எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

ஒரு நாள் பிரார்த்தனைக்குப் பிரதமரின் 11 நாள் பயிற்சி! மிக்க மகிழ்ச்சி!!

“மங்களகரமான நிகழ்விற்கு[அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு] சாட்சியாக இருப்பது என் அதிர்ஷ்டம். அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளக் கடவுள் என்னைத் தேர்வு செய்திருக்கிறார். இதை மனதில் வைத்து 11 நாட்கள் சிறப்பு[!?]ப் பிரார்த்தனைப் பயிற்சியை[பிரார்த்தனை செய்யப் பயிற்சியா என்று எவரும் கேள்வி எழுப்பாதீர்] மேற்கொள்வேன்என்று அறிவித்திருக்கிறார் நம் பிரதமர் மோடி.*

பிரார்த்தனைக்கான பயிற்சிக்கு 11 நாட்கள் என்பது வெகு குறைவு என்றே தோன்றுகிறது. முன்கூட்டியே தீர்மானித்து, 101 நாட்கள் பயிற்சி செய்திருந்தால் அது, இவரைத் தேர்வு செய்த ராமபிரானுக்குப் பெரிதும் மனநிறைவைத் தந்திருக்கும் என்பது நம் எண்ணம்.

ஒரு நாள் பிரார்த்தனைக்கு 11 நாட்கள், 101 நாட்கள் என்று செலவிட்டால், ஒரு பரந்த பெரிய நாட்டின் பிரதமராகப் பொறுப்பு வகிக்கும் இவருடைய அன்றாடக் கடமைகளைச் செய்வதில் சுணக்கம் ஏற்படாதா என்று மக்கள் பலரும் கவலைப்படக்கூடும்.

12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் அவதரித்து அனைத்து உயிர்களுக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ராமபிரான், மோடி அவர்கள் 11 நாட்களில் ஆற்றவிருந்த பணிகளை[தேங்கிப்போனவை], குடமுழுக்கு[22.10.2024] முடிந்த மறு நாளே செய்துமுடித்திடத் தேவையான ஆற்றலை அவருக்குத் தந்தருள்வார் என்பதை உணர்ந்தால், அது தேவையற்ற கவலை என்பது புரியும்.

வாழ்க நம் பிரதமர் மோடி! வளர்க அவர்தம் ராம பக்தி!!

                                                *   *   *   *   *

*https://www.dinamani.com/india/2024/jan/12/prime-minister-modi-follows-special-religious-exercise-for-ram-temple-ceremony-4138358.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqKggAIhDb--SjJmoW8oRUdSGnTsz7KhQICiIQ2_vkoyZqFvKEVHUhp07M-zCr1OgC&utm_content=rundown

இந்தி... இந்தி... இந்தி... இந்தியே[+சமஸ்கிருதம்] இந்திய அரசின் உயிமூச்சு!!!

கேரளாவில் "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என்னும் பெயரில் ‘மருத்துவ மையங்கள்’ இயங்குகின்றன. இந்த மையங்களுக்கான செலவினங்களில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்வது வழக்கம்.

இந்த வழக்கத்திற்கு மாறாக, மையங்களுக்கு, "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என்று கேரள அரசு சூட்டியுள்ள பெயரை, "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என்று மாற்றும்படி கேரள அதற்கு உத்தரவிட்டது ஒன்றிய அரசு. அதைச் செயல்படுத்த மறுத்தது கடவுள் தேச அரசு.

விளைவு…..


தன் பங்கான 60% தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறதாம் இந்திய அரசு.[https://www.maalaimalar.com/news/national/centre-denies-funds-as-state-refuses-renaming-health-centres-697956].


ஒன்றிய அரசின் இந்த அற்பத்தனமான செயல்பாட்டைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.

ஒன்றிய அரசின் இந்த ஆணவப் போக்கை இனியும் எதிர்த்துப் போராடும் கேரள அரசு என்று நம்பலாம்.

இந்நிலையில்.....


நடுவணரசின் இழிசெயலை[இந்தியும், புரியாத செத்த மொழி சமஸ்கிருதமும் வளர்ப்பது]க் கண்டித்து இந்தியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் மாநில அரசுகள் ஒருசேரக் குரல் எழுப்புவது மிக மிக அவசியம்.


இது, இது போன்ற ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தும் என்பது உறுதி.