பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
வெள்ளி, 26 செப்டம்பர், 2025
குரங்கு கையில் பூமாலை! சங்கிகளின் பிடியில்.....
கடும் தண்டனைகள் வழங்கப்பட்டும் குறையாத ‘காம வெறியாட்டம்’!!!
*வட கொரியா, வன்புணர்வுக் குற்றவாளிகளைப் பின்மண்டையில் சுட்டுக் கொல்கிறது.
*ஆப்கானிஸ்தானில், நான்கே நாட்களில் வன்புணர்வுக் குற்றங்கள் விசாரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
*சவுதி அரேபியாவில் குற்றங்கள் நடந்த சில நாட்களிலேயே நீதி வழங்கப்படும். குற்றவாளிகள் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
*ஈரானும், பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடுகிறது.
*ஐக்கிய அரபு நாடுகள் சிலவற்றில் கல்லால் அடித்துக் கொல்வதும் நடைமுறையில் உள்ளது.
*சீனா வன்புணர்வுக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது, அல்லது, குற்றவாளிகளின் ஆணுறுப்பையே வெட்டி எறிகிறது.
*ஏதோ ஒரு நாட்டில் குற்றவாளிகளின் ஆணுறுப்பை நாய்களை ஏவிக் கடித்துக் குதறச் செய்வதும் வழக்கத்தில் உள்ளதாகப் படித்தது நினைவில் உள்ளது.
இப்படியாகத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருந்தும், இக்குற்றங்கள் குறைந்தபாடில்லை. உலகளவில், தினமும் 6 பெண்களில் ஒருவர் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களாம். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பெண்கள் இக்கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.
