கச்சத்தீவுப் பிரச்சினை தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒன்றிய அரசிடம், "இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 800 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்[+நிறையவே]. இதைக் கண்டிக்கும் அளவுக்கு நான் பெரிதாக எதையும் செய்யச் சொல்லவில்லை. தயவுசெய்து மிகச் சிறிய ஒன்றைச் செய்யுங்கள். நமது மீனவர்களின் பாதுகாப்பிற்காகக் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இப்போதைக்கு மீட்டெடுங்கள். அது போதும்" என்று கூறியிருந்தார்.
விஜய்க்குப் பதிலடி தரும் வகையில்.....
கடற்படைக்குச் சொந்தமான படகில் கச்சத்தீவுக்குச் சென்ற ஸ்ரீஇலங்கா சனாதிபதி, “கச்சத்தீவு எங்களுக்கே சொந்தம். அதை யாருக்கும் விட்டுத்தர முடியாது” என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.
இவருடைய பேச்சுக்கு நம் அரசியல் கட்சிகளின் தலைவர்களான இரா.முத்தரசன், வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
கச்சத்தீவு இந்தியாவுக்கே[தமிழர்களுக்கு] உரியது என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களைத் தமிழர் தலைவர்கள் முன்வைத்தும் இந்திய அரசு அதை ஸ்ரீலங்காவுக்கே தாரை வார்த்தது பழங்கதை.
இருப்பினும், கச்சத்திவு மீட்டெடுக்கப்படுதல் வேண்டும் என்று நம் தலைவர்கள் கோரிக்கை வைப்பதும், ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள் மறுப்புத் தெரிவிப்பதும் தொடர்கின்றன[சுண்டைக்காய் நாடான ஸ்ரீலங்காவுக்கு நம் அண்டைநாட்டு எதிரியான சீனா[மோடி நெடுஞ்சாண்கிடையாகச் ‘ஜின்பிங்’கின் திருவடிகளில் சரணடைந்த பிறகு அது நட்பு நாடாக ஆகிவிட்டது] ஆதரவு தருவது கருத்தில் கொள்ளத்தக்கது}.
நம் நோக்கம், நம்மவர்க்கும் ஸ்ரீலங்காவினருக்குமான தொடர் விவாதம் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது அல்ல; இந்தியர்களுக்கான இந்தியாவைக் கட்டியாளும் ‘இந்தி’யத் தலைவர்களின் நடவடிக்கைகளை விமர்சிப்பது மட்டுமே.
தமிழின மீனவர்கள் அடிக்கடித் தாக்கப்படுவதுடன், படகுகள் முதலான அவர்களின் சொத்துகளை ஸ்ரீலங்கா அரசு பறிமுதல் செய்வதோடு, நீதிமன்றங்கள் மூலம் அவர்களைத் தண்டிக்கவும் செய்கிற நிலையில், இந்த அடாவடித்தனங்களைத் தமிழினத் தலைவர்கள்தான் கண்டிக்கிறார்களே தவிர, பல்வேறு இனத்தவரோடு நம்மையும் ஆளுகிற ஒன்றிய அரசின் அதிகார வர்க்கத்தினர் எவரும் வாய் திறப்பதே இல்லை.
குறைந்தபட்சம், பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றிக் கருத்துச் சொல்வதுகூட இல்லை. தமிழ்நாட்டுக் கடற்பகுதிகளில் பாதுகாப்புப் பணியில்[ரோந்து] ஈடுபடும் இந்தியப் படையினரும் தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை.
காரணம்.....
தமிழர்கள் இந்தியக் குடிமக்கள் அல்ல என்று ‘அவர்கள்’ நினைக்கிறார்கள்[?].
மனப்பூர்வமாக அவ்வாறு நினைக்கிறார்கள் என்றால், “தமிழர்கள் இந்தியர்கள் அல்ல. அவர்கள் எப்போதுவேண்டுமானாலும் இந்தியாவிலிருந்து பிரிந்து சுதந்திரமாக[தனி நாடு]த் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளலாம்” என்று அறிவிக்கலாமே?
மோடி தலைமையிலான அதிகாரக் குழு என்னசெய்யப்போகிறது?


