குமுதம், 'அவரை'க் கடவுளாக்கிக் கதைகள் எழுதுவது பற்றி நமக்குக் கவலையில்லை. இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டுவரும் இந்த நம்பர்1[???] வார இதழின் 'உள்நோக்கம்' பற்றியும் நாம் ஆராயவில்லை. வாசகனின் சிந்திக்கும் அறிவை இவை முடமாக்குகின்றன என்பதே நம் குற்றச்சாட்டு.
குமுதம், தொடர்ந்து எழுதிவரும் 'மகா பெரியவா' குறித்த 'மிகைக் கற்பனை'க் கதைகளுள் கீழ்வருவதும்[குமுதம், 18.07.2018] ஒன்று.
திருவானைக்காவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் தலைவர் 'மகா பெரியவா'வைச் சந்திக்கிறார். ''எங்க ஊரில் மாரியம்மன் கோயில் கட்டியிருக்கோம். கும்பாபிசேகம் நடத்தப் போதுமான வசதியில்லை. பெரியவா உதவணும்''னு கோரிக்கை வைக்கிறார்.
ஒரு வேதியரை அழைத்து, ''நீ போய்க் கும்பாபிஷேகம் செய். அவங்க கொடுக்கிறதை வாங்கிக்கோ''ன்னு சொல்றா பெரியவா.
கிராமம் சென்று அதை நடத்தி முடித்த வேதியர், பெரியவாவின் உத்தரவை அலட்சியப்படுத்தி, அதிகமாகப் பணம் கேட்கிறார். தலைவர் தன் மனைவியின் கழுத்து நகையை அடமானம் வைத்துப் பணம் கொடுக்கிறார்.
வேதியர் வீடு திரும்புகிறார். அன்றைய தினத்திலிருந்தே, அவர் மனைவியின் கனவில் அம்பாள் சூலாயுதத்தோடு தோன்றிப் பயமுறுத்தவே, அந்த அம்மாவின் பல நாள் தூக்கம் பறிபோகிறது.
செய்வதறியாது கலக்கமுற்ற வேதியர், மனைவியை அழைத்துக்கொண்டு மகா பெரியவாவைத் தரிசனம் பண்ணுகிறார்.
இவர்[வேதியர்] ஏதும் சொல்லாத நிலையில்[!!!], ''அம்பாள் சூலத்தோடு தொறத்திண்டு வராளா? வழிப்பறிக்காரன் மாதிரி நீ கழுத்துச் சங்கிலியைப் பறிச்சுண்டு வந்தா அம்பாள் சும்மா இருப்பாளா? போயி, யார் உனக்குச் சங்கிலியை அடகு வெச்சிப் பணம் தந்தாரோ, அந்தச் சங்கிலியை அவர் மீட்டெடுக்க வழி பண்ணு''ன்னு பெரியவா கட்டளை பிறப்பிக்கிறார்.
வேதியர், கிராமத் தலைவரிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறார். தலைவரும் நகையை மீட்கிறார்.
வேதியர் மீண்டும் பெரியவாவைச் சந்திக்கிறார். ஒரு தாம்பாளத்தில் பட்டு வஸ்திரம் கனி வர்க்கம் எல்லாம் வைத்து, பணமும் வைத்து வேதியருக்குக் கொடுக்கச் சொல்றா பெரியவா.
வேதியர் மீண்டும் பெரியவாவைச் சந்திக்கிறார். ஒரு தாம்பாளத்தில் பட்டு வஸ்திரம் கனி வர்க்கம் எல்லாம் வைத்து, பணமும் வைத்து வேதியருக்குக் கொடுக்கச் சொல்றா பெரியவா.
வேதியர் பணத்தை எண்ணிப் பார்த்தபோது. கிராமத் தலைவரிடம் எவ்வளவு வாங்கித் திருப்பிக் கொடுத்தாரோ அவ்வளவு பணமும்[இதுவும் வேதியர் சொல்லாமலே பெரியவாவுக்குத் தெரிந்திருக்கிறது!!!] இருந்ததாம். அதற்கப்புறம் வேதியரின் மனைவிக்கு வழக்கம்போல நல்ல தூக்கம் வாய்த்ததாம்.
பெரியவாவின் கட்டளையை மீறியவர் வேதியர். அம்பாள் அவருடைய கனவில் தோன்றி அச்சுறுத்துவதாகக் கதையமைப்பதே முறையாகும்[இரண்டு கண்களையும் குத்துவதாகக்கூடக் கற்பனை செய்திருக்கலாம்]. அவர் மனைவியைத் துன்புறுத்தியது நியாயம் அல்லவே. கருணைக் கடலான அம்பாளுக்கு இது தெரியாமல் போனது எப்படி? இன்னும் சில குறைகளைச் சுட்டிக்காட்டலாம். இது போதும்.
கல்கி, 'தமிழ் இந்து' போன்ற இதழ்கள், மகா பெரியவாவின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில், அவர் சொல்லிச் சென்ற அறவுரைகளைப் பதிவு செய்கின்றன. குமுதம் போல் புதிது புதிதாய்ப் பொய்க் கதைகள் கற்பித்து, அமைதியாய் வாழ்ந்து முடித்த அந்த ஆன்மிகப் பெரியவருக்கு அவமரியாதை ஏதும் செய்வதில்லை.
ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களே முகம் சுழிக்கும் வகையில் தொடர்ந்து இட்டுக்கட்டிய கதைகளைக் குமுதம் வெளியிட்டு வருவது வருந்தத்தக்கது.
குமுதம் திருந்த வேண்டும். தவறினால், பெரியவாவைப் பெரிதும் மதித்துப் போற்றுபவர்களால் அது திருத்தப்பட வேண்டும்.
காத்திருப்போம்; நல்லது நடந்தால் வரவேற்போம்.
இதில் ஒரு விடயத்தை குறிப்பிட மறந்து விட்டீர்கள். அந்த தாம்பாளத்தில் வைத்த பணத்தில் கிராமத்தலைவர் வேதியருக்கு கொடுத்த அதே இந்திய ரூபாயின் எண்களும் இருந்ததாம்.
பதிலளிநீக்குஅதாவது கள்ள நோட்டு இல்லாத நல்ல வழியில் வந்த பணம்.
மிக நல்ல செய்தியைச் சொன்னீர்கள். மிகவும் ரசித்தேன்.
நீக்குநன்றி கில்லர்ஜி.
குமுதம் திருந்துவது இருக்கட்டும்.பகுத்தறிவுக்காரங்க நீங்க முதல்ல திருந்துங்க.நீங்க விடாத கதையா ?அடேயப்பா.தமிழ்நாட்டுல நடந்த எல்லா நல்ல காரியங்களுக்கும் பெரியார்தான் கரணம் பள்ளிக்கூடம் திறக்க சொன்னது காமராஜரை முதல்வரை ஆக்குனது மக்கள் பொதுவா எல்லோரோடும் நல்ல பழகுவது இன்னும் எல்லாத்துக்கும் பெரியார்தான் காரணம்னு அடிச்சு விடறீங்களே அத நிப்பாட்டுங்க.நீங்க சொல்லாதது ஒன்னே ஒண்ணுதான்.கம்ப்யூட்டரை கண்டுபுடிக்க சொன்னது பெரியார்தான் அப்படீன்னு மட்டும் இன்னும் சொல்லல.
பதிலளிநீக்குநான் எந்தவொரு கூட்டத்திலும் இணையவில்லை. நான் பகுத்தறிவாளனும் அல்ல. என்னால் முடிந்தவரை சிந்திக்கிறேன். தோன்றிய கருத்துகளைப் பதிவாக்குகிறேன். என் பதிவுகளை ஓடரளவுக்கேனும் படியுங்கள். புரியும்.
நீக்குஎன்னைப் பொருத்தவரை, நீங்க சொன்னது போல் எல்லார்த்துக்கும் ம்காரணம் பெரியார்தான்னு நான் சொன்னதில்லை. பெரியாரால் விளைந்த நன்மைகளைத்தான் அவ்வப்போது கட்டுரையாக்குகிறேன்.
மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதும் என் நோக்கங்களில் ஒன்று.
நீக்குஇந்தப் பதிவிலும் அதைத்தான் செய்திருக்கிறேன்.
மகா பெரியவா, தொடர்புடையவர்கள் சொல்லாமலே நடந்ததவற்றை அறிந்து, நேர்ந்த குறைகளைக் களைவதாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள் குமுதம்காரர்கள். இவர்கள் எழுதுவது கதை என்று சொல்கிறேன் நான். நீங்கள் இல்லை என்கிறீர்களா?
இவர்கள் சொல்லும் கதைகளால் மக்களுக்கு நன்மை விளையும் என்று நம்புகிறீர்களா? அது குறித்து ஒரு தளம் உருவாக்கி விளக்கமாக எழுதுங்கள். வாசித்துக் கருத்துச் சொல்லக் காத்திருக்கிறேன்.
உங்கள் கருத்து ஏற்புடையதாக இருந்தால் பாராட்டவும் தயங்க மாட்டேன்.
பகுத்தறிவு பேசுவது தவறா? பேசுபவர்களின் வாயை பெரியாரைச் சுட்டிக்காட்டி அடைக்க நினைக்கிறீர்களே, இது சரியா?
நீக்குமக்கள் எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகளைச் சுமந்து திரிகிறார்கள். எத்தனை எத்தனை தீங்குகளுக்கு ஆளாகிறார்கள். இவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்துவது குற்றமா? சிந்திக்கவே மாட்டீர்களா?
ஆன்
நாகரிகமாக உங்கள் கருத்தை முன்வைத்ததால் இவ்வளவும் எழுதினேன்.
நீக்குஇனியும் பதிவு தொடர்பாக, பதிவில் இடம்பெற்றுள்ள கருத்து தொடர்பாக விவாதிக்கப் பழகுங்கள். பொத்தாம் பொதுவாக அடித்துவிடாதீர்கள்[நீங்கள் சொன்னதுதான்].
'நீங்கள் விடாத கதையா' என்று வியந்து சொல்லியிருக்கிறீர்கள்.
நீக்குநான் எழுதியிருக்கும் கதைகளை நீங்கள் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன்.
கடவுள் தொடர்பாகவும் மூடநம்பிக்கைகள் தொடர்பாகவும் நான் 'விட்ட' கதைகள் குறித்து விரிவாக ஒரு பதிவு எழுதுங்கள். வாசகர்கள் வாசித்துப் பயனடையட்டும்.
செய்வீர்களா அருள்மொழி? அழகான தமிழ்ப் பெயரை ஆங்கிலத்தில் எழுதுகிறீர்களே! ஏன் அருள்மொழி?
//கம்ப்யூட்டரை கண்டுபுடிக்க சொன்னது பெரியார்தான் அப்படீன்னு மட்டும் இன்னும் சொல்லல//
நீக்குஇப்போ சொல்றேன். அறிவியல் அறிவை வளர்த்துக்கணும்னு[இதில் கம்ப்யூட்டரும் அடங்கும்] பலமுறை வற்புறுத்தியிருக்கிறார். பெரியாரை ஓரளவுக்கேனும் படித்திருந்தால்தால் இது புரியும்.
இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கு[சுமார் 700 பதிவுகள் எழுதியிருக்கிறேன். சொல்ல நினைச்சதெல்லாம் சொல்லி முடிக்கல].
நான் தவறு செய்து, அதை உங்களைப் போன்றவர்கள் சுட்டிக்காட்டினால் என்னைத் திருத்திக்கொள்ள நான் தயங்கியதில்லை. விவாதம் செய்ய நேர்ந்தால், எப்படியும் வெற்றி காண வேண்டும் என்ற வெறியும் எனக்கு இல்லை. பிறருக்குக் கொஞ்சமேனும் பயன்படும் வகையில் எழுதுதல் வேண்டும் என்பது என் விருப்பம்.
நன்றி அருள்மொழி.
எழுதிய பதிலுரைகளை ஒருமுறை மட்டுமே வாசித்த காரணத்தால்,ஆங்காங்கே சில பிழைகள் நேர்ந்திருக்கின்றன. திருத்தி வாசித்திட வேண்டுகிறேன்.
நீக்குநன்றி.
பரமசிவம் சார்!
நீக்குஇந்த ஜந்து அருள்மொழிக்கு பேரு ஊர் அட்ரெஸ் எதுவும் கிடையாது. ஒரு முதுகெழும்பில்லா பகவான் கைக்கூலி! அதன் குற்றச்சாட்டு "முழு உளறல்". பேசாமல் அதுவின் பின்னூட்டத்தை அகற்றிவிட்டுப் போங்க.
இது மாதிரி முதுகெழும்பில்லா பகவான் அடிவருடிகளை எல்லாம் பெருசா மதிக்காதீங்க. பகவானோட சேர்த்து இதுபோல் ஜந்துக்களையும் செருப்பால அடிக்கணும்.
வந்துட்டானு(ளு)க, அருள்மொழி, ஆத்தாமொழினு!
தவறுகளை ஒத்துக்கொள்ளவோ திருத்திக்கொள்ளும் பக்குவமோ இல்லாதவர்கள் குருட்டுவாதம் செய்து நம்மைப் பலவீனப்படுத்த நினைக்கிறார்கள். இவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.
நீக்குதொடர்ந்து எழுதுவேன்.
தங்களின் ஆதரவான கருத்துரைக்கு மிக்க நன்றி வருண்.
ஹையோ நான் இங்கு வரல்ல வரல்ல நான் எதையும் படிக்கல்ல அறிவுப்பசிஜி...:).. ஹா ஹா ஹா பேப்பர் சரி மகசின்கள் சரி மக்களுக்காகவோ நடத்துகிறார்கள்?.. அது பிஸ்னஸ்தானே.. வருமானத்துக்கே முதலிடம்...
பதிலளிநீக்குபிஸ்னஸ்தான். பணம் சம்பாதிக்க மட்டுமே அவர்கள் இதைச் செய்யவில்லை.....இதற்கு மேல்.....வேண்டாம்.
நீக்குமிக்க நன்றி அதிரா.
நல்ல கட்டுரை. IndiBloggerரிலிருந்து தங்கள் வலைப்பூவைக்கண்டேன். நன்றி.
பதிலளிநீக்குபதிவு எழுதியவுடன் தவறாமல் IndiBloggerஇல் இணைத்துவிடுவது என் வழக்கம்.
நீக்குதங்களின் பாராட்டுரைக்கு மிக்க நன்றி பார்கவ் கேசவன்.
வணக்கம்.முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் கருத்துக்கான எதிர்வினையாக நான் என் கருத்தை எழுதவில்லை.உண்மையை சொல்லவேண்டுமானால் உங்கள் வலைத்தளத்தை நான் பார்ப்பது இதுதான் முதல் முறை.நான் திராவிட கழக ஆதரவாளர்கள் பலர் பேராசிரியர் சுபவீ உட்பட பலர் நான் குறிப்பிட்டதுபோல் எல்லாவற்றுக்கும் காரணம் பெரியார் என்ற தொனியில் பேசுவதையும் எழுதுவதையும் பார்த்ததினால்,அவர்களையயும் நிறுத்த சொல்லுங்களேன் குமுதத்தை மட்டும் நிறுத்த சொல்கிறீர்களே என்ற பொருளில்தான் எழுதினேன். உங்களை காயப்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள். பண்பாடு பிறழ்ந்து ஏதும் சொல்லவில்லை. மன்னிப்புக் கேட்பது தேவையற்றது.
நீக்குகருத்துரை வழங்குவதற்கு முன்பு, தொடர்புடைய பதிவை ஆழ்ந்து வாசிப்பது முக்கியம்.
என்னை மதித்து வருத்தவுரை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அருள்மொழி.