எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

பொல்லாத நடுக்குவாதம்> ‘Parkinson’[10 மில்லியன்+ நோயாளிகள்] இல்லாத நாள் வருமா?

பார்கின்சன்[நடுக்குவாதம்] நோயால் பாதிக்கப்பட்டோரின் மூளையிலுள்ள ‘டோபமைன்’ அழிக்கப்படுவதே இந்த நோய்க்கான காரணம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


டோபமைன்(Dopamine) என்பது மூளையில் செயல்படும் ஒரு ‘நரம்பியக்கடத்தி’ ஆகும். இது ‘நரம்புச் செல்கள்’ செய்திகளை அனுப்புதல், நகர்வது நடப்பது போன்ற உடல் இயக்கங்கள், நினைவாற்றல், கற்றல், உத்வேகம் & இன்புறுத்தும் உணர்வுகளைப் பெறுதல் போன்ற செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது மனநலம் & நரம்பியல் நோய்களுடன் தொடர்புடையது.


இந்நோய் தாக்கினால் பேச்சு சீராக இராது என்பதும் அறியத்தக்கது.


பார்கின்சன் நோய்க்கு எந்தவிதச் சிகிச்சையும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஆயினும், அறிகுறிகளைப் போக்கவும், வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்கவும் சிகிச்சைகள் உள்ளன என்பது சற்றே ஆறுதல் தரும் தகவல்[https://www.nhs.uk/conditions/parkinsons-disease/treatment/].


டோபமைன் நியூரான்களைத் தாக்கிச் சேதப்படுத்துபவை எவை என்பது இன்றளவும் கண்டுபிடிக்கப்படாதது மிகப் பெரிய சோகம்.


சேதமடைந்த டோபமைன் நியுரான்களை மாற்றிவிட்டு, மூளையில் புதியவற்றைச் செலுத்துகின்ற வழிமுறைகளை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து ஓரளவு முன்னேற்றமும் கண்டிருக்கிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முன்னரான செய்தி.


மில்லியன்களில் மக்கள் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்[Globally, over 10 million people are currently living with Parkinson's disease(PD), though some recent estimates suggest this number could be as high as 25.2 million by 2050. In the United States, an estimated 1.1 million people live with PD, a figure expected to rise to over 1.2 million by 2030]. இதைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் கண்டறியப்படுமேயானால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறுவார்கள்[2016ஆம் ஆண்டில், தில்லி மருத்துவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்குச் சிகிச்சையளித்துக் குணப்படுத்தினார்கள் என்பது அப்போதையச் செய்தி. அத்தகையச் சாதனை அப்புறமும் நிகழ்த்தப்பட்டதா என்பதை அறிய இயலவில்லை> https://kadavulinkadavul.blogspot.com/2023/06/parkinsons-disease.html]


மேற்கண்டவை இந்த நோய் குறித்த மேலோட்டமான குறிப்புகள் மட்டுமே.


கூடுதல் தகவல்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். ஆயினும், நடுக்குவாத நோயால் பதிக்கப்பட்டவர்கள், பலர் அறியப் பொதுவெளியில் நடமாட இயலாமல் வீட்டோடு முடங்கிக்கிடப்பார்கள் என்பதால், இந்த நோயால் பாதிக்கப்படுபவர் படும் சிரமங்களைக் காண்பது எளிதானதல்ல.


கீழ்க்காணும் காணொலி அந்தக் குறையைப் போக்குகிறது.


இதில் இடம்பெற்றுள்ள நடுக்குவாத நோயாளி குத்துச் சண்டையில் வியக்கத்தக்கச் சாதனை நிகழ்த்திய ‘முகம்மது அலி’[2016இல் இறந்தார்> வயது 74] ஆவார்.


மனதைக் கொஞ்சம் திடப்படுத்திக்கொண்டு காணொலியில் நுழையுங்கள். சற்று முன்னர் இதைக் கண்ணுற்ற என் உடம்பு இப்போதும்கூட லேசாக நடுங்கிக்கொண்டிருக்கிறது, நடுக்குவாதம் குறித்த அச்சத்தால்!