வியாழன், 3 மே, 2018

கன்னடர் வாட்டாள் நாகராஜ் வாழ்க...வாழ்கவே!!!

கர்னாடகத் தமிழர்களை எதிர்த்து அரசியல் நடத்தியே பிரபலம் ஆனவர் கன்னடரான வாட்டாள் நாகராஜ். திராவிட இனத்தவராயினும், இன்றளவும் அவர் தமிழகளுக்கு எதிரிதான். அவரை வாழ்த்தலாமா என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம்! வாட்டாளை வாழ்த்துவதற்காகவே இந்தப் பதிவு!

கர்னாடகத்தில் உள்ள 'சாம்ராஜ் நகர்' ஒரு ராசியில்லாத ஊராம். அங்கு சென்று திரும்பிய ஒரே காரணத்தால், முன்னாள் முதல்வர்களான தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, வீரேந்திர பாட்டீல், குமாரசாமி உள்ளிட்டோர் ஆட்சியை இழந்தார்களாம். அதன் விளைவாக.....

முன்னாள் முதல்வர்களான பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவ கவுடா, ஜேஹெச் படேல், எஸ்.எம்.கிருஷ்ணா முதலானவர்கள் சாம்ராஜ் நகர் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லையாம்.

கர்னாடகாவின் மிகப் பல அரசியல் தலைவர்களும் பித்துக்குளித்தனமான இத்தகையதொரு மூடநம்பிக்கையில் புதையுண்டு மூச்சுத் தினறிக்கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பரப்புரைக்காகக் கர்னாடகா சென்ற பிரதமர் மோடியும் சாம்ராஜ் நகருக்குள் செல்வதைத் தவிர்துவிட்டாராம்.

விடுவாரா சித்தராமையா? ''தைரியம் இருந்தால், மோடி சாம்ராஜ் நகருக்குள் காலடி வைக்கட்டும் பார்ப்போம்'' என்று சவால் விட்டிருக்கிறார்.

இவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையறியாமல் மனம் குழம்பிக் கிடக்கும் மோடியை, அனைத்துக் கர்னாடக அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையான வாட்டாள் நாகராஜ் வேறு கதிகலங்க வைத்திருக்கிறார். 
''சாம்ராஜ் நகர் என் பிறந்த ஊர். இங்கு நுழைந்தால் பதவி பறிபோய்விடும் என்பதான ஒரு மூடநம்பிக்கையை இங்குள்ள அரசியல்வாதிகள் மக்கள் மனங்களில் வேரூன்றச் செய்திருக்கிறார்கள். பதவியில் இருப்பவர்கள் இங்கு வருவதில்லை.....

.....2013ஆம் ஆண்டு, முதல்வர் சித்தராமையா இங்கு வராவிட்டால் அவர் மீது வழக்குத் தொடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தேன். அதற்குப் பிறகு அவர் சாம்ராஜ் நகருக்கு 11 முறை வந்திருக்கிறார்.

இப்போது, இந்த மாவட்டத்திற்குத் தேர்தல் பரப்புரை செய்ய வந்திருக்கும் பிரதமர் மோடி, சாம்ராஜ் நகருக்கு  வருகை தராமல் வெந்த புண்ணில் வேல் சொருகியிருக்கிறார்; எங்கள் அத்தனை பேரையும் அவமானப்படுத்தியிருக்கிறார். இவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன்'' என்று சூளுரைத்திருக்கிறார் வாட்டாள் நாகராஜ்.

வாட்டாளின் துணிவும் மூடநம்பிக்கை எதிர்ப்புணர்ச்சியும் நம்மை வியக்க வைக்கிறது.

நம் இனத்தவர் மீது பகைமை பாராட்டுபவர் ஆயினும், மூடநம்பிக்கை ஒழிப்பில் முழுமூச்சுடன் களம் இறங்கியிருக்கும் அவரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறோம்.

பாராட்டுகள் சகோதரர் வாட்டாள் நாகராஜ் அவர்களே.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






8 கருத்துகள்:

  1. விடயம் பாராட்டத்தக்கதே.... இவர் தமிழர்களுக்கு எதிர்ப்பாளர் என்பதால் இவரை குற்றம் சொல்ல முடியுமா ?

    தமிழகத்தில் வாழ்ந்து கொண்டே தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்கள் தமிழ் நாட்டில் இல்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு அவருடைய இனத்தின் மீது பற்றுதல். அதனால், குற்றம் சொல்ல இயலாதுதான்.

      இங்குள்ள துரோகிகள்தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

      மறவாமல் வருகை தந்து கருத்துரையும் வழங்கிவிடுகிறீர்கள்.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. வாட்டாள் நாகராஜ், உண்மையில் தெலுங்கர். நமது வைகோ-வைப் போல. கன்னட மொழிவெறியை ஊட்டி, கன்னடர்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாட்டாள் நாகராஜ், உண்மையில் தெலுங்கர்//

      நான் அறியாத தகவல். நன்றி நண்பர் Justin Robers.

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...நன்றி.

      நீக்கு
  3. வாட்டாள் நாகராஜ் இவ்விசயத்தில் பாராட்டப்பட வேண்டியவரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்குரிய பண்பு எவரிடம் இருப்பினும் பாராட்டுவோம்.

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  4. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    பதிலளிநீக்கு
  5. என் பதிவுகளைப் பகிர்வேன்

    நன்றி.

    பதிலளிநீக்கு