எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

பொது இடங்களில் காதல் பண்ணலாம்! பெண்கள் காமமும் பண்ணலாம்!! எப்போது?

“... பெண்களை மதிக்கவும் பாதுகாக்கவும் அனைத்து ஆண்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். ...” எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளனர்[அண்ணா பல்கலை. மாணவி வன்புணர்வு வழக்கு] -https://tamil.news18.com].

“பெண்கள் ஆண்களுடன் பேசக் கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அங்குச் சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லுதல் கூடாது” எனத் தெரிவித்த நீதிபதிகள், “பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. காதல் என்பது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். அவர்கள் இரவில் சுதந்திரமாக நடமாடலாம்; ஆண் நண்பர்களுடன் பேசலாம்; தங்கள் விருப்பம் போல் உடை அணிந்துகொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்கள்[https://tamil.oneindia.com].


காதல் என்பது புனிதமானது[பொதுவானதொரு நம்பிக்கை மட்டுமே]. காதல் பண்ணுகிற பெண்களும் புனிதமானவர்களே. காதல் முற்றிய நிலையில் காமமும் பண்ணலாம், காதலைப் போலவே காமமும் புனிதமானது என்பதால்].

பகலாயினும் இரவாயினும், பொதுவிடங்களில் அல்லது மறைவிடங்களில் காதலோ காமமோ இரண்டுமோ பெண்கள்[விரும்பிய ஆண்களுடன்] பண்ணிக்கொண்டிருப்பது கண்ணில் பட்டால் அதை இழி செயலாக எவரும் கருதக்கூடாது என்று பொருள்கொள்ள இடம் தருகிறது நீதியரசர்களின் அறிவுறுத்தல். 


கயவர்களால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுமாயின், அவர்களைக் கடுமையாகத் தண்டித்து, காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.


அவர்கள் சொல்வது போல் நாட்டிலுள்ள அத்தனைக் காதலர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது இயலவே இயலாதது. ரவுடிகளே இல்லாத சமுதாயம் உருவானால்[எந்தவொரு நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லை] மட்டுமே இது சாத்தியம்.


எனவே, பெண்கள் மனக் கட்டுப்பாட்டுடன், பாதுகாப்பு இல்லாத இடங்களில் காதலருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது மிக அவசியம். 


நாட்டில் கெட்டவர்களே இல்லாத அதிசயம் நிகழும்வரை 'இது’ விசயத்தில் அதிகபட்சச் சுதந்திரத்தைத் தவிர்ப்பது நல்லது. இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.


                                          *   *   *   *   *

https://tamil.news18.com/tamil-nadu/madras-high-court-slams-on-anna-university-sexual-assault-case-nw-lks-1687611.html -Last Updated:December 28, 2024 5:10 PM IST


https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-orders-to-submit-report-on-anna-university-girl-assault-case-666499.html