எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

இந்தி... இந்தி... இந்தி... இந்தியே[+சமஸ்கிருதம்] இந்திய அரசின் உயிமூச்சு!!!

கேரளாவில் "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என்னும் பெயரில் ‘மருத்துவ மையங்கள்’ இயங்குகின்றன. இந்த மையங்களுக்கான செலவினங்களில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்வது வழக்கம்.

இந்த வழக்கத்திற்கு மாறாக, மையங்களுக்கு, "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என்று கேரள அரசு சூட்டியுள்ள பெயரை, "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என்று மாற்றும்படி கேரள அதற்கு உத்தரவிட்டது ஒன்றிய அரசு. அதைச் செயல்படுத்த மறுத்தது கடவுள் தேச அரசு.

விளைவு…..


தன் பங்கான 60% தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறதாம் இந்திய அரசு.[https://www.maalaimalar.com/news/national/centre-denies-funds-as-state-refuses-renaming-health-centres-697956].


ஒன்றிய அரசின் இந்த அற்பத்தனமான செயல்பாட்டைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.

ஒன்றிய அரசின் இந்த ஆணவப் போக்கை இனியும் எதிர்த்துப் போராடும் கேரள அரசு என்று நம்பலாம்.

இந்நிலையில்.....


நடுவணரசின் இழிசெயலை[இந்தியும், புரியாத செத்த மொழி சமஸ்கிருதமும் வளர்ப்பது]க் கண்டித்து இந்தியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் மாநில அரசுகள் ஒருசேரக் குரல் எழுப்புவது மிக மிக அவசியம்.


இது, இது போன்ற ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தும் என்பது உறுதி.