விருந்தினர்க்கான ‘பந்தி’களில், முதியோர் மட்டுமல்லாமல் திடகாத்திர உடம்புக்காரர்கள் பலரும், மஞ்சள் கரு தவிர்த்த முட்டையை மட்டுமே உண்பதைத் திருமண நிகழ்வுகளில் அதிக அளவில் காண நேர்கிறது[அடியேன் விதிவிலக்கு].
இது தவறானதொரு பழக்கம் என்று ஒரு மருத்துவர் சொல்வதாக ஊடகச் செய்திக்கட்டுரை ஒன்றில் வாசிக்க நேர்ந்தது.
மஞ்சள் கருவின் குறிப்பிடத்தக்க நன்மைகள்:
+++வைட்டமின் ஏ, பி, பி12, ஃபோலேட், இரும்பு, செலினியம் என்று பெரும்பாலான நுண்ணூட்டச் சத்துக்கள் மஞ்சள் கருவில் உள்ளன.
+++ஆரோக்கியமான பெரியவர்கள் ஒரு நாளில் மூன்று முட்டைகள்வரை உண்ணலாம்.
+++உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் குறைத்துக்கொள்ளலாம்.
+++இதயத்திற்கு நல்லது.
+++தசைகளை வலுப்படுத்துகிறது.
* * * * *
+++கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்கி விடுபட்ட செய்திகளையும் வாசிக்கலாம்.

