எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 1 மே, 2019

தமிழ் பேசும் காட்டுமிராண்டிக் கும்பல்!!!

'காலைக் கதிர்'[30.04.2019] நாளிதழ்ச் செய்தி:
இச்செய்தியை வாசித்து முடித்ததும் என்னுள் முகிழ்த்த சில கவிதை வரிகள்:

சிதறுது சிதறுது தமிழனின் சிந்திக்கும் அறிவு சிதறுது.

பதறுது பதறுது பகுத்தறிவாளரின் உடம்புடன் இணைந்து 
உள்ளமும் பதறுது.

சிரிக்குது சிரிக்குது இவனின் கூமுட்டைத்தனம் கண்டு 
ஒட்டுமொத்த உலகமும் சிரிக்குது.

நகைக்குது நகைக்குது இந்த இளிச்சவாயனின் பேராசை குறித்து
நகைக் கடைக் கும்பல் நாளெல்லாம் நகைக்குது.

நாமக்கல் கவிஞர் உயிரோடு இருந்தால்.....

''தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவற்கெனப் பல இழிகுணமுண்டு'' என்று 
தவறாமல் பாடியிருப்பார்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------