக்கும் தாக்குதல்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கற்பழிப்புகள் ஆகியவை பற்றிய தகவல்கள் புலனாய்வாளர்களால் சேகரிக்கப்படுகின்றன.

*"எங்களின் அவசரகால ஹாட்லைனுக்குப் பெண்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்து உதவி கோரிப் பல அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உடல் ரீதியாக உதவுவது சாத்தியமில்லை. சண்டையின் காரணமாக எங்களால் அவர்களை அடைய முடியவில்லை” என்று லா ஸ்ட்ராடா உக்ரைனின் தலைவர் 'கேடரினா செரெபாகா' கூறினார், 

*'உக்ரேனிய நகரமான 'சபோரிஜியா'வில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் வருகிறார்கள். அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று அழைப்பது தவறு. ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதலால் விளைந்த பயங்கரங்களைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருக்கும் பாவிகள் அவர்கள் என்பதே பொருந்தும்.'

*அவர்களின் முகங்களில் நீங்காத நிழலாய் ஒட்டிக்கொண்டிருந்தது பல நாள் அதிர்ச்சி.

*அந்தக் கும்பலில் ஒரு ஜோடி[மரியுபோலிலிருந்து தப்பிவந்தவர்கள்]யினர் சொல்கிறார்கள்.....

"நாங்கள் எங்களின் முழு வாழ்நாளைக் கழித்த எஙகளின் நகரம் இப்போது எலும்புக் கூடுகள் நிறைந்த பேய் நகரமாகக் காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் சாம்பல் மேடுகள். கிட்டத்தட்ட எங்கள் வாழ்க்கையும் சாம்பலானது என்றால் அது மிகையல்ல."

*'ஸ்கை' நிருபர் மார்க் ஸ்டோணிடம் ஒரு நோயாளி சொன்னது:

"வெடிகுண்டு ஒன்று விழுந்ததில், எங்கள் வார்டில் இருந்த ஜன்னல்கள் அனைத்தும் உடைந்தன. 

எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை; சென்ட்ரல் ஹீட்டிங் இல்லை; நோயாளிகள் படுத்துக்கொள்ளப் போதிய இடவசதி இல்லை. கடும் குளிர். போர்த்துக்கொள்ளக் கொஞ்சம் போர்வைகள் மட்டுமே இருந்தன.

இந்தக் குண்டுகள் மற்றும் பல்வேறு பீரங்கிகளை நினைத்து மக்கள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனையின் ஜன்னல்களிலிருந்து பல மாடிக் கட்டிடங்கள் எரிவதை நாங்கள் பார்த்தோம்.

மக்கள் அழுவதை எங்களால் கேட்க முடிந்தது. அது கொடுமையாக இருந்தது. மேலும் அவர்கள் பயந்து ஒதுங்குவதற்காக மருத்துவமனைக்குக் குழந்தைகளுடன் வருகிறார்கள். 

வந்தவர்களில் பலரும் காயம் அடைந்தவர்கள். சிலருக்குக் கைகளோ கால்களோ இல்லை.

அது ஒரு பேய் நகரம். ஒன்பது மாடிக் கட்டிடங்களின் எலும்புக்கூடுகள்.

குண்டுகள் வெடித்தபோது, பலர் தாங்கள் பதுங்கியிருந்த கட்டடங்களின் அடித்தளங்களிலேயே நசுங்கிப் பிணம் ஆனார்கள். "

இவ்வாறான கொடூர நிகழ்வுகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் 'புடின்' அவர்கள், "நானா, ஏதுமறியாத அப்பாவி மக்கள் இத்தனைக் கொடூரமான துயரங்களை அனுபவிக்கக் காரணமானேன்" என்று வருந்துவார்; அவரின் மனசாட்சி வாட்டி வதைக்கும்; மனநிலை பாதிக்கப்பட நிறையவே  வாய்ப்பு உள்ளது!

மேலே இடம்பெற்ற துயர நிகழ்வுகள் கீழ்க்காணும் ஊடகச் செய்திகளிலிருந்து திரட்டிச் சுருக்கிப் பதிவு செய்யப்பட்டவை.

https://news.sky.com/story/ukraine-war-couple-who-survived-45-days-of-hell-in-war-torn-mariupol-tell-of-their-escape-12591999   

https://timesofmalta.com/articles/view/putin-honours-brigade-accused-of-ukraine-atrocities.949081

https://edition.cnn.com/2022/04/14/europe/ukraine-russia-atrocities-eyewitness-intl-cmd/index.html

https://www.aljazeera.com/news/2022/4/6/mariupol-mayor-accuses-russia-of-atrocities

https://www.theguardian.com/world/2022/apr/03/all-wars-are-like-this-used-as-a-weapon-of-war-in-ukraine

==========================================================================


புதன், 20 ஏப்ரல், 2022

'கலவி'க்கு முந்தைய 'கிளு கிளு' முன்விளையாட்டு!!!

அந்தரங்க உறவு என்பது, இரு மனம் கலந்து ஈருடல் இணைந்து கொஞ்சியும் குலாவியும் பெறுதற்குரிய சுகானுபவம் ஆகும். இது இயற்கையின் கொடை என்பது பறவைகளின் வாழ்க்கையை ஆராய்ந்தால் புரியும்.

இவற்றிடமிருந்து மனிதர்கள் நிறையவே கற்கலாம். சில பறவைகளின் 'உறவாடல்' முறை குறித்து இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாசியுங்கள்.

கிளிகள்:

பறவை இனங்களில், 'முன்விளையாட்டு' நிகழ்த்துவதில் முதலிடம் பிடிப்பவை கிளிகள்தான்.

அடர் மரக்காட்டில், தன்னந்தனிக் கிளையைத் தேர்வு செய்து கிளி ஜோடி அமர்ந்துகொள்ளும்.

இப்படி அமர்ந்தவுடன், தம் கழுத்து தலை ஆகியவற்றை மென்மையான சிறகுகளால் சலிக்காமல் மாறி மாறிக் கோதிக்கொள்ளும்.

ஆண் குயில் பெண்ணின் கழுத்தின் மீது தன் கழுத்தை அழுத்தமாகப் பதித்தும் உரசியும் சிலிர்ப்பூட்டும்.

சிறகுகளை அடிக்கடி உயர்த்திக் காட்டும்; கண்களைச் சுருக்கிக் கருவிழியின் ஓரங்களைக் காட்சிப்படுத்திக் கிளுகிளுப்பூட்டும்; உணவூட்டும்; ஆணும் பெண்ணும் மாறி மாறி முத்தமிட்டுக்கொள்ளும்; நீண்ட நேரம் மெய் மறந்து இன்பத்தில் திளைக்கும்.

உடலுறவு இச்சை உச்சம் எய்தும் வகையில் இரு சிறகு விரித்து அணைத்துக்கொள்ளும். இப்படியாக அணைத்து அணைத்துக் கொஞ்சிக் குலாவிய பின்னரே புணர்தலைத் துவங்கும்.!

குயில்:

குயில்களைப் பொருத்தவரை, 'அதை' ஆரம்பிப்பதற்கு முன் நீண்ட நேரம் இசைக் கச்சேரி நடத்துமாம்.

குயில்களில் 'ஹாக்குயில்' என ஒரு வகை இருக்கிறது. இந்த ஜோடிகள் இனவிருத்திக் காலத்தில் தணியாத ஏக்கத்துடன் மாலையில் தொடங்கி இரவு நெடு நேரம்வரை ராகம் பாடும். 

ஓயாத இசை வாசிப்பினால் உடம்பு முழுக்கச் சூடு பரவிய நிலையில் அதைத் தணிக்க உடலுறவில் ஈடுபடுமாம்!

நாரை:

வெள்ளை நாரைகளில், ஆண் நாரை உயரமான மரக் கிளைகளில் அமர்ந்து, பெண் நாரையை நெருங்கி,  குறைந்த தொனியில் சிறிது நேரம் 'டிரம்பெட்' இசைக்கும். பெண் நாரையும் பதிலுக்கு 'டிரம்பெட்' இசைத்தால்,  "சம்மதம்... வா... நெருங்கி வா. கூடிக் குலாவலாம்" என்று சொல்வதாக அர்த்தமாம்.

இதன் பிறகு, இரண்டு நாரைகளும் தம் நீண்ட கழுத்தை 'எஸ்' எழுத்துப் போல் வைத்துக்கொண்டு, மேலும் கீழும் உரசிக்கொள்ளும்; அவ்வப்போது 'தட்டுதல்'கூட இடம்பெறும்.

நீண்ட கழுத்தை, ஒன்று மற்றொன்றன் சிறகுகளுக்குள் நுழைத்து எதையோ எழுதுவது போல் கோதிக்கொள்ளும். இதன் விளைவு.....

'காமச்சூடு' பெருகும்.

பெண்ணின் காம உணர்ச்சியை மேலும் கூட்டும் வகையில், ஏழெட்டு அடி உயரத்திற்கு மேலே எழும்பி, இறக்கைகளைப் படபடக்கச் செய்து தனக்குள்ள அழகையும் பேராண்மையையும் காட்சிப்படுத்துமாம் ஆண் நாரை.

வெட்க மிகுதியால் நாரைப் பெண், "என்னை ஏற்றுக்கொள்" என்பது போல் நாணத்துடன் தலை குனிந்து நிற்குமாம். அப்புறம்?

அப்புறமென்ன, இதுகூடவா உங்களுக்குத் தெரியாது?

மயில்:

ஆண் மயிலுக்கு 'மூடு' வந்ததும் கழுத்தைச் சற்றே விறைக்கச்செய்து, தன் நீல நிறச் சிறகை விரித்தபடி நடை பயிலும்.

தோகை விரித்தாடும்போது, இறக்கைகளைப் பாதி திறந்த நிலையிலும், கீழ்நோக்கிய நிலையிலும் வைத்துக்கொள்ளும். நடனத்தின்போது சிறகுகளை மேலும் கீழும் அசைத்து அதிர்வுகளை உண்டாக்கும். சிறகுகளிலிருந்து கனமான ஒலி எழும்பும். 

பெட்டைகள் பாராமுகமாக இரை பொறுக்கிக்கொண்டிருந்தால், ஆண் மயில் அவற்றைச் சுற்றி ராஜகம்பீர நடை பயிலும். தோகை விரித்தபடி துள்ளித் துள்ளிக் குதிக்கும். பெட்டைகள் மயங்கும்.

ஆண் மயில் வாளிப்பான பெண் மயிலைத் தேர்வு செய்து, அதைச் செல்லமாய்க் கொத்திக் கொத்திக் கொஞ்ச நேரம் விளையாடும்.

அப்புறம் மறைவான இடத்திற்கு இட்டுச் சென்று சல்லாபத்தைத் தொடங்கும்.

காக்கை:

ஆண் காக்கை, இரை கிடைத்தால் அதை உண்ணாமல் கொண்டுவந்து பெண் காக்கைக்கு ஊட்டிவிடும்; மேல் நோக்கிப் பறக்கும்; திடீரென்று திசை மாறி அம்பு போல் கீழ் நோக்கிப் பாய்ந்துவரும். "வா... வந்து உறவாடு" என்பதாகப் பெண் காக்கை சிக்னல் கொடுத்தவுடன் ஆண் காக்கை அதனுடன் உறவாடத் தொடங்கும்.

புறாக்கள்:

ஜோடிப் புறாக்கள் பகலில் இரை தேடித் திரும்பும்போதுகூடப் பிரிவதில்லை; இரண்டும் பார்வை வட்டத்துக்குள்ளேயே இருக்கும். "ஐ லவ் யூ" சொல்வது போல் சிறு சிறு கேவல்களை எழுப்பும்.

மாலையில் இருப்பிடம் திரும்பிய பிறகு, விறுக் விறுக்கென்று பறந்து கண்ணாமூச்சு விளையாடும்; அருகருகே அமர்ந்து பரஸ்பரம் வாசனை நுகரும்.

பெண் புறா, தன் மார்புப் பகுதிச் சிறகுகளை மட்டும் ஆப்பிள் சைசுக்குப் 'பஃப்' செய்து காட்டும்; வால் பக்கச் சிறகுகளை மேலே உயர்த்திப் போஸ் கொடுக்கும். அதுதான் அந்தரங்க உறவுக்கான அழைப்பாகும்.

அதன் பிறகுதான் 'கலவி' ஆரம்பமாகும்.

==========================================================================

***Dr.R.கோவிந்தராஜ் அவர்களின், 'ஆகாய ஆட்சி' என்னும் நூலிலிருந்து திரட்டிய தகவல்களின் தொகுப்பு இந்தப் பதிவு.


செவ்வாய், 19 ஏப்ரல், 2022

'கருந்துளை[black hole]' குறித்த கலக்கல் கட்டுரை!!!

அறிவியலின் மீது அளவற்ற காதல் கொண்ட இளைஞர் 'ரா.பிரபு'[புனைபெயர்: 'அறிவியல் காதலன்']. அறிவியல் செய்திகளைத் தமிழில் சுவைபடச் சொல்லுவதில் வல்லவர். 

'கோரா'வில் கேட்கப்பட்ட, 'கருந்துளை' தொடர்பான கேள்விக்கு இவர் தந்த பதில் இங்கே  பதிவாக்கப்பட்டுள்ளது.

                                           *   *   *   *   *

"பிளாக் ஹோல்"... ஒரு நிறமற்ற ரகசியம்

அறிவியலில்....அதாவது வான் அறிவியலில் ஆர்வம் உடையவர்கள், எப்போதும் பார்த்து வியக்கும் ஒரு பொருள் இந்தப் 'பிளாக் ஹோல்' ஆகும்.

பிரபஞ்சத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று இது.

இதைப் பொருள் என்று சொல்லலாம். ஆனால் எக்கச்சக்கமான சக்தி ரூபமாக இருப்பதால், இதைச் 'சக்தி' என்றும் சொல்லலாம்.  

இதை நாம் பார்க்க முடியாது(பிளாக்ஹோல் என்ற பெயரை வைத்து இதன் நிறம் கறுப்பு என்னும் முடிவிற்கு வருதல் கூடாது).

இதைப் பற்றிச் சொல்வதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி.....

உங்கள் பின் தலையை உங்கள் கண்களாலேயே பார்க்க முடியுமா? [கண்ணாடி அல்லது, போட்டோ எடுத்தல் என்று ஏதும் செய்யாமல் நேரடியாக நம் கண் கொண்டு பார்ப்பது).

முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிளாக் ஹோல்.....

அது எங்கே இருக்கிறது? ஒன்றா, பலவா?

அது இந்தப் பிரபஞ்சத்தில் பல கோடி எண்ணிக்கையில் இருக்கிறது.

அதை விளக்குவது கடினம் என்றாலும் அதன் சக்தி எப்படிபட்டது என்பதை இப்போது அறியலாம்.

உங்களிடம் நான் ஒரு எலுமிச்சம் பழத்தைக் காட்டுகிறேன். இது சாதாரண எலுமிச்சை அல்ல, மாஜிக் எலுமிச்சை[அதாவது, கருந்துளை எலுமிச்சை] என்று கருதிக்கொள்ளுங்கள்.

உங்கள் மொபைலை வாங்கி, எலுமிச்சையால் அதைத் தொட்டால் மொபைல் அப்படியே ரப்பர் போல உறிஞ்சி உள்ளிழுக்கப்பட்டு எலுமிச்சைக்குள் சென்று மறைந்துவிடுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

பக்கத்தில் நின்ற ஆட்டோ அல்லது காரை இதனால் தொட்டாலும் அவை முற்றிலுமாய்க் கரைந்து எலுமிச்சைக்குள் அடக்கமாவதாக எண்ணிக்கொள்ளுங்கள்.

பிளாக் ஹோலுக்கு அருகே செல்லும் பொருளின் நிலையும் இதுதான்.

கோடி கோடி மடங்கு ஈர்ப்பு விசை கொண்டது பிளாக் ஹோல். ஓரு சிறிய ப்ளாக் ஹோல் மிகப் பெரிய சூரியனை இழுத்து விழுங்கி ஏப்பம் விடக்கூடியது என்றால் உங்களால் வியக்காமல் இருத்தல் சாத்தியமில்லை.

பிரபஞ்சம் என்பது உண்மையான ஒரு 'இன்விசிபில்' பொருள்.

பிளாக் ஹோல் எனப்படும் இந்தக் 'கரும் துளை' எப்படி உண்டாகிறது என்பது பற்றி இனி அறிவோம்.

நம் சூரியனைவிட அளவில் பெரிய நட்சத்திரங்கள் அழியும் போது, அழிதல் நிறைவு பெற்றவுடன் அது ப்ளாக் ஹோலாக மாறிநிற்கிறது.  அதன் பின்னர் அது பல நட்சத்திரங்களை விழுங்கும் ராட்சத வலிமை கொண்ட ஒன்றாக விண்ணில் அலையத் தொடங்குகிறது.

அடுத்து, நட்சத்திரம் அழியும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

ஏதோ மெழுகுவத்தியை ஊதி அணைப்பதைப் போல 'டப்' என நடந்து முடியும் விஷயம் அல்ல இது. இது, ஒரு நீண்ட நெடியதொரு பிராசஸ் ஆகும். 

ஒரு' நட்சத்திர அழிதல்' நடந்து முடியப் பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.

அழியப்போகும் கட்டத்தில் அந்த நட்சத்திரம் தனது வழக்கமான அளவை விட மிக பெரிதாக வீங்குகிறது.

உதாரணத்திற்கு, நமது சூரியன் அந்த நிலையில் வீங்கினால் கிட்டத்தட்ட அது சனிக் கிரகம்வரை அடைத்துக் கொள்ளும்.

இந்த நிலையில் இதன் பெயர்  'சிகப்பு அரக்கன்'[(red giant)

வெளிப் பகுதி இப்படி வீங்கிக்கொண்டு இருக்க, இதன் மையப் பகுதி ஈர்ப்பு விசையில் தனக்குள்தானே சுருங்கத் தொடங்குகிறது... அதிபயங்கர விசையில் .

இதன் சென்டர் கோர் மேலும் மேலும் அடர்த்தி அதிகமாகி அதன் அணுக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு... கிட்டத்தட்ட, பலா பழத்தை அமுக்கி ஒரு கடுகு அளவுக்குச் சுருக்கியது போலச் சுருங்கிவிடும்.

இப்போது இந்த மையப் பகுதியின் பெயர்(white dwarf )வெள்ளைக் குள்ளன்..

ஒரு கட்டத்தில் மேல் பகுதி பலூன் போல வீங்கிக்கொண்டே போக மையப் பகுதி சுருங்கிக்கொண்டே போக நட்சத்திரம் வெடித்துச் சிதறுகிறது. இந்த நிகழ்வின் பெயர் சூப்பர் நோவா. இந்த நிலையில் இது வெளிப்படுத்தும் வெளிச்சம் இருக்கிறதே, அது அதன் வாழ்நாளில் வெளிப்படுத்திய மொத்த வெளிச்சத்தைவிடவும் அதிகம்.

அந்தச் சுருங்கி கொண்டே சென்ற மைய பகுதியின் நிறை மற்றும் ஈர்ப்புச் சக்தி அதிகரித்துகொண்டே சென்று முடிவில் பிளாக் ஹோல் உற்பத்தி ஆகிறது.

இப்போது இதில் இருக்கும் நிறை மற்றும் ஈர்ப்புச் சக்தி முடிவிலியாகிறது..

இனி இதை நெருங்கும் எதையும் இது உறிஞ்சி நொறுக்கி இழுத்து கொள்ளும் அது ஒளியாக இருந்தாலும் கூட.

பூமியிலிருந்து ராக்கெட் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் விண்ணை நோக்கிப் புவியின் ஈர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டும் என்றால் அது வினாடிக்கு 11.2 கி. மி வேகத்தில் சென்றாக வேண்டும். அதனைத்தான் நாம் escape velocity என்று அழைக்கிறோம். அதற்குக் குறைவான வேகம் இருந்தால் பூமி மீண்டும் இழுத்து கொள்ளும்.

ஆக, சூரியனின் எஸ்கேப் வேளாசிட்டியானது 600 கி. மி /வினாடி என்றாகிறது.

ஆனால், அந்தக் கருந்துளை அல்லது 'கரும் பாழ்' என்ற பிளாக் ஹோலில் உள்ளே நுழையும் ஓளி தனது 3 லட்சம் கிலோமீட்டர்[வினாடிக்கு] என்ற சூப்பர் வேகத்தை வைத்துக்கூட தப்பி வெளியே வர முடியாது என்றால் அதன் ஈர்க்கும் சக்தியை, எஸ்கேப் வேலாசிட்டியை அறிந்துகொள்ளலாம்.

நாம் இப்படிபட்ட மகா ஈர்ப்புவிசைக்குள் நுழைந்தால் என்னாகும்?

பல அறிஞர்கள் பல வகையாகச் சொல்கிறார்கள். ஒன்று கூட ரசிக்கும் விதமாக இல்லை. அவர்கள் வர்ணனைக்கு நரக லோகத் தண்டனைகள் எவ்வளவோ தேவலாம் .

நாம் கிட்ட தட்ட பல மைல் தூரத்திற்கு ரப்பர் போல இழுக்க படுவோம்; நமது தலையைவிட நமது பாதம் அதிக ஈர்ப்பை உணரும். நெருங்க நெருங்க அழுத்தம் கூடிக்கொண்டே போகும். நமது உடலில் ஒரு இடத்தில ஏற்படும் அழுத்ததிற்கும் உடலில் ஒரு செ. மி தள்ளி ஏற்படும் அழுத்திற்கும் வித்யாசம் பல டன் கூடி இருக்கும். நமது அணுக்கள் சிதைந்திட, பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கே நாம் மாறிவிடுவோம்.

இதில் காலமும் வெளியும் வளைக்கப்பட்டிருக்கும் என்பதால் நமது பின் தலையை நாமே காணும் வகையில் அந்த ஒளியை வளைத்து நமக்கே அது காட்டும்.

இதில் இரண்டாவதாகச் சொல்லபடும் கோட்பாடுதான் சுவாரசியமானது.

அதாவது, அதில் நுழையும் நாம் இறக்க மாட்டோம். உண்மையில் அதில் நுழையும் எந்தப் பொருளும் அழிவது இல்லை. மாறாக, சக்தி நிலையாக மாறி வேறு ஒரு பரிமானத்திற்குச் சென்றுவிடுகின்றன.

பிளாக் ஹோலில் நுழைபவை எல்லாம் வேறு எங்கோ ஒரு வானத்தில் வேறு பரிணமானத்தில் எட்டிப் பார்க்கின்றன(இணைப் பிரபஞ்சம் கட்டுரையில் நான் சொன்னதைப் போன்ற பிரபஞ்சம்).

ப்ளாக் ஹோல் வேறு உலகத்திற்கான கதவு. இதுவும் ஒரு தியரிதான்.

ஓளிகூடத் தப்பிக்காது என்று சொல்லப்பட்டாலும் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் அதை மறுத்தார். அதிலிருந்து கதிர் வீச்சு தப்பி வெளியேறுகிறது என்றார்.

அதற்கு holkins radiation என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.

இரண்டு பிளாக் ஹோல் நெருங்கி வந்தால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெரிய பிளாக் ஹோல் ஆகிறது. மேலும் பலது ஒன்று சேர்ந்தால் அது சூப்பர் மாசிவ் பிளாக் ஹோல் ஆகிறது.

நமது பால்வெளித்திரள்... galaxyயின் மையப் பகுதியில் இருப்பது இப்படி ஒரு super massive black holeதான்.

அதன் ஈர்ப்பு விசைதான் மொத்த galaxy யையே ஈர்த்துப் பிடித்து வைத்துள்ளது..

எது எப்படியோ, இன்றுவரை black hole இருப்பதை நாம் உணறுவதே அது மற்ற பொருட்களின் மேல் ஏற்படுத்தும் விளைவை வைத்துத்தான். மற்றபடி, அதைப் பார்க்கவோ அல்லது விரிவாக ஆராயவோ இன்னும் விஞ்ஞானிகளுக்குச் சாத்தியபடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

https://ta.quora.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88

திங்கள், 18 ஏப்ரல், 2022

நடிகை 'குஷ்பு' கடவுள் நம்பிக்கையை இழந்த கதை!!!

மார்ச் 14, 2022இல்  நடிகை 'குஷ்பு' அவர்கள், கடந்த காலத்தில் தனக்கேற்பட்ட மிகக் கசப்பானதொரு அனுபவத்தை 'மாலைமலர்' இதழ் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

கொஞ்சம் சுருக்கி, சற்றே மாற்றியமைக்கப்பட்ட[கருத்துப் பிறழ்வின்றி] அதன் வடிவம் உங்களின் வாசிப்புக்காக:

'வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில நிகழ்வுகள் நமது நம்பிக்கையைத் தகர்த்துவிடும் ஆற்றல் கொண்டவை.

இப்படிப்பட்ட பல அனுபவங்கள் பலருக்கும் இருக்கலாம். அப்படிப்பட்ட அனுபவத்தை நானும் பெற்றிருக்கிறேன்.

அது நிகழ்ந்தது 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதியில்.

இந்த நாள் என் நினைவை விட்டு அகலாத நாள். 

கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள்[சிலருக்குத் தீக்காயம்] வெளியே வர முடியாமல் வகுப்பறைகளுக்குள்ளேயே கருகி உருக்குலைந்துபோனார்களே, அந்த விபத்து அந்த நாளில்தான் நிகழ்ந்தது. 

நீங்காத அந்த நினைவுதான் அவ்வப்போது என்னைப் பெரும் துயரத்துள் ஆழ்த்துகிறது.

ஒரு தாயின் இடத்தில் இருந்து அந்தக் குழந்தைகளின் கடைசி நிமிடம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்து அழுவது எனக்கு வழக்கமாகிப்போனது.

அழுகையைக் கட்டுப்படுத்தவும், அந்த நினைப்பிலிருந்து விடுபடவும் நான் படாதபாடு படுகிறேன்.

குழந்தைகளுக்கு உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் சரி, வலியால் அழுதாலும் சரி நாம் துடித்துப்போகிறோம்.

ஒரே இடத்தில் எரியும் நெருப்புக்குள் சிக்கிய அந்தக் குழந்தைகள் "ஐயோ" என்று அலறிக் கூக்குரல் எழுப்பிக் கதறி அழுத கொடூரக் காட்சி இன்றெல்லாமும் நம்மைக் கதறி அழவைக்கிறது.

காலிலோ, கையிலோ லேசாக அடிபட்டால்கூட "அம்மா... அம்மா..." என்றுதான் எந்தவொரு குழந்தையும் அழும். உடல்களைத் தீ நாக்குகள் சுவைத்துக்கொண்டிருந்தபோது அத்தனைக் குழந்தைகளும் "அம்மா.... அம்மா...." என்று எப்படிக் கதறித் துடித்து இருக்கும்? இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் பெருகுகிறது.

94 குழந்தைகள் ஒன்றாக எரிந்து மடிந்தனவே! ஆசிரியர்கள், அல்லது பணியாளர்கள், அல்லது காப்பாற்ற முயன்றவர்கள் என்று எந்த ஒருவருக்கும் சிறு பாதிப்புக்கூட இல்லையே, அது எப்படி?

"எதுவும் அறியாத அந்தப் பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தன? அல்லா, ஏசு, விநாயகர், பெருமாள்... என்று எந்தவொரு கடவுளும் ஏன் காப்பாற்ற வரவில்லை?" என்ற கேள்விகள்தான் இன்றளவும் என் நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கின்றன.

கடவுள் இருக்கிறானா? இல்லையா? என்று காயம்பட்ட மனம் கேட்கிறது. விடை இல்லை.

நேற்றுவரை நூறு சதவீதமாக இருந்த கடவுள் நம்பிக்கை இன்று ஒரு சதவீதம்கூட இல்லை. முற்றிலுமாகக் கடவுள் நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

***இளகிய நெஞ்சத்தவரும், சீரிய சிந்தனையாளருமான 'குஷ்பு' அவர்களைப் போற்றுவோம்! அவரின் எதிர்காலம் நனி சிறந்திட வாழ்த்துவோம்!!

==========================================================================

https://www.maalaimalar.com/news/sirappukatturaigal/2022/03/14173047/3572109/actress-kushboo-special-interview-to-maalaimalar-in.vpf  

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ஆடவர் குலத்துக்கு அடிமேல் அடி!!!

'ஆண்களின் 'விந்து'வில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது' என்பது நாம் ஏற்கனவே அறிந்த செய்தி. அது எந்த அளவிற்கு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

இது குறித்துச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆண்கள் 30 வயதை எட்டிய பிறகு, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களிடம் ஒரு சதவிகித ஆண்மை[பாலுறவுக்கானது]  குறைவதாகவும், சில ஆண்களில் இந்த ஆண்மைக் குறைவு 35 வயதிற்குமேல் தொடங்குவ தாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

விந்தணுக்களை[Sperm]ப் பெண்ணின் கருப்பையை நோக்கிச் சுமந்து செல்லும் விந்துத் திரவம்[Seminal fluid... அதாவது, உறவை எளிதாக்கும் 'காமநீர்'] சுரப்பதும் ஆண்டுதோறும் குறைந்துவருகிறது என்பது கூடுதல் செய்தி.

இந்தத் திரவம் 25வயதிலேயே ஆண்களுக்கு குறைய ஆரம்பிக்கிறது என்பது மிகப் பெரிய சோக நிகழ்வாகும். ஆண்கள் 55வயதை அடையும்பொழுது, அவர்தம் உடலில் இருந்து 50சதவிகிதம் குறைந்துவிடுவதாகவும் ஆய்வு முடிவுகள் அபாய அறிவிப்புச் செய்கின்றன. 

விந்துத் திரவம் மட்டுமல்ல, ஆண் குழந்தை உற்பத்திக்குக் காரணமான, ஆணின் 'y'[பெண்ணின் x குரோமோசோமும், ஆணின் y குரோமோசோமும் இணைந்தால்தான் ஆண் குழந்தை உருவாகும்] குரோமோசோம்[Chromosome] எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறதாம்.

காலப்போக்கில் 'y' யின் உற்பத்தி அடியோடு நின்றுவிடும் ஆபத்தும் உள்ளது என்கிறார்கள்.

இது, காலங்காலமாகப் பெண்ணை அடிமைப்படுத்திவரும் ஆண் வர்க்கத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவலாகும்.

ஆண்கள் பாவம்! 

==========================================================================

கற்பனைக் குரங்கும் ஜெயந்தி விழாக் கலவரமும்!!!

நாடு முழுவதும் நடைபெறும் அனுமன் ஜெயந்திக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு குக்கிராம மக்கள் குரங்குக் கடவுளுடனான அனுமனை[கிராம மக்களே 'குரங்குக் கடவுள்' என்றுதான் சொல்கிறார்கள்] வணங்குவதில்லை; தங்கள் குழந்தைகளுக்கு 'மாருதி' என்று பெயர் வைப்பதில்லை; மாருதிக் கார்களை வாங்குவதில்லை. மாருதி வாகனத்தை வாங்கும் எவருக்கும் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

மகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகரில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள 'தைத்யானந்தூர்' என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவர்கள்.

இந்த மக்கள் வழிபடுவது 'நிம்ப தைத்யா' என்ற ராட்சசரைத்தான்[அந்தக் கிராமத்தில் அனுமன் குரங்குக்குக் கோவில்கள் இல்லை. கிராமத்தில் உள்ளவர்கள் ஹனுமான் பற்றிப் படிப்பதில்லை. குரங்குத் தெய்வத்தின் சிலைகளோ படங்களோ அங்கு இல்லை. குரங்கின் பெயர் கொண்ட மாருதிக் காரைக்கூட அவர்கள் வாங்குவதில்லையாம்].

இதற்கும் ஒரு புராணக் கதை உண்டு. 

'தண்டகாரண்யத்தில் அனுமன் சீதையைத் தேடி அலைந்தபோது ஒரு ராட்சசனுடன் சண்டையிட நேர்ந்தது.

சண்டை நீடித்தபோது ஒரு கட்டத்தில் இருவருமே களைத்துப்போனார்களாம்.

இருவருமே ராமபிரானின் திருநாமத்தை உச்சரித்து வழிபட்டார்களாம்.

அவர்களுக்கு நேரில் காட்சியளித்த ராமர், "தண்டகாரண்யத்தில் 'நிம்ப தைத்தியா' என்னும் அந்த ராட்சசன் மட்டுமே வழிபடப்பட வேண்டும்" என்று சொல்லி மறைந்தாராம்.

இங்கே கவனிக்கத்தக்கது, அனுமன் என்னும் குரங்குப் பக்தனை வழிபடுமாறு ராமன் சொல்லவில்லை என்பது.

இதைப் புரிந்துகொண்ட கிராம மக்கள் ராட்சதனை மட்டுமே வழிபடுகிறார்கள்.

வால்மீகியின் கற்பனைப் படைப்பான குரங்கை வழிபடும் மூடத்தனம் நாடெங்கும் பரப்பப்பட்டுவிட்டது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி வேறு கொண்டாடுகிறார்கள்.

நேற்று டெல்லியில் நடந்த விழாவில் நடந்த இந்து-ரோகிங்கியா முஸ்லீம்' மோதல் கலவரமாக மாறிப் பெரும் சேதத்திற்கு வித்திட்டிருக்கிறதுClashes broke out between members of two communities in Delhi’s Jahangirpuri area after stones were allegedly pelted at a Hanuman Jayanti procession called ‘Shobha Yatra’.Delhi Commissioner of Police told CNN-News18that strict action will be taken against the rioters once the situation is brought under control. “Our first priority is to bring the situation under control…but strict action will be taken against rioters,” he said.#HanumanJayanti #DelhiNews #HanumanJayantiShobhaYatra #Shorts.https://www.msn.com/en-in/video/news/hanuman-jayanti-shobha-yatra-clashes-erupt-in-delhi-hanuman-jayanti-delhi-news-shorts/vi-AAWhVyA?ocid=msedgdhp&pc=U531&cvid=33eabe731b6c4eb7abf52442264681ca

ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையே துருவித் துருவி ஆராயும் அளவுக்குச் சிந்திக்கும் அறிவு வளர்ந்துவிட்ட நிலையிலும், ஒரு கற்பனைக் குரங்குக்கு ஜெயந்தி விழாக் கொண்டாடுவதும், கலவரத்தைத் தூண்டுவதும் சகிக்கவே இயலாத காட்டுமிராண்டித்தனம் ஆகும்.

நாட்டை ஆளுபவர்கள் நினைத்தால் மட்டுமே இம்மாதிரி அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்திட முடியும்!

==========================================================================

https://www.msn.com/en-in/news/india/no-hanuman-chalisa-or-temples-people-in-this-maharashtra-village-worship-a-rakshasa/ar-AAWhRwK?ocid=msedgdhp

அனுமன் ஜெயந்தி... கலவரக் காணொலி:



சனி, 16 ஏப்ரல், 2022

குரோமோசோம் 'telomeres' யமனின் பாசக்கயிறு!?!?!

நமது செல்களில் உள்ள ஜீன்கள்தான் நாம் யார் என்பதை நிர்ணயிக்கின்றன. இவற்றில் அடங்கியுள்ள தகவல்கள்தான் நமது பிறப்பு, உடல் வடிவமைப்பு, உடல் நிலை, இறப்பு நேரும் வயது(விபத்துக்களால் உயிர் போவது தனிக்கதை) போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன. இந்த ஜீன்களில் இணைந்திருப்பவைதான் குரோமோசோம்கள். 

மனிதரின் செல்களில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன என்கிறார்கள். இந்தக் குரோமோசோம்களை ஒரு குழாய் என்று வைத்துக்கொண்டால்,  இதன் இரு முனைகளிலும் உள்ள மூடியின் பெயர் 'டெலோமீர்(telomeres)'.

அந்த முனைகள் ஒன்றுடன் ஒன்று நுனியில் ஒட்டிவிடாமல்[அவ்வாறு ஒட்டிவிடும்போதுதான் உடல் குறைபாடுகளுடன் சந்ததிகள் பிறப்பது போன்றவை நடக்கின்றன] தடுக்கிறது இந்த 'டெலோமீர்'. 

செல்கள் இரண்டாகப் பிரியும்போது குரோமோசோம்களும் பிரியும். அவ்வாறு பிரியும்போது குரோமோசோம்களின் நீளம் குறையாதவாறு பார்த்துக் கொள்வதும் டெலோமீரின் வேலைதான். 

அதே நேரத்தில் குரோமோசோம்கள் ஒவ்வொரு முறையும் இரண்டாகப் பிரியும்போதும் இந்த டெலோமீர்களின் நீளம் குறைந்துகொண்டே வரும் என்பது அறியத்தக்கது.

இதை அடிப்படையாகக் கொண்டு, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஷெசல்ஸ் நாட்டுக்கு அருகே Cousin Island என்ற தீவில் வசிக்கும் warbler ரகப் பறவைகளை வைத்து இங்கிலாந்தின் 'நார்விச்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் 'டேவிட் ரிட்சர்சன்' தலைமையிலான குழு ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டது.

இந்தப் பறவைகளின் குரோமோசோம்களை ஆய்வு செய்ததில், அதில் எந்தப் பறவையின் டெலோமீரின் நீளம் மிக மிகக் குறைவாக இருந்ததோ அது விரைவில் இறந்து போனது தெரியவந்தது.

வழக்கமாக, ஷெசல்ஸ் நாட்டு 'வார்ப்ளர்' பறவைகள் 17 ஆண்டுகள்கூட உயிர் வாழ்வதுண்டு. இந்தப் பறவைகளின் டெலோமீர்களை ஆராய்ந்ததில் அவற்றின் நீளம் குறையக் குறைய அவற்றின் வாழ்நாளும் குறைந்துகொண்டே வருவது நீண்ட ஆராய்ச்சியில் உறுதியானது.

ஆக, வயது ஆக ஆக 'டெலோமீர்கள்' சேதமடைவதும், இதன் தொடர்ச்சியாகக் குரோமோசோம்களும் சேதமடைந்து இறுதியில் 'டிஎன்ஏ'க்களே சேதமடைவதும் இந்த ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

==========================================================================

ஆதாரம்: tamil.oneindia.com


வெள்ளி, 15 ஏப்ரல், 2022

ஒரு குப்பை ஆங்கில நாவலுக்கு இத்தனைக் கோலாகல வரவேற்பா?!?!

'விக்ரம் சேத்' ஆங்கிலத்தில் கவிதைகளும் கதைகளும் எழுதி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், அரசியல், தத்துவம், பொருளாதாரம் எல்லாம் படித்துப் பட்டம் பெற்றவராம்.

இவர் எட்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து எழுதி முடித்த ஒரு நாவலின் பெயர் 'A Suitable Boy' என்பது. 

இந்தப் புதினத்தை வெளியிட்ட'பெங்குவின்' பதிப்பகம் இவருக்குக் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?

"ஆ....." என்று வாயைப் பிளக்காதீர்கள். 

கொடுத்த முன்பணம் மட்டுமே 2.6 கோடி[இதெல்லாம் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு]!

இதன் உரிமை ஏலம் விடப்பட்டதில், அமெரிக்காவில் 6,00,000 டாலருக்கும், இங்கிலாந்தில் கால் மில்லியன் பவுண்டுக்கும் விலைபோனதாம்! 1400 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை அமெரிக்காவில் ரூ900; இங்கிலாந்தில் ரூ1000.

இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால்.....

இந்நூலில் புரட்சிகரமான கருத்து என்று எதுவுமே இல்லை என்கிறார்களாம் புனைகதை விமர்சகர்கள்.

மெஹ்ரா, கபூர், தாண்டன், சட்டர்ஜி முதலான கதைமாந்தர்களின் குடும்ப நிகழ்வுகள் இதில் காட்சிப்படுத்தப்படுகிறது. மெஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்த 'லதா' என்னும் பெண்ணுக்குத் தகுதியான மாப்பிள்ளைப் பையனைத் தேடுவதுதான் இதன் மையச் சரடாக உள்ளதாம்.

ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் பாணியில் கதை சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே கொஞ்சம் பாராட்டுக்குரிய அம்சமாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மேற்கண்ட தகவல்களை எமக்கு['பசி'பரமசிவம்]த் தானமாக வழங்கியவர், 'உலகக் கவிஞர்களின் வாழ்க்கைக் கதைகள்' என்னும் நூலின் ஆசிரியர் 'வான்முகில்' ஆவார்[உலக அளவில் ஆங்கிலம் தெரிந்தவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், ஆங்கில மொழிக் கதைகள் படிப்பதைக் கவுரவமாகக் கருதுவோர் எண்ணிக்கை குறையாமல் இருப்பதும் இம்மாதிரி நாவல்களின் அமோக விற்பனைக்கான காரணங்கள் என்று குறிப்பிடுகிறார் இவர்].

'இந்த நூலில் புரட்சிகரமான கருத்துகளே இல்லை' என்று நூலாசிரியர் சொல்லியிருப்பதைச் சாக்காக வைத்து, 'குப்பை'யைத் தலைப்பில் சேர்த்திருக்கிறேன். 

மற்றபடி, 44 நூல்களின் ஆசிரியனான எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுக்க எந்தவொரு பதிப்பாளரும் முன்வந்ததில்லை என்னும் ஆற்றமையோ,  'விக்ரம் சேத்' மீதான பொறாமையோ காரணம் அல்ல.

ஹி...ஹி... ஹி!!!

==========================================================================

 

வியாழன், 14 ஏப்ரல், 2022

தமிழ் வளர்க்கும் தமிழ்ச்சரத்திற்கு அடியேனின் அன்பு வேண்டுகோள்!

பரமசிவம் <kaliyugan9@gmail.com>

முற்பகல் 10:49 (0 நிமிடங்களுக்கு முன்)
பெறுநர்: tamilcharam

தமிழ்ச்சரம்''[திரட்டி] உரிமையாளர் அவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள்.

https://kadavulinkadavul.blogspot.com என்னும் என் தளம் தங்களின் தமிழ்ச்சரத்தில் 
இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவில் இதை நான் விரும்பவில்லை; காரணங்கள் இருப்பினும் 
அவற்றை வெளிப்படுத்துவது பயனற்றது என்பது என் எண்ணம்.

ஆகவே, அன்பு கொண்டு தமிழ்ச்சரத்துடனான என் தள இணைப்பை உடனடியாகத் 
துண்டிக்குமாறு வேண்டுகிறேன்.

துண்டிப்பதற்கு அதிகக் கால அவகாசம் தேவைப்படாது என்பது என் நம்பிக்கை.

மிக்க நன்றி.                                       தங்களன்புள்ள  'பசி'பரமசிவம்