அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 31 ஜூலை, 2020

ஆறறிவுப் பித்தர்கள்!!!

நியாண்டர்தால் மனிதர்கள் க்கான பட முடிவு
உயிர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

இவ்ற்றின்  தோற்றம் நிகழ்ந்து 3500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறது அறிவியல்[புவியில் உயிர்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கிடையே தோன்றியிருக்கலாம் என கருதப்படுகின்றது[விக்கிப்பீடியா. 1பில்லியன் =1000 கோடி].

அன்றிலிருந்து இன்றுவரை, வலிய உயிர்கள் வலிமை குன்றிய உயிர்களைத் தாக்கித் துன்புறுத்துதலும், உணவாக்கி உயிர் வாழ்தலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

இது இயற்கை எனின், இது குறித்துத் தம் ஆய்வைத் தொடர்வது அறிவியலாளர் கடமை.

ஒன்றை மற்றொன்று உண்டு உயிர் வாழ்தல் இயற்கையல்ல; கடவுளின் படைப்பே இவ்வகையிலானதுதான் எனின், அவரின் செயல்பாடு கேள்விக்குரியதாகிறது. அவரைக் கருணை வள்ளல் எனப் புகழ்வது எள்ளுதற்குரியதாகிறது.

வாழும் சூழலுக்கேற்பத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளாததால் அழிந்தொழிந்த உயிரினங்கள் ஏராளம் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். அவற்றைப் படைத்தவரும் இவரே. அழியவிட்டவரும் இந்த  அருளாளரே. 

கொஞ்சம் சிந்தித்தாலே, கடவுள் எத்தனைக் கொடூரமானவர் என்பது புரியும்.

மனித இனம் தோன்றி முன்பின்னாகப் பத்து லட்சம் ஆண்டுகள்[பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய மூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது -விக்கிப்பீடியா] இருக்கலாம் என்கிறார்கள் மானிட இயல் ஆய்வாளர்கள்.

மனிதர்கள் கடவுள் குறித்துச் சிந்தித்துத் துதிபாட ஆரம்பித்தது அதிகபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து எனலாம்[ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் நியாண்டர்தால் மனித இனத்தவருக்குத் இறைச் சிந்தனை இருந்தததாக நம்பப்படுகிறது -விக்கிப்பீடியா]

ஆண்டுக் கணக்கு எதுவாகவோ இருக்கட்டும், அன்று முதல் இன்றுவரை தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் உற்ற துன்பங்களையும், அவற்றில் பலவற்றிற்கு நேர்ந்த பேரழிவுகளையும் கண்டுகொள்ளாத கல் மனம் கொண்ட கடவுளை வழிபட்டால், துயரம் களையலாம்; சுகவாழ்வு பெறலாம் என்று மனிதர்கள் நம்புவது நகைப்புக்குரிய செயலாகும்.

இவர்களை ஆறறிவு மனிதர்கள் என்பதற்கு மாறாக, ஆறறிவுப் பித்தர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
=====================================================================

வியாழன், 30 ஜூலை, 2020

புரியாத சாமியும் புத்தியுள்ள கந்தசாமியும்!!![ஆக்கம்: 06.08.2016]

ந்தசாமி, கோயிலுக்குப் போறியாப்பா?” -அம்மா கேட்டார்.

“எனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லேன்னு தெரியுமில்ல. அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?” -அம்மாவிடம் பொய்க் கோபம் காட்டினான் கந்தசாமி.

“அதில்லப்பா. நீயும் அப்பாவும் நடத்துற ஓட்டலில், வர்ற கொஞ்சம் லாபமும் வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சரியாப் போயிடுது. அஞ்சாறு வருசமா அசல் அப்படியே இருக்கு. குடும்பச் செலவுக்குப் பணமில்ல. நம்பிக்கையிழந்த உன் அப்பா, தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். தொழில் இன்னும் லாபகரமா நடக்கணும்னா, பிடிவாதத்தைக் கைவிட்டு, சாமி கோயிலுக்குப் போயி, சாமி சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு வாப்பா.”

அம்மாவின் குரலில் என்றுமில்லாத கண்டிப்புத் தெரிந்தது.

மவுனமாகக் கிளம்பிப் போனான் கந்தசாமி.

அவன் வீடு திரும்பியதும், “விழுந்து கும்பிட்டயா? மனப்பூர்வமா வேண்டிகிட்டியா?” என்றார் அம்மா.

“நான் கோயிலுக்குப் போகல; கடன் கொடுத்தவங்களைத் தேடிப் போயி, அவங்க காலில் விழுந்து கும்பிட்டு நிலைமையைச் சொன்னேன். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலைக் கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சிக் கொடுன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.

“எல்லாம் அவன் செயல்.” -அம்மா, சாமி படத்தின் முன்னால் நின்று கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.

“உன்னைத் திருத்தவே முடியாது” -பாசமுள்ள அம்மாவின் மனம் நோகக்கூடாது என்பதற்காக மனதுக்குள் சொல்லிக்கொண்டான் கந்தசாமி.
=====================================================================
தோழிகளுடன் ஒரு பயணம் : இந்தியாவில் ...

புதன், 29 ஜூலை, 2020

தடைப்பட்ட புணர்ச்சியும் தவிக்கும் பெண் மனமும்!!

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன், ‘பச்சை வயல் மனசு’ என்னும் தம் நாவலில், ‘வார்த்தைகளுக்கு மிஞ்சி, சொல்லின் பொருளையும் மீறி ஓர் உணர்வை அல்லது பிரமிப்பை ஏற்படுத்துவது கவிதை’ என்கிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, குறுந்தொகையிலிருந்து ஒரு பாடலை எடுத்தாண்டிருக்கிறார்.

‘கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ  [முரிதல்-ஒடிதல்]
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே’ [ஆலந்தூர் கிழார்]

என்பது அந்தப் பாடல்.

‘தோழிபிறர் கூறும் பழிச்சொற்களுக்கு அஞ்சினால்காமம் குறையும். பிறருடைய பழிச்சொற்கள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் காமத்தை விட்டுவிடவேண்டும்அவ்வாறு காமத்தை விட்டுவிட்டால்என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே ஆகும்தலைவர் நுகர்ந்த எனது பெண்மை நலம்பெரியகளிறு உண்ணும் பொருட்டு வளைக்கவளைந்து நிலத்தில் விழாமல் நாருடன் ஒட்டிக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் ஒடிந்த கிளையைப் போன்றது.    இதனை நீ  காண்பாயாக!’

என்பது பாடலுக்கான பொருள்.

இந்தப் பாடலில், முதலிரண்டு வரிகளைத் தவிர்த்த பாலகுமாரன், ஏனைய வரிகளுக்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

‘யாரோ ஒரு தலைவன். ஒரு தலைவியைக் காதலிச்சு ஊருக்கு அப்பால் தோப்புக்குத் தனியாகக் கூட்டிண்டு போய் விளையாடுறான். முழுக்க இல்ல, மேலோட்டமா. சாரி, இப்படிச் சொல்லுறதைத் தப்பா நினைக்க வேண்டாம்[ஓர் ஆண் இரண்டு பெண்களுடன் உரையாடும் நிகழ்வு இது]. முழுக்க முடிக்க வாய்ப்பில்லாம யாரோ வர்ற சத்தம் கேட்டு நகர்ந்துடுறான்.  

அந்தத் தலைவி சொல்கிறாள். தோழி, இப்ப என் நிலைமை எப்படி இருக்கு தெரியுமா? உண்ணுதற் பொருட்டு ஒரு பெரிய யானை மரக்கிளையை ஒடித்துவிட்டுப் போக, அந்த மரக்கிளை யானையால் உண்ணப்படாமலும், அதே சமயம் பழைய நிலையில் இல்லாமலும், பாதி ஒடிந்து மரப்பட்டையில் தொங்கிகொண்டிருப்பது போல இருக்கிறது. காமமும் முழுதுமாய்ப் பெறப்படவில்லை. பழைய கற்பு நிலையிலும் இல்லை. பட்டை உரிந்து ஊசலாடுகிற மரக்கிளை மாதிரி மெல்ல மெல்லப் பட்டுப்போகப் போகிறேன் என்கிறாள்.’

'அவர் உண்ட நலன்’ என்பது பாடல் வரி. ‘அவர் துய்த்த[அனுபவித்த] என் [பெண்மை]நலன்’ என்பது அதற்கான பொருள். அவன் அவளுடன் புணர்ச்சி செய்துள்ளான் என்பதை உறுதிப்படுத்தும் இடம் இது.

ஏதோ காரணத்தால் அவன் அவளைப் பிரிகிறான். மீண்டுவந்து அவளின் பெண்மை நலம் நுகர்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இத்தகையதொரு சூழலில், தனித்திருப்பதால் உண்டாகும் அவளின் மன வேதனையைத்தான் இந்தப் பாடல் மூலம் காட்சிப்படுத்துகிறார் ஆலந்தூர் கிழார்.

பாலகுமாரனின் விளக்கம் பெருமளவில் மாறுபட்ட ஒன்றாக அமைந்துள்ளது. தலைவியுடன் உடலுறவு கொள்ளும் தலைவனின் முயற்சி முழுமை பெறவில்லை என்பதாகவும், அதனால், உண்டான வருத்தத்தைத் தன் தோழியுடன் தலைவி பகிர்ந்துகொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

உரை புதிது என்பதோடு, சுவையானதும்தான். பிறர் குறுக்கீட்டால், தலைவி பெறவிருந்த உடலுறவு சுகம் முழுமை பெறாமல் தடைப்பட்டதால் உண்டாகும் தவிப்பு விவரிப்புக்கு அப்பாற்பட்டது என்பது உண்மையே.

எது எப்படியோ, இவ்வுணர்வைக் கட்டுப்படுத்துவதில் மிக வல்லவர்கள் பெண்கள். புணர்ச்சி இன்பம் தொடர்பான பெண்களின் தவிப்பு, பழம் புலவர்களாலும், இக்காலக் கவிஞர்களாலும் மிகைப்படுத்தப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது!
======================================================================

திங்கள், 27 ஜூலை, 2020

செல்லங்கள்[‘கரு’ புதுசு! கதையும் புதுசு!]

“நம்ம மிதுனுக்குப் புதுசா  ஜாதகம் கொண்டுவந்திருக்கேன். ஜோடிப் பொருத்தம் அபாரம்” என்று சொன்ன தரகர் அய்யாசாமி, மிதுனின் புகைப்படத்துடன் பெண்ணின் படத்தையும் ஜோடி சேர்த்து அவன் தாயாரிடம் நீட்டினார்.

முகத்தில் பரவசம் பரவ, “என்ன படிச்சிருக்கா?” என்றார் அவர்.

“நம்ம பையனுக்குச் சமமான படிப்புத்தான். எம்.ஏ.,எம்.ஃபில்.”

“வசதி எப்படி?” -மிதுனின் தந்தை சேனாபதி கேட்டார்.

“பொண்ணோட அப்பா பெரிய பஸ் கம்பெனி அதிபர். நாலஞ்சி பெட்ரோல் பங்க் இருக்கு. பத்துப்பதினைஞ்சி டேங்கர் லாரி ஓடுது. பொக்லின் அது இதுன்னு நம்ம அந்தஸ்துக்குச்  சமமானவங்கதான்.”

“பொண்ணோட பிறந்தவங்க எத்தனை பேர்?”

“ஓரு பொண்ணுதாங்க. ரொம்பச் செல்லமா வளர்த்திருக்காங்க.”

“இந்த இடம் நமக்குத் தோதுப்படாது தரகரே.”

“ஏனுங்க?”

“மிதுன் எங்களுக்கு ஒரே பையன். ரொம்பச் செல்லம். பையன் பொண்ணு ரெண்டு பேருக்குமே விட்டுக்கொடுத்துப் போற மனப் பக்குவம் இருக்காது. நானா நீயான்னு போட்டி போடுவாங்க. குடும்பத்தில் நிம்மதி இருக்காது. ஒன்னுக்கு மேற்பட்ட  பொண்ணுக உள்ள இடமா பாருங்க” என்றார் சேனாபதி.

=====================================================================

ஞாயிறு, 26 ஜூலை, 2020

இந்தியா 05%! சீனா 90%!!.....???

Most Atheist Countries 2020
Non Religious Persons
https://worldpopulationreview.com/country-rankings/most-atheist-countries ]
நாத்திகம் என்பது, அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்படாத கடவுளையோ, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் போன்றவற்றையோ நம்ப மறுப்பது. மதச்சார்பின்மைக்கும் நாத்திகத்திற்கும் சற்றே வேறுபாடு உள்ளது என்பதும் அறியற்பாலது.

உலகிலுள்ள நாத்திகர்கள், அல்லது  கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கையை மிகத் துல்லியமாகக் கண்டறிவது சாத்தியமானது அல்ல. எனினும், அது மில்லியன் கணக்கிலானது என்று நம்பப்படுகிறது.

https://worldpopulationreview.com நிகழ்த்திய ஆய்வின்படி, சீனா முதலான  26 நாடுகளில் நாத்திகர்கள் அதிகம் வாழ்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

Most Atheist Countries 2020

Non Religious Persons
< 10.00%
> 10.00%
> 20.00%
> 30.00%
> 40.00%
> 50.00%
> 60.00%
> 70.00%
> 80.00%
> 90.00%

Most Atheist Countries 2020

CountryNon Religious Persons 
China90.00%
Sweden73.00%
Czech Republic72.00%
United Kingdom69.00%
Netherlands66.00%
Azerbaijan64.00%
Belgium64.00%
Hong Kong63.00%
Australia 63.00%
Vietnam 63.00%
Norway 62.00%
Denmark 61.00%
Estonia 60.00%
South Korea 60.00%
Germany 60.00%
Japan 60.00%
Switzerland 58.00%
Israel 58.00%
Canada 57.00%
Spain 57.00%
Ireland 56.00%
Finland 55.00%
Slovenia 53.00%
Austria 53.00%
Latvia 52.00%
France 50.00%

India 05.00%


தமிழ்நாட்டில் பெரியார், சிந்தனையாளர்கள் மற்றும் திராவிட இயக்கங்களின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக நாத்திகர் & மதச்சார்பு இல்லாதோர் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடும் எனலாம். இந்நாள்வரை, கணக்கெடுப்பு ஏதும் நடத்தப்பட்டதாக அறியப்படவில்லை.

=====================================================================
ஆதாரம்: https://worldpopulationreview.com/country-rankings/most-atheist-countries