அதிகாலையில் கடவுளை[திருப்பதி சாமி மட்டுமல்லாமல் பிள்ளையார், சுப்ரமண்யன், காமாட்சியம்மன் என்று பல சாமிகளுக்கும் பாடப்படுகிறது சுப்ரபாதம்]த் துயிலெழுப்பி, அவரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகப் பாடும் பாடலைச் ‘சுப்ரபாதம்’ என்கிறார்கள்.
கடவுள் தூங்குவாரா?
“ஆம்” என்றால், நாள்தோறும் வேளை தவறாமல் மூச்சு முட்டச் சாப்பிடுகிறார்; அது ஜீரணம் ஆனதும் கழிவை வெளியேற்றுகிறார்; அழுக்குப் போகக் குளிக்கிறார்..... என்றிப்படி மனிதன் செய்கிற அத்தனைச் செயல்களையும் அவர் தவறாமல் செய்கிறார் என்றும் சொல்லலாம்.
மனிதன் செய்வதையெல்லாம் கடவுளும் செய்கிறார் என்றால் அவனுக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு?
மக்களில் மிக மிக மிகப் பெரும்பாலோர் கல்வியறிவு இல்லாமலிருந்த காலத்தில், அவர்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காக, இப்படி இன்னும் எப்படியெல்லாமோ கதைகள் கட்டிப் பரப்புரை செய்து பிழைப்பு நடத்தினார்கள் ஒரு கூட்டத்தார்.
அவர்களின் வாரிசுகள் இன்றளவும் இந்த ஏமாற்று வேலையைத் தொடர்கிறார்கள்.
பலரும் கல்வி கற்றுச் சிந்திக்கும் திறன் பெற்றுவிட்ட இந்தக் காலக்கட்டத்திலும், அந்தக் கும்பல் காலை நேரங்களில் அதை ஓதுவதும், அதைக் கேட்டுக் கண்ணீர் மல்கி மனம் கரைந்து உருகும் முட்டாள்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதும் கவலைக்குரியது.
‘திருப்பதி’க் கோயில் கருவறையில் ‘ஒரிஜினல்’ சுப்ரபாதம் பாடப்படுகிறதாம்.
இதற்கு முன்பு எப்போதெல்லாம் அங்கு ‘டூப்ளிக்கேட்’ சுப்ரபாதம் பாடப்பட்டது?
ஒரிஜினலுக்கும் டூப்ளிக்கேட்டுக்குமான வேறுபாட்டை விளக்கிச் சொல்வார்களா சம்பந்தப்பட்ட கூட்டத்தார்?