சிலை வைத்துக் கடவுள்களை மனிதர்கள் ஆக்கும் மனிதர்கள்தான், மனிதர்களையும் கடவுளாக்கிச் சக மனிதர்களையே மூடராக ஆக்குகிறார்கள்!!!!!

Monday, July 9, 2018

அவனுக்கு ஐந்து நிமிடம் போதும்! அவளுக்கு?!

மிகப் பழைய[20 ஆண்டுகள் இருக்கலாம்] 'மாலைமதி' இதழில் வாசித்த ஒரு சிறுகதையின் 'கரு'வுக்கு இங்கு 'புது வடிவம்' தந்துள்ளேன். குமுதம் குழுமம் அதிபர் வரதராசன் அவர்கள் என்னை மன்னிப்பாராக!
வன் வருவதற்கு முன்பு அந்த அறையில் அவளுக்குத் துணையாக இருள் மட்டுமே இருந்தது.

அவன் வரும்வரை 'குளுகுளு' என்றிருந்த அவளின் தந்தக் கடைசல் மேனி இப்போது 'திகுதிகு' என்று எரிந்துகொண்டிருக்கிறது. 

ஒரு மருந்துக் கம்பெனியின் பிரதிநிதியாய் ஒரு மாதம் போல ஊர் சுற்றியவன், எதையெல்லாம் பார்த்தானோ, எவளையெல்லாம் உரசினானோ கட்டுக்கடங்காத காமம் சுமந்து நள்ளிரவில் வீடு திரும்பினான்.

கதவு திறந்ததும் கலைந்து கிடந்த ஆடையைச் சரிசெய்யக்கூட அவளை அனுமதிக்கவில்லை. கட்டிலுக்கு இட்டுச் சென்றான். கட்டியணைத்து இறுக்கினான். 

கவிழ்த்தான்; உருட்டினான்; புரட்டினான். உதட்டோடு உதடு சேர்த்துக் கொஞ்சமாய் அவளின் உமிழ்நீர் சுவைத்தான். எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் நேரம்தான். அத்தனை அவசரம்...அதி வேகம்.

இன்னும் சுவைப்பான், உரசுவான், தொட்டுத் தடவுவான், விடியும்வரை கதை படிப்பான் என்று  அவள் உடம்பு சிலிர்த்துக் காத்திருக்க.....

எதிர்பாராத வகையில், உத்வேகத்துடன் இயங்கி அவன் உச்சத்தைத் தொட்டான், 

அவன் உதடுகள் 'உச்' கொட்டின. சட்டென 'அது' முடிந்துவிட்டதால் உண்டான சலிப்பு அதில் தெரிந்தது. அப்புறம்.....

அப்புறமென்ன, சரிந்து ஒருக்களித்துப் படுத்தான்; கால் வினாடியில் குப்புறக் கவிழ்ந்தான். நாள் முழுக்க மூட்டை சுமந்து ஓய்ந்தவன் போல் உறங்கிப்போனான்.

தெரு நாயின் ஊளைச் சத்தத்தையும் மீறி ஒலித்த அவனின் குறட்டை அவளை முகம் சுழிக்க வைத்தது.

அவளின்  கண்களில் கண்ணீர் பெருகியது; உதடுகளில் உப்புக் கரித்தது.

தன் தேவையை நிறைவேற்றுவதில் காட்டும் வேகத்தை, அவளின் தேவை அறிந்து அதை நிறைவேற்றுவதில் அவன் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை. அதற்கான முயற்சியிலும் அவன் ஈடுபட்டதில்லை.

சுவிட்சைத் தட்டியதும் எரிவது ஆணின் காமம். மறு தட்டுதலில் அது அடங்கிவிடும். சூடு பிடிக்கத் தாமதமாகும் இஸ்திரிப் பெட்டி போன்றது பெண்ணின் காமம். சூடு தணிவதற்கும் நீண்ட நேரம் ஆகும்.

அவள் கவிழ்ந்து கிடக்கும் அவனின் உடம்பை மெலிதாய்த் தொட்டுப் பார்த்தாள். சூடு தணிந்திருந்தது. தன் உடம்பு இன்னமும் கொதித்துக்கொண்டிருப்பதை,  தொட்டுப் பார்க்காமலே அவளால் உணர முடிந்தது!
------------------------------------------------------------------------------------------------------------------


8 comments :

 1. ஆணுக்கும், பெண்ணுக்கும் இயற்க்கை அளித்த நிலைப்பாடு இதுதான்.

  ReplyDelete
  Replies
  1. இரவல் கரு. இயன்றவரை முயன்று ஒரு வடிவம் தந்திருக்கிறேன்.

   நன்றி நண்பரே.

   Delete
 2. 'கரு'த் திருட்டு நிறையவே நடக்குது. நீர் திருடினதை ஒப்புக்கொண்டிருக்கிறீர். குமுதம் குழு அதிபர் இளகிய மனசுக்காரர். மன்னிப்பார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நல்ல மனதுக்கு நன்றி.

   Delete
 3. பக்க வாத்தியம்! (எழுத்து) எடுத்த இடம் சொன்னாலே திருட்டு கிடையாது . உமது பின்னுடம் கண்ணியக்குறைவாக இருக்கு

  ReplyDelete
  Replies
  1. நான் பதிவுக்கான முகவுரையில் குறிப்பிட்டிருப்பதைக் கவனத்தில் கொள்ளாமல், மனதில் பட்டதைச் சொல்லிவிட்டார் பக்கவாத்தியம். அதனால், எனக்கு வருத்தம் இல்லை.

   தங்களின் ஆதரவான கருத்துரைக்கு நன்றி vic.

   Delete
 4. How to make velakenna sambhar?

  ReplyDelete
  Replies
  1. வாய்யா மிஸ்டரு Mahadevan Vaidyanathan!!![எதுக்கய்யா unknown இல் ஒளியற?]

   வெளக்கெண்ணை நீ! 'சாம்பாரும்' நீயே!! அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வி?

   'வைத்தி' அண்ணனுக்கு இங்கிலீசும் தெரியுமோ?!

   நன்றீங்கண்ணா.

   Delete