புதன், 1 ஆகஸ்ட், 2018

'இதயமாற்று அறுவை'க்குப் பின்னரான 'ஆயுள்' காலம்!

'இதயமாற்று அறுவைச் சிகிச்சை பற்றி அறிந்திருப்பினும், பொருத்தப்பட்ட மாற்று இதயத்துடன் ஒருவர் எவ்வளவு காலம் வாழ முடியும்?' என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது எழுவது உண்டு.

'The Week'[June 24, 2018] ஆங்கில இதழில் வெளியான ஒரு கட்டுரையை வாசித்தபோது அதற்கு விடை கிடைத்தது.

'தில்லி'யில் உள்ள 'BLK' மருத்துவமனையின், இதய அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் 'டாக்டர் அஜய் கவுல்' என்பார் அளித்த ஒரு பேட்டியில்.....

இதயமாற்று அறுவை செய்துகொள்ளும் நோயாளிகளில், ஓராண்டைக் கடந்தவர்களில் ஏறத்தாழ,  72% பேர் 5 ஆண்டுகளும்,  20% நபர்கள் 20 ஆண்டுகளும் வாழ்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

'உலக அளவில், ஆண்டுதோறும் 4500 அறுவைகள் செய்யப்படுவதாகவும்[அமெரிக்காவில் மட்டும் 50%. இந்தியாவில் மிகக் குறைவு], மாற்று உறுப்பை நோயாளியின் உடம்பு ஏற்காத காரணத்தால் 20% அறுவைகள் தோல்வியில் முடிகின்றன என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

கூடுதல் தகவல்களை இணைப்புகளில் வாசித்தறியலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------



12 கருத்துகள்:

  1. சோசியரிடம் நாள் குறித்த பிறகு அறுவை சிகிச்சை செய்திருப்பார்களோ....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மவர்கள், கடவுளைச் சந்திப்பது என்றாலும் சோசியரைப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள்!!!

      நன்றி நண்பரே.

      நீக்கு
    2. //நம்மவர்கள், கடவுளைச் சந்திப்பது என்றாலும் சோசியரைப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள்!!!//

      கடவுளை நினைக்காம ஒரு பதிவு போட்டிருக்கிறீர்னு நினைச்சேன். பின்னூட்டத்தில் அவரை வம்புக்கு இழுத்து உம் புத்தியைக் காட்டிவிட்டீரே!

      நீக்கு
    3. என் புத்தியைப் புரிந்துகொண்ட நீரும் புத்திசாலிதான்!

      நீக்கு
  2. இதயத்தின் சிந்தனையே மாற வேண்டும்... அதற்கென்ன வழி சொல்லுங்க ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை தனபாலன்.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. நம் மனம்தான் சிந்திக்காமல் , பல மூட நம்பிக்கைகளை ஏற்கிறதே தவிர, உடல் ஏற்பதில்லை

    பதிலளிநீக்கு
  5. தகவல் கொண்ட பதிவு.
    //நம்மவர்கள், கடவுளைச் சந்திப்பது என்றாலும் சோசியரைப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள்//
    முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு