“எனக்குச் சாவு நேராமல் காத்தருள்” என்று எந்தவொரு பக்தனும்[இஸ்லாமியனோ கிறித்தவனோ இந்துவோ] இந்நாள்வரை தன் கடவுளிடம் கோரிக்கை வைத்ததாக அறியப்படவில்லை.
காரணம், மரணம் என்பது கடவுள் வகுத்த வாழ்க்கை நெறி. அவர் வகுத்த அந்த நெறியை மாற்றியமைக்க அவர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்[மரணம் நிகழாமல்போனால், எக்குத்தப்பாக உயிர்களின் எண்ணிக்கை பெருகுதல் போன்ற விபரீத விளைவுகள் உண்டாகும்] என்பார்கள் பக்தி நெறி பரப்புவோர்.
மரணத் துன்பத்தை அனுபவிப்பது கடவுள் வகுத்த வாழ்க்கை நெறி என்றால், வறுமை, நோய், பகைமை, ஆதிக்க வெறி போன்றவற்றால் விளையும் துன்பங்களை அனுபவிக்கும் வாழ்க்கை நெறியை வகுத்தவர் யார்?
அவர் யாருங்க?
அந்த அவரும் கடவுள்தான் என்பதால் அவரிடம் கோரிக்கைகள் வைத்து வழிபடுவதால் பயன் ஏதும் இல்லை.
ஏனென்றால், தான் வகுத்த நெறியை மாற்றியமைத்திட அவர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்!

