சனி, 31 ஆகஸ்ட், 2024

‘சத்துக்குரு, ஸ்ரீ ஸ்ரீ ரவி, ராம்தேவ்...’ ஆசீர்வதிக்கப்பட்ட ஆடம்பரப் பிச்சைக்கார்கள்!!!

ழுக்கேறிய கந்தல் ஆடையும் பரட்டைத் தலையுமாய் மக்களைத் தேடிப்போய் வயிற்றுப்பாட்டுக்காகக் கையேந்துபவர்கள் பிச்சைக்காரர்கள்!

ஏந்துவது இழிவென்று, காவி உடுத்துத் தெருவோரங்களில் அமர்ந்து, தேடிவந்து பிச்சையிடுபவர்களுக்காக காத்திருப்பவர்கள் சாதுக்கள்!!
நாடாண்ட மன்னர்களைப் போல் படாடோபமாய் உடைகளும் ஆபரணங்களும் தரித்து, ஆசிரமங்களில் தங்கி, பக்தக்கோடிகள் தேடிப்போய்க் கோடி கோடியாய்க் காணிக்கை செலுத்த, அபயக்கரம் உயர்த்தி, புரியாத தத்துவம் உபதேசித்து, கொஞ்சமும் உழைக்காமல் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டவர்களால்[கடவுள்கள்] ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


எடுத்துக்காட்டாகச் சிலர்:


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், சத்துக்குரு ஜக்கி வாசுதேவ்!!!


வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

மிகச் சரியான காரணம் கண்டறியப்படாத ‘முகவாதம்’ நோய்!

‘முகவாதம்’ பரம்பரை நோயா?’ என்னும் கேள்விக்கு மருத்துவர் அளித்த பதில் கீழே[நகல் பதிவு].

நோய் குறித்த முழு விவரமும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே அறிந்தவர்கள் அறியாதவர்களுடன் பகிர்வது அவர்களுக்குப் பயன் அளிப்பதாக அமையும்.


வியாழன், 29 ஆகஸ்ட், 2024

தமிழ்நாடு அரசே திருந்து! மூடர்களுக்குத் துணைபோகாதே!!

காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கான ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலாவை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த விவரம் கீழே உள்ள நகல் பதிவில்.

ஜோதிடம், சொர்க்கம்-நரகம் மீதான நம்பிக்கை, மறுபிறப்பு, ‘பிறப்பு-இறப்பு’ நிகழ்வுகளின்போது செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகள், கோயில்களில் உள்ள சிலைகளுக்குச் செய்யப்படும் அலங்காரங்கள், எடுக்கப்படும் விழாக்கள் போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கைகளுக்கு மூல காரணமாக இருப்பது ‘கடவுள் நம்பிக்கை’தான்.

மூடநம்பிக்கைகளுடன் கடவுள் நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குறைக்க முயல்வது தமிழ்நாடு(நடுவணரசும்தான்) அரசின் கடமையாகும்.

அந்தக் கடமையை முறையாகச் செய்யத் தவறிய அரசு, முனைப்புடன் மேற்கண்ட மூடநம்பிக்கைகளைப் பேணி வளர்ப்பதில் நாட்டம் கொண்டுள்ளது என்பதற்கு, அது திட்டமிட்டுள்ள ஆன்மிகச் சுற்றுலாவும்[நகல் பதிவு காண்க] ஓர் எடுத்துக்காட்டாகும்.

உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்வதோடு[இயற்கை அழகு செறிந்த இடங்களுக்குச் சுற்றுலாச் செல்வது வரவேற்கத்தக்கது] நாட்டிலுள்ள அனாதை இல்லங்கள், மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகங்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், தீராத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குக் மக்களைக் குறைந்த கட்டணத்தில், அல்லது இலவசமாக அழைத்துச் சென்று காண்பித்தால், அவர்களின் மனம் பக்குவப்படும்; மனிதாபிமானம் வளரும்.

அரசு இதை செய்யத் தவறுமேயானால்.....

“நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் தவிர்ப்பீர்[ஓம்புமின்]” என்னும் சான்றோர் வாக்கை[புறநானூறு] நினைவுபடுத்த நேரிடும்.




புதன், 28 ஆகஸ்ட், 2024

“புடினைத் தண்டிப்பார் கடவுள்[மோடி]” -உக்ரைன் அதிபர் நம்பிக்கை!!!

#உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனவும், கடவுள் தண்டிக்கும்போது புடினால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது எனவும் உக்ரைன் அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/international/god-is-watching-russia-says-ukrainian-president-zelensky/articlecontent-pf661011-450614.html#

#இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் உக்ரைன் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானது. https://www.vikatan.com/government-and-politics/pm-discusses-bangladesh-ukraine-crisis-with-us-president[copy&paste]#


மேற்கண்ட செய்திகள் மூலம் நாம் அறியத்தக்கது.....


கடவுள் மீது அழுத்தமான நம்பிக்கையுள்ள உக்ரைன் அதிபர் zelensky, கடவுள் தண்டிக்கும்போது ரஷ்யாவால் எங்கும் ஒளிந்துகொள்ள முடியாது” என்று அறிவித்துள்ள நிலையில் கடவுள் மோடியே*(கடவுளின் குழந்தை. “கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றும் சொல்லியிருக்கிறார்] உக்ரைன் அதிபரைச் சந்தித்துள்ளதால், வெகு விரைவில் ரஷ்ய அதிபர் புடின் எங்கேயும் ஓடி ஒளிவதற்குள்ளாக மோடிக் கடவுளால் தண்டிக்கப்படுவார் என்பது உறுதி.

இது குறித்தச் செய்தி வெகு விரைவில் ஊடகங்களில் வெளியாகும் என்று நம்பலாம்!


மோடிக் கடவுளின் வாக்குமூலம்-ஆதாரம்:

#பூமியில் பணிகளை நிறைவேற்ற, கடவுளால் அனுப்பப்பட்டவன்[கடவுளின் குழந்தை] நான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

https://tamil.abplive.com/news/india/pm-narendra-modi-said-i-am-convinced-i-am-not-born-biologically-getting-this-energy-as-god-sent-me-to-do-his-work-184390#


குறிப்பு:

தன்னைக் கடவுளின் குரு[சத்குரு] என்று சொல்லித் திரிகிற ஜக்கி வாசுதேவ் இவரின் ‘தோஸ்து!

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

அகிலமெங்கும் அனுமன் குரங்கின் புகழ் பரப்பும் அமெரிக்கச் சங்கிகள்!!!

ந்தறிவு உயிரினமான குரங்கை மனிதன் ஆக்கியவன் வால்மீகி[ராமாயணம் என்னும் 100% கற்பனைக் கதையை எழுதியவன்].

அந்தக் குரங்கு மனிதனைக் கடவுளாக்கி நாடெங்கும் சிலைகள் நிறுவி, தாங்கள் நிரந்தர முட்டாள்கள் என்பதை உலகறியச் செய்தவர்கள் இங்குள்ள சங்கிகள் என்னும் களிமண் மண்டையர்கள்.

பெரும்பாலோர் கிறித்தவர்களாயினும் அறிவுஜீவிகளும் வாழ்கிற அமெரிக்காவுக்குப் பிழைக்கப்போன இவர்கள், தாங்கள் இப்போதும் எப்போதும் காட்டுமிராண்டிப் பரம்பரைதான் என்பதை, அங்கே அனுமான் குரங்குக்கு 90 அடி உயரச் சிலை நிறுவியதன் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

இது போதாது, உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் ஆஞ்சநேயக் குரங்குக்குச் சிலைகள் எழுப்பித் தாங்கள் பிறவி மூடர்கள் என்பதை இவர்கள் உலகறியச் செய்யலாம்.

இவர்களுக்குக் கடவுள் அவதாரமான மோடி தன் அமோக ஆதரவை நல்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆதாரம்:

#அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் சுகர்லாண்ட் என்ற பகுதியில் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் உள்ளது. இங்கு 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 18-ஆம் தேதி ஸ்ரீ சின்னஜியர் சுவாமிகள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. இச்சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அனுமன் சிலைகளில் மூன்றாவது மிகப்பெரிய அனுமன் சிலை இது என கூறப்படுகிறது#

https://www.dinamalar.com/news/world-tamil-news/90-feet-tall-hanuman-statue-unveiled-in-america--/3709291


இளம் பெண்களும் ‘அந்த’ இரண்டு நிமிடச் சுகமும்!!!

ல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், தாம் தீர்ப்பு வழங்கிய ஒரு வன்புணர்வு வழக்கில்[16 வயதுப் பெண்ணின் சம்மதத்துடன் ஆண் உடலுறவு கொண்டது], “இளம் பெண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிடச் சுகத்துக்காகத் தங்களை இழந்து அவமானப்படுதல் கூடாது” என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அறிவுரையில், ‘இரண்டு நிமிட உடலுறவுச் சுகம்’ நம் கவனத்தை ஈர்த்தது.

‘வெறும்’ இரண்டு நிமிடங்களில் உடலுறவு அனுபவம் முடிந்துவிடுவதைத்தான் ‘இரண்டு நிமிடச் சுகம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் நீதியரசர் அவர்கள்.

ஆணும் பெண்ணும் இணைந்து[குறிப்பாகப் பதின்பருவத்தில், சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல்] அந்தரங்கச் சுகத்தைப் பெறும் கால அளவை மிகச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் எனலாம்[அரை அல்லது கால் அல்லது அரைக்கால் நிமிடத்திலேயே முடிந்துவிடுவதும் உண்டு].

நீதிபதி அவர்கள், ‘பெண்கள்’இன் முன்னால் ‘இளம்’ சேர்த்திருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

இளம் பருவத்தைக் கடந்தவர்களும் ‘அது’ விசயத்தில் அனுபவம் பெற்றவர்களுமான பெண்களால், அவர் குறிப்பிடுவது போல இச்சைகளைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகலாம். ஆனால்.....

‘அந்த’ச் சுகானுபவத்தை அனுபவித்திராத இளசுகளால்[பெற்றோர் மிக அதிகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம்] அதைக் கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல.

‘அல்வா[ஏதோ ஒரு இனிப்பு]’வின் ருசியை ஏற்கனவே சில முறையோ பல முறையோ சுவைத்தறிந்த ஒருத்தியால் அதன் மீதான ஆசையைக் கட்டுப்படுத்த முடியும்[விதிவிலக்கானவர்களும் உளர்]; அந்த அனுபவமே[உடலுறவிலும்தான்] இல்லாத சிறுசுகளிடம், ஆசை தீர அதை உண்ண வேண்டும் என்பதைவிடவும், ஒரே ஒரு முறையேனும் ருசித்துப்பார்க்க வேண்டும்[அ.சுகத்தை அனுபவிக்க வேண்டும்] என்னும் ஆர்வமே மேலோங்கியிருக்கும்.[இதனால் விளையும் தீங்குகளைச் சுட்டிக்காட்டி இவர்களின் மனதைப் பக்குவப்படுத்தும் பெரும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது].

ஆக, நீதியரசர் அவர்களிடம் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

“ஐயன்மீர், இளம் பெண்களுக்கு அறிவுரை வழங்கிய தாங்கள், அவர்களின் பெற்றோர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கியிருந்தால் அது பெரிதும் விரும்பத்தக்கதாக அமைந்திருக்கும் என்பதே.
[மேற்கண்ட வயதுப் பெண்ணை அவள் சம்மதத்துடன் ஆண் திருமணம் செய்தாலும் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?]

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

கார்கால நாய்களும் காம வெறிப் பெண்களும்!!!

ள்ள உடலுறவுக்கு  இடையூறாக உள்ளது என்று தான் பெற்ற குழந்தையைத் தாயே கொன்றுவிடுவதும், கள்ளத்தனமாய்க் காம சுகம் தருபவன் மூலம் அதைச் செய்துமுடிப்பதும் நம் புனித மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இதற்கு மேற்கண்ட நிகழ்வும் ஒரு சான்றாகும்.

ஒத்த மனமும், ஒத்த உடலமைப்பும் ஒத்த புரிந்துணர்வும் இருபாலருக்கும் ஏற்ற வகையில் அமையாதபோது, கணவன் மனைவி என்னும் இருவரில் ஒருவரோ இருவருமோ திருட்டுத்தனமாகப் புணர்ச்சிச் சுகத்தை நாடுவது உலக வழக்கமாக உள்ளது.

இந்த ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பதற்காக அறிஞர்கள் வகுத்துத்தந்த எந்தவொரு நெறிமுறையும் உரிய அளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை.

இம்மாதிரி நிகழ்வுகளை அறிய நேரும்போது நம்மை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பெரிய ஐயம் என்னவென்றால்.....

ஒரு காமுகி, கள்ளக் காமுகனுடன் உடலுறவில் ஈடுபடும்போது கொஞ்ச நேரம்கூடப் பிரிந்திருப்பதைச் சகிக்கமாட்டாளா? பிரிவதும் சாத்தியம் இல்லையா, ‘பிணையல்’ போட்டுக்கொண்ட ஆண்&பெண்(அதற்கான நேரம் வரும்வரை  பிரிய முடியாது) 
 தெரு நாய்கள் போல?
 
01%கூட பிள்ளைப் பாசம் இல்லாத பெண் ஜென்மங்களைப் படைத்தவனும் கடவுள்தானே?

கயமைக் குணம் படைத்த இந்தக் கடவுளையா[இருந்தால்.....] புத்தி கெட்டப் பக்தர் கூட்டம் கொண்டாடிக் கூத்தடிக்கிறது!?

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

தப்புச் செய்வது தப்பில்லை! தப்பித்தால் நீங்கள் புத்திசாலி!!

தப்பாமல் கண்டு கேட்டுப் பயனடையுங்கள்! 

கட்சிக் கொடிக்கு அம்மன் திருப்பாதப் பூஜை! கட்சித் தலைவனுக்கு?!

கொடி என்பது ஓர் அமைப்பு[கட்சி]க்கான அடையாளச் சின்னம்.

விரும்பினால், அதைக் கம்பத்தில் ஏற்றி மரியாதை செலுத்தலாம். உதாரணம் ஒரு நாட்டின் கொடி[தேசியக்கொடி]. அதன் மதிப்பு அவ்வளவுதான்.

தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு புதிய கட்சி. அதற்கான கொடியை அதன் தலைவர் நடிகர் விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினாராம்.

அந்தக் கொடியை மதுரை மீனாட்சியம்மன் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்யச் சென்றாராம் ஒரு நடிகர்[சௌந்தர்ராஜன்]. செய்திருப்பார் என்று நம்பலாம்.

இதைச் செய்தியாக வெளியிட்டுப் பொதுத் தொண்டு செய்திருக்கிறது https://tamil.samayam.com.

இருப்பில் உள்ள ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகளில் இது[கொடிக்குப் பூஜை செய்வது] புதுசு என்பது அறியத்தக்கது[அம்மனுக்குரிய பூஜைப் பொருட்கள், நகைகள், ஆடைகள், பணக் கட்டுகள் என்று எதையெதையோ வைத்துப் பூஜை செய்கிறார்கள்].

நடிகருக்கு[சௌந்தர்ராஜன்] இது நல்ல நம்பிக்கையாக இருக்கலாம். இருக்கட்டும்.

இன்று கொடிக்குப் பூஜை செய்தவர் அடுத்து ஒரு நாளில் கொடிக் கம்பத்தையும், அப்புறம் ஒரு நாளில் கொடிக் கயிற்றையும் அம்மன் காலடிகளில் வைத்து பூஜை செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

இவற்றின் தொடர்ச்சியாக, கட்சிக் கொடியை அறிமுகம் செய்த நடிகரையும்[விஜய்] அம்மன் பாதங்களில் கிடத்திப் பூஜை செய்வாரோ?

செய்தால்.....

கட்சிக் கொடி, கயிறு, கம்பம் ஆகிவற்றுடன் கட்சித் தலைவருக்கும் அம்மன் திருவடிப் பூஜை செய்து சாதனை நிகழ்த்தினார் ஓர் அல்லக்கை நடிகர் என்று உலகோர் வியப்பார்கள்; புத்தம் புதிதாக ஒரு மூடநம்பிக்கையை உருவாக்கியதற்காகப் பாராட்டவும் செய்வார்கள்!

நடிகருக்கு நம் பாராட்டுகள்!

                                       *   *   *   *   *

https://tamil.samayam.com/latest-news/madurai/actor-soundararaja-worshiped-with-tvk-flag-at-madurai-meenakshi-amman-temple/articleshow/112737124.cms

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

இந்தியாவின் அவசரத் தேவை அரை நூற்றாண்டு ராணுவ ஆட்சி!!!

 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தன் சொத்து, கடன்கள், கல்வித் தகுதிகள், குற்றப் பின்னணி ஆகியவை குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய ஓர் உறுதிமொழி ஆவணத்தைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தல் நடைமுறை. அவர் சமர்ப்பிக்கும் அந்த ஆவணம்தான் ‘பிரமாணப் பத்திரம்’ ஆகும்.

பத்திரத்தில் தவறான தகவல்களைத் தந்திருந்தால், அவர் தண்டனைக்குரியவர் என்பது தேர்தல் விதிகளில் ஒன்று[https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/punishment-for-filing-false-poll-affidavit-should-be-enhanced-to-max-of-2-years-parliamentary-panel/articleshow/102432414.cms?from=mdr]

‘விதி’ வகுப்பது எளிது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இந்நாள்வரை, வேட்பாளர்கள் விதிகளை மதித்து[பொய்யுரைக்காமலும், குற்றங்களை மறைக்காமலும்] பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தார்களா   என்பது முழுமையாகக் கண்டறியப்படவில்லை. அது அத்தனை எளிதானதும் அல்ல. 

கண்டறிந்தால்,  தேர்தல் நடந்து முடிவதற்குள்ளாகவோ,  வெற்றி பெறும் வேட்பாளர் பதவி ஏற்பதற்குள்ளாகவோ, ஏற்ற பிறகோ அவர் தண்டிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

இந்நாள்வரை தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனைப் பேர்? எவரும் இல்லைதானே?

ஆக, இங்கே விதிகள் வகுப்பது ஒரு சடங்குதானே தவிர, அவற்றை எவருமே மதிப்பதில்லை.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அத்தனைப் பேரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்.....

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் 16 ‘எம்.பி’களும் 135 ‘எம்.எல்.ஏ’களும்[நகல் பதிவு காண்க] என்பது பல மடங்காக அதிகரித்திருக்கும்.

குற்றங்களை ஆய்வு செய்யும் குழுவில் உள்ள அத்தனைப் பேரும் நேர்மையானவர்களா என்பதும் சந்தேகமே.

போட்டியிடும் அத்தனை பேரைப் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்வதற்குக் கால அவகாசம் நிறையத் தேவை. குறுகிய அவகாசத்தில் நம் நாட்டுத் தேர்தல்கள் நடத்தப்படுவதால், ஆய்வு முழுமை பெற்றிட வாய்ப்பு இல்லை.

மேலும், 

அடியாட்களின் பக்கப்பலம் இல்லாமல் ஒரு வேட்பாளர் வாக்குச் சேகரிப்பதும் இங்குச் சாத்தியப்படாத ஒன்று.

வெளிப்படையாகச் சொன்னால், தேர்தலை அறிவிப்பதுதான் ஆணையமே தவிர அதை நடத்தி முடிப்பவர்கள் அடியாட்கள் எனப்படும் ரவுடிகள்தான்.

ரவுடிகளின் பாதுகாப்போடுதான் இந்த நாட்டில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்ற[சட்டமன்றங்களும்தான்] உறுப்பினர்கள் ஆவதும் அமைச்சரவையில் இடம்பெற்றுச் சுகபோகங்கள் அனுபவிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது[விதிவிலக்காக மிகச் சிலர் இருக்கக்கூடும்].

ரவுடிகளும், ஒழுக்கம் கெட்டலையும் தன்னலம் பேணும் தலைவர்களும் தண்டனைக்குரியவர்கள்; தேவை எனின், நாட்டைவிட்டே விரட்டப்படுதற்கு உரியவர்கள் அவர்கள்.

இது சாத்தியம் ஆகவேண்டும் என்றால்.....

குறந்தபட்சம் அரை நூற்றாண்டுகளுக்காவது இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை நன்மனம் படைத்த ராணுவக் குழுவினர் ஏற்பது வரவேற்கத்தக்கதாகும்!

புதன், 21 ஆகஸ்ட், 2024

அப்பாவின் முதுகு ‘மொர மொர’! அம்மாவுடையது ‘மெது மெது’!!!

சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியான காணொலி:

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

மரணத்தில் என்ன வீரமும் வெங்காயமும்!

 

இறத்தல், உயிர்துறத்தல், சாதல் போன்றவை மரணத்தைக் குறிக்கும் பிற சொற்கள்.

நோய், தீராத வறுமை, விபத்து, தற்கொலை, இயற்கைப் பேரிடர் என்று மரணத்திற்கான காரணங்கள் பலவாக உள்ளன. பகை நாடுகள் தமக்குள் நிகழ்த்தும் போரும் இவற்றுள் அடங்கும். 

மரணத்தை விரும்பி ஏற்பார் எவருமில்லை.

போருக்குச் செல்லும் படை வீரர்களில் எந்தவொருவனும் மரணத்தைத் தழுவும்[அது நேர்ந்தால்] அந்தக் கணங்களில், “என் நாட்டிற்காக என்  உயிரைத் தியாகம் செய்கிறேன்”  என்று பெருமிதம் கொள்வது சாத்தியமில்லை; மிஞ்சுவது வேதனைதான்.

தனிப்பட்ட இருவர் அடித்துக்கொண்டால் அது அடிதடி, அல்லது மோதல்.

பகை நாடுகளின் வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டால் அது போர்.

தனிப்பட்டவர்கள் மோதலில் ஒருவரோ இருவருமோ உயிரிழக்க நேர்ந்தால் அது மரணம். போரில் நிகழ்வதும் மரணம்தான்.

மரணித்தால் மண்ணாவது, அல்லது சாம்பலாவது இயல்பு. இதில் ஏது ஏற்றத்தாழ்வு?

வீரமரணம் எய்தியவன் சொர்க்கம் சேர, கொல்லப்பட்டவன் நரகத்தில் தள்ளப்படுவானா?

தங்கள் தரப்பு ஆள் செத்தால் ‘வீரமரணம்’ எய்தினான் என்பதும், எதிரித் தரப்பினன்[அல்லது தீவிரவாதி எனப்படுவோன்] சாவைத் தழுவினால் அவன் கொல்லப்பட்டான் என்பதும் காலங்காலமாக தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்! [‘தங்கள் தரப்பில் இத்தனைப் பேர் மரணம், எதிரித் தரப்பினரின் எண்ணிக்கை இது’ என்று குறிப்பிடுவதே ஏற்புடையது ஆகும்].

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

அய்யோ பாவம் நாமக்கல் ஆஞ்சநேயர்!!!

 முட்டைப் பண்ணைத் தொழில், சுமையுந்துக்[லாரி] கட்டுமானம் போன்றவற்றால் ‘நாமக்கல்’ பிரபலம் அடைந்திருந்தாலும், இதற்குப் பெருமளவில் பெருமை சேர்ப்பது உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயக் கடவுள் இங்கே எழுந்தருளியிருப்பதுதான்.

நேற்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி 1008 லிட்டர் பாலைப் பொழிந்து அவருக்கு அபிஷேகம் செய்திருக்கிறார்கள் அர்ச்சகர்கள்.

அனுமன் ஜெயந்தி முதலான விசேட நாட்களில்[காண்க: படம்] நல்லெண்ணை, சிகைக்காய், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றாலும் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

கற்சிலைக்குள் இரண்டறக் கலந்திருக்கும் ஆஞ்சநேய சாமியின் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதால், அவரின் உடல் சூடு குறைகிறது; தலைமுடி வறட்சி நீங்குகிறது; பொடுகு முற்றிலும் அகலுகிறது.

அரைத்த சிகைக்காய்க் கரைசல்கொண்டு அவர் மேனியைக் கழுவுவதால், அவர் மீது படிந்திருக்கும் ழுக்கு அகற்றப்பட்டு அவரின் தோல் மிருதுவாகிறது.

தயிர், சந்தனம் ஆகியவையும் நல்லெண்ணையைப் போலவே அனுமன் சாமியின் உடல் சூட்டைத் தணிக்கின்றன.

மஞ்சள் கிருமிநாசினி என்பது நாம் அறிந்ததே. நோய் தொற்றாமல் சாமியைப் பாதுகாக்கிறது.

புரதம், கால்சியம், வைட்டமின் பி(குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என்று பாலில் உள்ள எல்லாச் சத்துக்களும் சாமியின் வேர்வைத் துவாரங்கள் வழியாக அவரின் உடலில் கலக்கின்றன.

ஆக,

மேற்கண்ட அபிஷேகங்களால் அறிவியல் ரீதியாக, பகவான் ஆஞ்சநேயரின் உடல் நலம் பாதுக்கக்கப்படுகிறது என்பது நம்மை வியப்பிலும் பெரு மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறது.

ஆயினும், விசேட நாட்களில் மட்டும் அபிஷேகங்கள் செய்து, சாதாரணமான பல நாட்களில் அர்ச்சகர்கள் அவற்றைத் தவிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.

சிறப்பு அபிஷேகங்கள் இடம்பெறாத நாட்களில் சாமியின் உடம்பு சூடாகி, அழுக்குச் சேர்ந்து, மிருதுத் தன்மை குறைந்து, வறண்டுபோக நேரிடும் என்பதால், நாள் தவறாமல் அர்ச்சகர்கள் அவருக்கு அபிஷேகங்கள் செய்வது மிகவும் அவசியம் ஆகும்.

இனியேனும் செய்வார்கள் என்பது நம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

செய்யத் தவறினால், ஆண்டவர் ஆஞ்சநேயருக்கு அவர்கள் அநீதி இழைத்தவர்கள் ஆவார்கள்!

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

‘வன்புணர்வுக் குற்றங்கள்’... இந்தியாவுக்கு 2020இல் 12ஆவது இடம்! 2047ல்?!

“நமது பங்களிப்பில் நாம் தீவிரமாக இருக்க வேண்டிய நேரம் இது. 2047இல், இந்தியா ஒரு வளர்ந்த நாடாகச் சுதந்திர தினத்தின் 100ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும்....."[https://www.jagranjosh.com/general-knowledge/key-highlights-from-pm-modi-independence-day-speech-1692067102-1] என்று 2023ஆம் ஆண்டுச் சுதந்திர தின விழாவில் நம் பிரதமர் பேசினார்[அவ்வப்போது இதை வலியுறுத்துவது அவர் வழக்கம்].


இதற்கான காரணம், இன்றளவில் வளர்ந்த பத்து நாடுகளின் பட்டியலில்கூட  நம் நாடு இடம்பெறவில்லை[https://www.javatpoint.com/top-10-developed-countries-in-the-world] என்பதுதான்.


பிரதமரின் விருப்பம் ஈடேற இன்னும் 23 ஆண்டுகள்[2047 - 2024] உள்ளன.


23 ஆண்டுகளில் நம் நாடு வளர்ந்து, நாம் செல்வந்தர்களாகி, வசதியான வாழ்வைப் பெறுகிறோமோ அல்லவோ, பசியும் பட்டினியும் இன்றி, மிகக் குறைந்த வசதிகளைப் பெற்றிருந்தாலும் வன்புணர்வு, கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்கள் குறைந்து அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தாலே போதும் என்று எண்ணத் தோன்றுகிறது.


இவ்வாறான எண்ணம் நம் மனதில் உதிக்கக் காரணமான ஒரு புள்ளிவிவரம்.....

இந்தியாவில் 2020இல் கற்பழிப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை 100,000க்கு   22,172 ஆக உள்ளது[பிற குற்றங்களுக்கான பட்டியல்கள், பதிவின் ‘நீட்சி’ கருதித் தவிர்க்கப்பட்டுள்ளன] அதாவது, 1.80 விழுக்காடு[%]. 

உலக மக்கள்தொகை மதிப்பாய்வுத் தரவுகளுக்கேற்பவும், உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வறிக்கையின்படியும் 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக தினமும் 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.[https://www.tbsnews.net/world/countries-highest-rape-incidents-144499?amp]

2024வரை இந்த வன்புணர்வுக் குற்றங்கள் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.


ஒன்றிய அரசு இது விசயத்தில் மிக மிக மிகக் கடுமையான தடுப்பு நடவடிக்ககளை மேற்கொள்ளாவிட்டால்.....


2047இல் வன்புணர்வு அட்டூழியங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தப் புண்ணியத் தேசம் முதல் இடத்தைப் பெற்றிடவும் வாய்ப்புள்ளது.


எனவே, இனியேனும், நம் பிரதமர் ‘வளர்ச்சி’ பற்றி மட்டுமே வாய் வலிக்கப் பேசிக்கொண்டிராமல், வன்புணர்வு முதலான குற்றங்களின் ‘வீழ்ச்சி’ குறித்து மிகுதியும் பேசுவது நாட்டுக்குப் பெரிதும் நன்மை பயப்பதாக அமையும்.


குறிப்பு:

மோடி குறித்து விமர்சனங்களை முன்வைப்பதில் அதிகம் ஈடுபாடில்லை; தவிர்ப்பதும் அத்தனை எளிதாக இல்லை! 

சனி, 17 ஆகஸ்ட், 2024

‘தமிழ்நாடு ரயில்வே திட்டங்கள்'... 1ரூ தராமல் ஓர் 1000ரூ தானம் செய்த தர்மப்பிரபு மோடி!!!

#தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாமல்லபுரம்- கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார் பிரதமர் மோடி[https://news7tamil.live/only-rs-1000-allocation-for-tamilnadu-rail-projects-dr-balu-shocking-information.html].

கலியுக அவதாரப் புருஷனும் உலக மகா ‘யோகி’யும் இந்தப் புண்ணியப் பூமியின் பிதாமகனும் பிரதமரும் ஆன நரேந்திர மோடிக்குத் ‘திமுக’ கூட்டணிக் கட்சியினர் மட்டுமல்லாமல், தமிழர் நலம் நாடும் பிற அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்; போராட்டமும் நடத்தவிருக்கிறார்கள்.

மோடி வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது, தமிழர்கள் 2024 தேர்தலில் அவரைப்[பாஜக] படுதோல்வி அடையச் செய்ததற்குப் பழிவாங்கும் செயல் என்று காரணமும் சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

மோடி மட்டுமல்ல, மானமும் ரோஷமும் உள்ள எந்தப் பெரிய தலைவராயினும் தம்மை அவமானப்படுத்தியவர்களைப் பழிவாங்கவே செய்வார்கள்.

ஆனாலும், மோடிக்கு ரொம்பப் பெரிய மனது. அவர் நினைத்திருந்தால்.....

ரூ1000 வழங்காமல் ஒரே ஒரு ஒற்றை ரூபாய்த் தாளை விட்டெறிந்திருக்கலாம். அவரோ, துரோகம் புரிந்த தமிழர்களை மன்னித்து, ஆயிரம் ரூபாயைத் தானமாக வழங்கிக் கௌரவித்திருக்கிறார்; ‘சிங்கிள்’ பைசாவைக்கூட தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கலாம். அந்த இழிசெயலை அவர் செய்யவில்லை.

மோடிக்கு எதிரானதொரு போராட்டத்தை அறிவித்திருக்கும் தமிழ்நாடு கட்சியினருக்கு நாம் வழங்க விரும்பும் ‘புத்திமதி’ ஒன்றுள்ளது.

அது.....

“உங்களின் போராட்டம் வெறும் அறிவிப்போடு முடியட்டும். ‘பின்வாங்கமாட்டோம்; மோடியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியே தீருவோம்’ என்று நீங்கள் முடிவெடுத்தால்.....

படைப் பலம், பணப் பலம், அதிகாரப் பலம் என்று ஒரு பிரதமருக்கு உரிய அத்தனைத் தேவைகளையும் பெற்றுள்ள மோடியின் ஒரு சுட்டு விரலைக்கூட உங்களால் அசைக்க இயலாது!

கொஞ்சமே கொஞ்சம் அசிங்கமாகச் சொன்னால், அவரிடமிருந்து உங்களால் எந்தவொன்றையும் 'பிடுங்க' முடியாது!!"

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

பகவான் மோடியும் ‘பக்கா’ அடிமை அண்ணாமலையின் பகற்கனவும்!!!

 

இந்தியா பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நாடு.

மாநில ஆட்சியாளர்கள் நிர்வாகத் திறமை அற்றவர்களாக இருப்பினும், மத்திய அரசு நலத்திட்டங்கள் பல வகுத்து அவற்றை நிறைவேற்றினால், அனைத்து மாநிலங்களும் வளர்ச்சிபெறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு அதிகாரப் பலமும் பணப் பலமும் அதற்கு உள்ளன.

என்னதான் நிர்வாகத் திறமையுள்ள முதல்வர்கள் தத்தம் மாநிலங்களை முன்னேற்றக் கடுமையாக உழைத்தாலும், மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் அது சாத்தியமாவது எளிதல்ல.

இந்த அடிப்படையான அரசியல் அறிவுகூட இல்லாமல், “தமிழ்நாடு[ஒரு மாநிலம்] வளர்ந்தால் வளர்ந்த பாரதம் வரும்[வளரும்]” என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை என்னும் வடக்கன்களின் அடிவருடி.

தமிழ்நாடு வளர வேண்டுமானால், ‘திமுக’ ஆட்சி அகற்றப்பட்டுத் தமிழ்நாட்டைப் ‘பாஜக’ ஆள வேண்டுமாம்.

மக்களின்[தமிழ்நாடு] அங்கீகாரத்தைப் பெறுவதன்[2026 தேர்தல்] மூலம் இங்கு ‘பாஜக கூட்டணி’[தனித்துப் பாஜக ஆட்சி என்று சொல்லத் ‘தில்’ இல்லை] ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமாம்.

இது தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் காணும் பகற்கனவு.

மோடியைச் சந்தித்து அவரின் தாள் பணிந்து, இரு கரம் குவித்து, “கடவுளால் இம்மண்ணிற்கு அனுப்பப்பட்ட புனிதரே, உடனடியாக ‘திமுக’ ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துங்கள். அதிகாரப் பலத்தைத் ‘திமுக’ இழக்கும் நிலையில் அடுத்து வரும் தேர்தலில் கோடி கோடியாய்ப் பணத்தையும், மோடியான நீங்கள் பெற்றிருக்கும் ஆன்மிகப் பலத்தையும் பயன்படுத்தி மிக எளிதாக அதை வீழ்த்திவிடலாம்” என்று அண்ணாமலை கோரிக்கை வைத்தால்.....

உலகம் சுற்றும் வயோதிக வாலிபரான தலைவர் மோடி அதை நிறைவேற்றுவார்.

2026 தேர்தலுக்கு 16 மாதங்கள் போல் கால அவகாசம் உள்ளது.

இந்த அவகாசத்தில், 2024 தேர்தலில் வாக்களிக்காததற்காக, பேரிடர்க் காலத்தில் நிதி வழங்காமலும், நிதிநிலையறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நலத்திட்டங்களை அறிவிக்காமலும் தமிழர்களைப் பழிவாங்கினாரே மோடி, அதைப் போலவே, அடுத்த தேர்தல் வருவதற்குள் இப்போதுள்ள பல நலத்திட்டங்களையும் கிடப்பில் போட்டு, தமிழர்களைப் பட்டினி கிடந்து வயிறு காய வைக்கலாம்.

குறைந்தபட்ச வாழ்க்கை வசதிகூட இல்லாமல் இவர்கள் வாடி வதங்கிக் கிடப்பதைப் பார்த்துப் பார்த்துப் பார்த்து பேரானந்தத்தில்[தொடர் தேர்தல் தோல்வி மூலம் பெற இயலாதது] திளைக்கலாம் மோடியின் பரமப் பக்தர் அண்ணாமலையும் பகவான் நரேந்திர மோடியும்!

புதன், 14 ஆகஸ்ட், 2024

ஒற்றை ஆண்! உடலுறவுக்கு 10,000 பெண்கள்!!

கொல்கத்தா மருத்துவமனையில் 2ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கொடூரச் செய்தி யாவரும் அறிந்ததே.


இது குறித்த உடற்கூறு ஆய்வறிக்கையில்[போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்], "பெண் டாக்டரின் கண்களிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் கசிந்திருந்தது. முகத்திலும் ஒரு நகத்திலும் காயங்கள் இருந்தன. உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் காணப்பட்டன. கழுத்து எலும்பு உடைந்துள்ளது. அந்தரங்கப் பாகங்களில் ரத்தம் கொட்டியிருந்தது" என்று கூறப்பட்டுள்ளது. 


கருத்தரங்க[செமினார்] அறையில் கிடந்த ப்ளூடூத் ஹெட்போன், சிசிடிவி கேமரா போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவனைக் காவல்துறையினர்[சிபிஐ] கைது செய்துள்ளனர்


வன்கொடுமையின்போது, சஞ்சய் ராயின் பிடியிலிருந்து தப்பிக்க, பெண் டாக்டர் நிறையவே போராடியிருக்கிறார். ஆனால், சஞ்சய் ராய் பெண் டாக்டரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறான். இவ்வளவு கொடூரத்தைச் செய்துள்ள அந்தக் கயவன், தற்போது தன்னுடைய குற்றத்தைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டதோடு, "நீங்கள் ஆசைப்பட்டால் என்னைத் தூக்கில்கூடப் போடுங்கள்" என்றானாம்[விரிவான செய்திக்கு*https://tamil.oneindia.com].


இவனுடைய அலைபேசியில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த காணொலிகளே[வீடியோக்கள்] அதிகம் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


அவற்றை ஆராய்ந்ததில் இவன் உடலுறவு வெறியனாகவும்,  கொடூரக் கொலைகாரனாகவும் ஆவதற்கு இவன் பார்த்துப் பார்த்து ரசித்த அந்த ஆபாசக் காணொலிகளே காரணம் என்பது அறியப்பட்டுள்ளது[இவனைப் போன்ற, ஆனால், துணிச்சல் இல்லாத நீலப்படப் பித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது].


ஆபாசப் படங்கள் அதிகரிக்கிற அதே வேளையில் அதில் பங்குகொள்கிற நடிகர்&நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்புதான்.


ஓரிரு நாட்களுக்கு முன்பு மாத இதழொன்றின்[உயிர்மை] கட்டுரையில் இடம்பெற்றிருந்த குறிப்பிடத்தக்க செய்திகளின் நகல் பதிவு கீழே.



குறிப்பிட்ட ஒரு நடிகனின் அனுபவங்களை விவரிப்பதே இக்கட்டுரை. 

இவனுடன் உடலுறவில் பங்களிப்புச் செய்தவர்கள் 10000 பெண்கள் என்றால்.....

இவனைப் போன்ற அசிங்க நடிகர்களின் எண்ணிக்கையைக் குத்து மதிப்பாகக் 500 அல்லது 1000 என்று அனுமானித்தால்,  அவர்களுடன் உறவுகொண்ட பெண்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்று எகிறும்.

தடுப்பாரின்றி, தொடர்ந்து இந்த ஆபாசப் படங்களின் வரவும் படப் பங்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தால்.....

கட்டுப்பாடற்ற காம வெறியாட்டங்களால்  நாள்தோறும் பல பெண் டாக்டர்களோ, பெண் பொறியாளரோ, பிற பெண் அலுவலர்களோ குடும்பப் பெண்களோ வன்புணர்வு செய்து சிதைத்துக் கொல்லப்படும் அவல நிலை உருவாகும்.

உலகின் அத்தனை நாடுகளும் ஒருங்கிணைந்து, ஆபாசப் படங்கள்[உணர்ச்சியைத் தூண்டுவதைத் தவிர, இவற்றில் கற்றுக்கொள்ள எதுவுமில்லை; ஓரளவுக்கேனும் திருப்திகரமான[“இது போதும்” என்னும் மனம் தேவை. இல்லையேல் தெரு நாய்கள் படும்பாடுதான்]  அந்தரங்க உறவு முறையை, தேவைப்படும் ஆடவர்களுக்கு, அதற்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் கற்றுத் தரலாம்] வெளியாவதை முற்றிலுமாய்த் தடுப்பது காலத்தின் கட்டாயம்.

                              *   *   *   *   *

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

கடவுள் கையில் சூலம் எதற்கு? முதுகு சொறியவா?!

 

 · 
பின்தொடர்

#கடவுளைக் கும்பிடவேண்டும். அவருக்குப் பூஜை செய்யவேண்டும்; கோவில் கட்டவேண்டும், 

கோவிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடுவது போதாதென்று வீட்டில் ஒரு பூஜை அறை வைக்கவேண்டும். அதில் தினமும் இருவேளை சாமி கும்பிடவேண்டும். 

ஆனால், இப்படிக் கும்பிடுகிறவர்களை நிலநடுக்கம், பேய் மழை, நிலச்சரிவு போன்றவற்றை உண்டுபண்ணிப் பூண்டோடு கடவுள் அழிப்பார்; விபத்தில் சிக்க வைத்துச் சின்னாபின்னப்படுத்திச் சாகடிப்பார்; கொரோனாவில் சிக்கிச் சித்திரவதைக்குள்ளாக்கிப் பரலோகம் போகவைப்பார்; டெங்குவில் வதைபட்டு, ‘டிங் டிங் டிங்’குன்னு சாவு மணி அடித்து யமலோகம் அனுப்புவார். மனிதர்களை இத்தனைக் கொடூரங்களுக்கு உள்ளாக்கும் கொலைகாரக் கடவுளை எதற்கு வணங்கவேண்டும்?

செத்தவர்கள் எல்லோரும் ராமனைச் செருப்பால் அடி அடி அடி என்று அடித்தவர்களா? நிலச்சரிவில் புதையுண்டவர்கள் எல்லாம் பிள்ளையாரை முச்சந்தியில் போட்டு உடைத்தவர்களா? ‘அர்த்தமுள்ள பொந்து மதம்’ எழுதிய கண்ணதாசன் ஏன் 56 வயதிலேயே செத்தார்? ரமண மகரிஷி ஏன் புற்று நோயால் புட்டுகிட்டாரு? சங்கராச்சாரிக்கு முன்னாடி இருக்கிற‌ இன்டிகேட்டர் ஏன் அவுட் ஆகி கண்ணாடி போட்டுக்கொண்டார்?

மேற்கண்ட அவலங்களைத் தடுக்க முடியாது என்றால் கடவுள் எதற்கு? 


அவர் கையில் சூலம் எதற்கு? முதுகு சொறியவா?


தட்டையான வேல் எதற்கு? ஆம்லெட்டைத் திருப்பிப் போடவா?#

                      *   *   *   *   *

*** மேற்கண்டது ‘கடவுள் நம்பிக்கை தேவையா?” என்னும் கேள்விக்கு அழகிரிசாமி அவர்கள் அளித்த பதில். அவருக்கும் ‘Quora'வுக்கும் நம் நன்றி.


முக்கிய அறிவிப்பு:

இந்து மதத்தை மட்டும் சாடுவதாக எவரும் மனக்கொதிப்புக்கு உள்ளாக வேண்டாம். இஸ்லாம், கிறித்தவம் என்று பிற மத மூடத்தனங்களையும் நாம் விட்டுவைப்பதில்லை.